சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்: ஹெச்.ராஜா

குற்றாலம்: சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார்.

குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது…

கூடங்குளத்தில் என்ன நடந்தது என்று மன்மோகன் சிங் தெளிவாக நாட்டாளுமன்றத்தில் சொன்னார். இந்தத் திட்டம் வரக் கூடாது என்று அமெரிக்காவில் பணம் பெற்று என்.ஜி.ஓ,க்கள் நடத்துகிறார்கள். வெளிநாட்டுக்கு கூலிக்கு மாரடிக்கிறவர்களுக்கு எதிராக வழக்கு போட்டால் வாபஸ் வாங்க வேண்டுமா?

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்தது என்ன? தை பிறந்தால் வழிபிறக்கும் ஸ்டெர்லைட் திறந்தால் வேலை கிடைக்கும் என்று பேனர் வைத்து கம்யூனிஸ்ட்கள்..

இந்தத் தீய சக்திகளை கைது செய்தது சரிதான். இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டதால், ஒரு கிலோ தாமிரம் 625ல் இருந்து 875 விற்கிறது. சாதாரண விவசாயியின்மோட்டார் பம்பு செட் காயில் கூட தாமிரத்தை நம்பித்தான் இருக்கிறது. எனவே இந்த நாட்டை சுடுகாட்டாக்கி இளைஞர்களை வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்க விடுவதற்காகம், எட்டு வழிச்சாலையை எதிர்ப்பேன், எய்ம்ஸ் மருத்துவமனையை எதிர்ப்பேன், தொழிற்சாலையை எதிர்ப்பேன் என்று சொல்பவர்கள் நிரந்தரமாக இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. நான் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நிரந்தரமாக உள்ளே வையுங்கள். தமிழக இளைஞர்களுக்கு வேலை வேண்டும், தமிழகத்துக்கு அமைதி வேண்டும்..
– என்று பேசினார்.