October 22, 2021, 12:32 pm
More

  ARTICLE - SECTIONS

  உள்நாட்டு போர் ஏற்படும்: மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

  11 June23 Mamtha - 1

  புது தில்லி: தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் நாட்டு மக்களை பிரித்தால் உள்நாட்டுபோர் வெடிக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  வங்காள தேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய வர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை.

  குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப் பட்டுள்ளன.

  மத்திய அரசின் இந்த முயற்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று தில்லிக்கு வந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் மக்களை மத்திய அரசு பிரித்தாளுகிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு நாட்டில் உள்நாட்டு போருக்கு வழிஏற்படுத்தும். ரத்த ஆறு ஓடும் என்றார்.

  அசாம் மாநில விவகாரம் தேசிய அளவில் எதிரொலித்து வருகிறது. 40 லட்சம் பேர் என்பது பெரிய அளவு என்றும், அவர்கள் அகதிகளாக எங்கே போவார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த பலர் இது தொடர்பாக அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், மம்தாவீன் கருத்து  குறித்து சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஓட்டு வங்கியை மனதில் கொண்டு செயல்படும் அரசியல் தலைவர்களை முதலில் களையெடுக்க வேண்டும். மம்தா பேகம் வண்டவாளம் தண்டவாளம் ஏறி வருகிறது. இவரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும். சட்ட விரோதமாக வந்தவர்களை வெளியேற்றுவதில் என்ன தவறு உள்ளது. அவர்களுக்கு அவர்கள் மதம் சார்ந்த நாடுகள் எவ்வளோவோ உள்ளன அங்கே போக வேண்டியது தானே. அரபு நாடுகளே வங்கதேசிகள் குணம் அறிந்து விசா கொடுப்பதில்லை. தவிர, அரபு நாடுகளால் புறக்கணிக்கப்படுபவர்கள் வங்கதேசிகள் மற்றும் பாகிஸ்தானியர்.

  ஒன்று புரியவில்லை. பதவி வெறியும் ஆணவமும் கொண்ட இவர் முதல் அமைச்சரா இல்லை தேசத்துரோகியா. அருமையான மேற்கு வங்கத்தை நாசமாக்குவேன் என்கிறார்.  மத்திய அரசும் எல்லை பாதுகாப்புப் படையும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் இவர் என்ன தீமை வேண்டுமானாலும் செய்வார். முன்னெச்சரிக்கை தேவை.

  எல்லா நாடுகளும், அந்த நாட்டில் முறையாக குடியுரிமை பெறாதவர்களை வெளியேற்றுகிறது. இங்குள்ள அரசியல் வாதிகள்தான் வெளி நாட்டிலிருந்து ஊடுருவியவர்களுக்கு துணை போகிறது. 5 லட்சம் காஷ்மீர் மக்களை துரத்தியபோது வாய்திறக்காதவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்களுக்கு ஆதரவளிக்க போராடுகிறார்கள்.

  இவர்களால்தானே நீங்கள் இத்தனை நாட்களாக தேர்தலில் வெற்றி பெற்று வந்தீர்கள். இப்போது அதைக் கண்டுபிடித்ததும் துள்ளுகிறார்… அரசியலில் இனி இவருக்கு இறங்குமுகம்தான்… என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

  1 COMMENT

  1. மம்தா பேசுவது சரிஇல்லை. ஒரு முதல்வர் எப்படி உள்நாட்டு போர் வெடிக்கும் என்று கூறலாம். அதுவும் எதிர்கட்சிகள் இவரை பிறதமவேட்பாளர் என்று கூறிவருகின்றனர். கவனிக்கவேன்டியவிஷயம்.

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,576FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-