10 அடிக்கு மேல் விநாயகருக்கு சிலை வைக்கக் கூடாது! தமிழக அரசு உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன்  விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான  கட்டுப் பாடுகளை தமிழக  அரசு  விதித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 13-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், சிலைகளை கரைப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதன்படி, சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர், தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினரின் தடையில்லா சான்றுகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்பிக்கவேண்டும்!