ஆளுநர் புரோஹித் பங்கேற்கும் ’ஸ்வாமி தேசிகன் 750வது திருநட்சத்திர விழா’

சென்னை: ஸ்வாமி வேதாந்த தேசிகன் 750வது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் “தேசிக பக்தி ஸாம்ராஜ்யம்” என்ற தலைப்பில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் இன்றைய இறுதி நாள் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு சிறப்பு செய்கிறார்.

இன்றைய கலாசார கலை நிகழ்ச்சிகள் மூன்றாம் நளில்,  மாலை 4.45க்கு – “தேசிக திவ்ய சரிதம் – வில்லுப்பாட்டு”  நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30க்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் “தேசிக கீதம்” – ஸ்வாமி தேசிகனை பற்றிய ஸ்தோத்திர குறுந்தகடு வெளியிட்டு, “ஏபிஎன் ஸ்வாமி எழுதிய ஸ்ரீ ராமானுஜ திக்விஜயம் நூலை வெளியிட்டு, சாதனையாளர்களுக்கு விருது அளித்து சிறப்பு உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மோகன் பராசரன் P.N.K ஸ்ரீரங்கநாதன், டெக்கான் மூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சாதனையாளர்கள் பத்மஸ்ரீ பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன் (பிளாஸ்டிக் சாலை அறிமுகப்படுத்தியவர்), காவேரி ரங்கநாதன் (காவேரி மேலாண்மை
வாரியம் அமைய பாடுபட்டவர்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.