சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்!  என்று கூறினார் எச்.ராஜா.

திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர். செந்தில்நாதன் பாரதீய ஜனதா கட்சியில் எச்.ராஜா அவர்கள் முன்னிலையில்  இன்று இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா…. இரண்டு வலிமையான ஆளுமைகள் தமிழகத்தில் இல்லை! மக்கள் மனதில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய சூழ்நிலையில் ஒன்லி சூப்பர் ஸ்டார் நரேந்திர மோடி தான்!

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க பயனாளிகள் 22 ஆயிரம் பேர் உள்ளனர்! சிலை கடத்தல் வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டதற்கு நான் காரணமல்ல. இந்து அறநிலையத் துறையில் 628 அயோக்கியர்கள் உள்ளனர். தமிழகத்தில் 10,000ஆயிரம் இந்துக் கோயில்களைக் காணவில்லை!

கந்தநல்லூர் பசுதீஸ்வரர் கோவிலில் உள்ள சிலை காப்பகத்தில் உள்ள சிலைகள் திருடப்பட்டுள்ளன இதனால் 300 கோடி அரசுக்கு இழப்பு! என்று கூறினார் ஹெச்.ராஜா.