நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜெயலலிதா: 40 நிமிடம் போராடிய டாக்டர் ரமா!

சென்னை: நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவைக் காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா தொடர்புடைய பலரும் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இந்நிலையில்,  ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த மருத்துவர் ரமா நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

2014 டிச.4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு தாம் சிகிச்சை அளித்ததாக ரமா கூறியுள்ளார். மேலும், நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்.