7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்! மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’ !

கடந்த மே, ஜூன் இரு மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. சில நேரம், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத் தளமான டுவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமாக சித்திரிக்கப் படுவதும் உண்டு. இதுபோன்ற கருத்துகள் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தனர். இது போல் அண்மையில் இந்தியாவிலும் மோடி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக மோசமான கருத்து மழை பொழிந்து வந்தார்கள் பலர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகள், விரும்பத்தகாத கருத்துகளைப் பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்தது. இதன்படி தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் பலர் பணி அமர்த்தப்பட்டார்கள்.

டிவிட்டரில் ஒருவரை ஃபாலோ செய்து, பின்னர் நிறுத்திக் கொண்டவர்களின் கணக்குகளையும், முடக்கப்பட்ட கணக்குகளையும் நீக்கிவிட்டு சரியான எண்ணிக்கையில் ஃபாலோயர்ஸைக் காட்ட முயன்றது. இதனால், பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், விஐபி.,க்களும் வெள்ளிக் கிழமை ஒரே நாளில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியாவில் நம்பர் ஒன் என்ற வகையில் இருந்த பிரதமர் மோடியின் டிவிட்டர் பாலோயர்ஸ் கணக்கில் இன்று ஒரே நாளில் சுமார் 2,84,746 பாலோயர்ஸ் நீக்கப் பட்டனர். மோடிக்கு டிவிட்டரில் 4 கோடியே 34 லட்சம் பாலோயர்ஸ் உள்ளதாக அண்மையில் டிவிட்டர் நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இது போல், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சுமார் 4 லட்சம், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர். டுவிட்டர் சமூகத் தளம் 77 லட்சம், ட்விட்டர் சி.இ.ஓ., ஜேக் டார்ஸே 2 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

இந்திய அளவில் ஃபாலோயர்ஸ் இழந்தவர்கள்…
ராகுல் காந்தி – சுமார் 17 ஆயிரம்
பிரதமர் மோடி அலுவலக ம் – ஒரு லட்சத்து 40 ஆயிரம்
சசி தரூர் – சுமார் ஒன்றரை லட்சம்
சுஷ்மா சுவராஜ் – சுமார் 74 ஆயிரம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் – 91,555
அமித் ஷா – 33,363 ஃபாலோயர்ஸையும் இழந்துள்ளனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.