கருணாநிதியோடு கடைசி!: தமிழகத்தில் இந்த கௌரவம் இப்போது எவருக்கும் இல்லை!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியுடன் தலைவர்களுக்கான இந்த  கௌரவம் தமிழகத்தில் நின்று போனது. அது இசட் பிளஸ் பாதுகாப்பு கௌரவம்தான்!

கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் (Z Plus) பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வேறு எந்தத் தலைவருக்கும் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப் படுவதில்லை.

அத வகையில் கருணாநிதியுடன் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு பெறும் தலைவர்கள் எவரும் தமிழகத்தில் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!