சென்னை வந்து சென்ற அமித் ஷா; மொழி பெயர்ப்பு சர்ச்சைகளால் விழி பிதுங்கும் ‘உறவு’

இன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, “ஊழலற்ற நிர்வாகமே மாற்று” என்பது தான் அமித் ஷா அவர்கள் தெரிவித்த கருத்தின் விளக்கம் என நான் கருதுகிறேன்.... என்று கூறியுள்ளார். 

திங்கள் கிழமை சென்னை வந்து கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. அப்போது தொடங்கிய சர்ச்சைகள் இன்று வரை ஓயவில்லை.

அமித் ஷாவுக்கு எதிர்ப்பு கிளப்பின திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். தொடர்ந்து அமித் ஷாவின் பேச்சை மொழி பெயர்த்த போது, மைக்ரோ இரிகேஷன் என்பதை சிறு நீர்ப்பாசனம் என்று ஹெச்.ராஜா சொன்னதை சிறுநீர்ப் பாசனம் என்று சொன்னதாக சர்ச்சை கிளப்பினார்கள்.

அடுத்து, அமித் ஷா ஊழல் குறித்துச் சொன்ன சொல், ஆளும் அதிமுகவிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக., ஊழல் கட்சி என்றும், ஊழல் அரசு என்றும் அவர் சொன்னதாக அதிமுக.,வில் புயல் அடிக்கிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த சுமுக உறவு கேள்விக்குறியாகி இருப்பதாக அரசியல் மட்டத்திலும் ஊடகங்களிலும் விவாதங்கள் எழும்பியுள்ளன.

இந்நிலையில், அமித் ஷா ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்று சொன்னார். இது மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட சிறு குறை என அடுத்த  ‘சிறு’ தொற்றிக் கொண்டது. இதனை கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெளிவாக்கியுள்ளார்.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் குறிப்பிட்டபோது, இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்த அமித் ஷா @AmitShah இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தியுள்ளார்.

1. இன்றுள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே திட்டமிடுகிறது என்ற யதார்த்த நிலை

2. தேர்தலுக்குப் பின் அமைய உள்ள, பா.ஜ.க. அங்கம் வகிக்கும் ஆட்சி குறித்த தெளிவு

தமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியோ, அரசோ மட்டும் ஊழல் எனக் குறிப்பிடவில்லை. காரணம் ‘தி.மு.க + காங்கிரஸ்’ மாற்றல்ல; அவர்களும் ஊழல்வாதிகள்; தேர்தலில் வாக்கு பெற பணம் தரும் விபரீதம் அதிலும் அதிகம். எனவே ‘மாற்று என்பது தனிநபரோ, கட்சியோ, கூட்டணியோ அல்ல. ஆட்சியின் தன்மையும், நடைமுறையும் மாற வேண்டும்.

இன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, “ஊழலற்ற நிர்வாகமே மாற்று” என்பது தான் அமித் ஷா அவர்கள் தெரிவித்த கருத்தின் விளக்கம் என நான் கருதுகிறேன்…. என்று கூறியுள்ளார்.

ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும், இப்போது எழுந்துள்ள புயல் அடங்க இன்னும் சிறிது காலம் ஆகும் போலும்!