உலகக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்

#உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: 20 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி, குரேஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பிரான்ஸ் அணிக்காக கிரீஸ்மேன், போக்பா, எம்பப்பே ஆகியோர் கோல் போட்டனர். ஒரு ஓன் கோல் போடப்பட்டது.

குரேஷியா அணிக்காக பெர்சிக், மன்சுகிச் ஆகியோர் ஆறுதல் கோல் போட்டனர்.

இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்று சாதனை படைத்தது.