திருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு வைபவத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு வைபவம், இந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி இதற்கான அங்குரார்ப்பண பூஜைகளும், 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை சம்ப்ரோக்ஷண நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று, அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தெரிவித்தார்.

இதை முன்னிட்டு, அடுத்த மாதம் 9-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17-ஆம் தேதி காலை 6 மணி வரை பெருமாளை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், திருப்பதியில் இருந்து திருமலைக்கான போக்குவரத்துக்கும், மலைப்பாதையில் செல்வதற்கும் அனுமதியில்லை என்றும் கூறினார்.