spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்செங்கோட்டையில் வளர்ந்து வரும் இந்து பயங்கரவாதம்!

செங்கோட்டையில் வளர்ந்து வரும் இந்து பயங்கரவாதம்!

- Advertisement -

செங்கோட்டைப் புரட்சி – மெதுவாக சுற்று வட்டாரத்திலும் பரவி… நெல்லை மாவட்டம் முழுதும் பரவி.. தமிழகம் முழுதும் ஆக்கிரமிக்க வேண்டும் என்கிற குரல்கள் இப்போது ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன.

உண்மையில் இது காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் போலானதுதான்!

1911ல் வாஞ்சிநாதனின் வீரச் செயல் நிகழ்ந்த பின்னர், செங்கோட்டை நகரில் நடந்த அடக்குமுறைகள் எண்ணில் அடங்காதவை. அந்தக் கொடூரங்களுக்குப் பின்னர் மக்கள் அமைதி விரும்பிகளாகவே மாறினர்.

1956 மொழிவாரி மாநிலப் பிரிவின் போதும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலைமறியல், ஒத்துழையாமை, வரி கட்டாமை என ஜனநாயக அறப்போரையே செங்கோட்டை மக்கள் முன்னெடுத்தனர்.

கடந்த 25 வருடங்களில் செங்கோட்டை, மேலூர், விஸ்வநாதபுரம் பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாத சிந்தனை கொண்டவர்களின் தொடர்பால் கூடிய ஆக்கிரமிப்பு அதிகரித்து வந்துள்ளது.

தென்காசியில் அம்மன் சந்நிதிக்கு முன்னே சாதாரண வீட்டுக் கட்டடத்தை மசூதியாக்கி கால் நூற்றாண்டுக்கு முன் தூபம் போட்டார்கள். தொடர்ந்த பிரச்னைகளால்… இன்று இஸ்லாமிய மயமாக்கம். வர்த்தகம் பெரும்பாலும் இஸ்லாமியர் கைகளில். குறிப்பிட்ட நிறுவனங்களின் இந்தப் பகுதிக்கான ஒட்டுமொத்த டீலர்ஷிப்பை தாங்கள் பெற்று, இந்து வியாபாரிகளுக்கு சப் டீலர்ஷிப் கொடுக்கும் போதும், சிறு வர்த்தகர்களுக்கு கொடுக்கும் போதும், பாகுபாடு பார்ப்பது, கடன் கால அளவை குறைப்பது, இஸ்லாமிய வியாபாரிகளுக்கு கேஷ் டிஸ்கவுட்ன் போல் கடன் டிஸ்கவுண்ட் சதவீதம் கொடுப்பது போன்ற பல்வேறு வழிகளில் ஊக்கப்படுத்தி, இந்து வியாபாரிகளை சிரமப் படுத்தி என பாகுபாடு பார்க்கப் படுவதால் பலர் இப்போதும் கொதித்துப் போயுள்ளனர்.

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெற்ற அனைத்து ஹிந்து சமுதாய மக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம்…

செங்கோட்டை நகரிலும் இஸ்லாமிய வர்த்தக ஆக்கிரமிப்பாளர்களால் பாதிப்பை சந்தித்தவர்கள், இப்போது ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளனர். அதற்கு காரணமானவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத சிந்தனையாளர்களால் தூண்டப் பெற்ற இளைஞர்கள். அவர்களின் மூளைச் சலவையில் சிக்கிக் கொண்ட இஸ்லாமியப் பெண்கள் சிலர்! கல்லெறிந்து கலவரம் தூண்டியவர்கள் குறித்த வீடியோக்கள் இப்போது காவல் துறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோணத்தில் மீண்டும் மீண்டும் போட்டு பார்க்கப் பட்டு வருகிறது.

விநாயகர் மீது கல்லெறிந்து உடைத்து தங்கள் சமுதாயப் புறக்கணிப்புக்கு தாங்களே பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய இளைஞர்கள்.

இன்று இஸ்லாமியர் நடத்தும் பெரும் கடைகளுக்கு உள்ளூர் இந்துக்கள் செல்வதில்லை. வெளியூர் நபர்கள், சுற்றுலா வருபவர்கள் மட்டுமே செல்கின்றனர்.

செங்கோட்டை பார்டர் புரோட்டா கடைகளுக்கு உள்ளூர் இந்துக்கள் செல்வதில்லை. குற்றாலம் வருபவர்களின் வாகனங்களே நிற்கின்றன. அங்கு அதிகரித்து வரும் வாகன நெரிசலால், பார்டர் முழுதும் புரோட்டா கடைகளாகி, அங்கும் இடம் போதாமல் செங்கோட்டை கீழ பஜாரில் சிறு இட்லி கடைகள், மளிகை கடைகள் உள்ள இடத்திலும் புரோட்டா கடையை அவர்கள் திறந்து வைக்க.. அதனால் பாதிக்கப் பட்ட சிறு இட்லி கடைகள் காலை நேரத்துடன் தங்கள் வேலையை முடித்துக் கொண்டு கடையைப் பூட்டிக் கொண்டார்கள். இப்போது இங்கும் புறக்கணிப்பு…!

எனவே இதன் உள் ரகசியம் … விநாயகர் மீது கல்லெறிந்து சேதப் படுத்தியது என்பது ஓர் அடையாளம். அதன் பின்னே அனைத்து ஹிந்து சமுதாய மக்களாக ஒன்று திரண்டது, மத உணர்வைத் தாண்டிய, வாழ்வியல் அடக்குமுறை! வர்த்தக அடக்குமுறைக்கு எதிரான மனோபாவம்! மேல பஜாரில் இஸ்லாமியரின் மசூதியை அடுத்த கட்டடத்தில் பல கடைகள். அதில் ஒன்று கூட இந்துக்கள் நடத்தும் கடைகள் இல்லை. ஆனால், செங்கோட்டை கீழ பஜாரில் இஸ்லாமியர்கள் இல்லாத பகுதியில் பேக்கரி, புரோட்டா கடை என திறந்து பெருமளவு முதலீடு செய்து கவர்ச்சிகரமாய் வர்த்தகம் செய்வதில் பாதிக்கப் பட்டவர்கள் இந்தப் புறக்கணிப்பில் சேர்ந்து கொண்டார்கள்.

சொல்லப் போனால், வர்த்தக பாதிப்பு என்பது ஒரு தரப்புக்கு மட்டும் இல்லை… இரு தரப்புக்குமேதான்! 144 தடை உத்தரவு விலக்கப் பட்ட பின்னரே ஓரளவு வர்த்தகத்தை எதிர்பார்க்கலாம் என்று கருதுகின்றனர் நகரின் இரு தரப்பு வர்த்தகர்கள்!

செப்.24 திங்கள் கிழமை செங்கோட்டையில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இரு தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை…

நேற்று செங்கோட்டையில் ஒரு அமைதிக் கூட்டம் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. தங்கள் வர்த்தகம் பாதிப்பு அடைந்ததில் பலரும் அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார்கள். ஊரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர அரசு அதிகாரிகள் மெனக்கெடுகிறார்கள். தாசில்தாரும் காவல் அதிகாரிகளும் சம்பந்தப் பட்ட பெரியவர்களிடம் பேசி, இளைஞர்களை பயங்கரவாதிகள் தொடர்புக்குச் செல்லவிடாமல் பாதுகாக்க வேண்டும்; பிரிவினை எண்ணம் வந்துவிடாமல் அமைதியாக இருக்க, இளைஞர்களை நல் வழிப் படுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், பதிலுக்கு பதில் என இரு தரப்பும் முண்டிக் கொண்டு செல்வதால் பாதிப்பு அடைவது என்னவோ இளைஞர்களின் எதிர்காலம்தான்!

விநாயகர் மீது இஸ்லாமியர்கள் கல்லெறிந்த மறுநாள் நடந்த அனைத்து இந்து சமுதாய மக்கள் கூட்டத்திலேயே, இஸ்லாமியருடன் இனி வர்த்தக உறவு கிடையாது என்று முடிவு எடுத்த போது, இஸ்லாமியர்களில் சில பெரியவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார்கள். இது ஊரைப் பிளவுபடுத்தும். நாங்கள் எப்படி இங்கே நிம்மதியாக வாழ்வது என்று?! அதற்கு ஆட்சியர், அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. அதற்கு காரணம் நீங்கதானே என்று கூறி ஒதுங்கி விட்டார்.

ஆனால் அதன் தொடர்ச்சியோ என்னவோ… நேற்று அதிகாரிகள் ஒரு கூட்டத்தைக் கூட்டி, இரு சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து செல்லுங்கள். இது அமைதியான ஊர். இரு தரப்பினரும் மாமன் மச்சான், அண்ணன் தம்பி என பழகிய இடம். இது போல் இனி பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சமுதாயப் பெரியவர்கள் கடமை என்று பேசினார்கள்.

அந்தக் கூட்டத்தில், இஸ்லாமியர் தரப்பில் இருந்து, அடுத்த வருட விநாயக சதுர்த்தி ஊர்வலத்துக்கு நாங்களே அழைப்பு விடுக்கிறோம். நீர் மோர் பந்தல் அமைக்கிறோம். எங்க சமுதாயம் சார்பாக வரவேற்பு கொடுக்கிறோம் என்றெல்லாம் பேசினார்கள். இதை மனமாற்றம் என்று எடுத்துக் கொள்வதை விட, காலத்தின் நெருக்கடி என்றுதான் பார்க்கத் தோன்றுகிறது.

குறிப்பாக, இந்த விவகாரத்தில் ஒன்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியாக வேண்டும். இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியது, வீர விநாயகர் கமிட்டி என அனைத்து இந்து சமுதாய மக்கள் கூட்டமைப்புதான். இந்து முன்னணி சார்பில் தனியாக விநாயகர் ஊர்வலம் ஓரிரண்டு விநாயகர் சிலைகளுடன் அமைதியாக எந்தப் பிரச்னையும் இன்றி காலையே முடிந்துவிட்டது.

இந்த முறை போலீஸில் அனுமதி பெற வீர விநாயகர் கமிட்டியில் இருந்து தொடர்பு கொண்டபோது, நெல்லை மாவட்டத்தில் மற்ற இடங்களில் இருந்த அளவு நெருக்கடி இல்லாமல், காவல் துறை சொன்ன கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக் கொண்டவர்களுக்கு  செங்கோட்டை காவல் துறையில் இருந்தே தீயணைப்புத் துறை, மின்வாரியம் உள்ளிட்ட அரசுத் துறைகளுக்கு பரிந்துரை செய்து, எந்தச் சிக்கலும் இல்லாமல் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

வீர விநாயகர் கமிட்டி ஊர்வலத்தில் இந்து முன்னணி, பாஜக., மட்டுமே இடம் பெறவில்லை. அனைத்து சமுதாய இந்துக்கள் என்பதால், புதிய தமிழகம் கட்சிக் காரர்களில் இருந்து அதிமுக., திமுக.,வில் இருக்கும் கட்சியினர் வரை அனைவருமே கலந்து கொண்டனர். எனவே இந்த விவகாரத்தில் இந்து முன்னணியோ பாஜக.,வோ நேரடியாக வரவில்லை என்றாலும், பாஜக.,வினர் கணிசமான அளவில் இதில் இருந்தார்கள். இந்து மக்களின் பாதுகாப்புக்கான கட்சி என்றால், அந்த நேரம் பாஜக., உடனடியாகக் களம் இறங்கி பேசியிருக்க வேண்டும். இருப்பினும், பெயர் அடிபடுவதும் காவல் துறையால் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதும் இந்து முன்னணி, பாஜக.,வினரே!

தங்கள் மத உணர்வுகள், வாழ்வியல் சூழல், வர்த்தகம், வழிபாட்டு உரிமை என அனைத்தும் பாதிக்கப் பட்டுள்ளதால், அனைத்து இந்து சமுதாய மக்களுமே சேர்ந்துதான் இத்தகைய புறக்கணிப்பு முடிவை எடுத்தார்கள். வாழு வாழவிடு என்ற தத்துவத்தை இரு தரப்பும் கடைப்பிடிக்காதவரை அமைதி முயற்சிகள் பெரிதும் கை கொடுக்காது! ஏற்கெனவே 15 ஆண்டுகள் முன் இது போல் பிரச்னை வந்து, அப்போதும் இதே போல் புறக்கணிப்பு முடிவு எடுத்து, பின்னர் நடந்த அமைதி நடவடிக்கைகளால் செங்கோட்டை நகர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. இப்போதும் அத்தகைய சூழல் திரும்ப மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால்… இதைத்தான் இந்து பயங்கரவாதம் என்கிறார்கள் இஸ்லாமியர்கள். இந்துக்கள் எந்தக் காலத்திலும் வெடிகுண்டையும் கத்தி அரிவாளையும் ரத்தம் பார்க்கத் தூக்குவதில்லை! நிலைமை கைமீறிப் போகும் போதுதான், இது போன்ற சத்யாக்கிரகத்தை, ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தத் தீர்மானிக்கிறார்கள். அச்சுறுத்துகிறார்கள். ஆக… இதன் பெயரே இந்து பயங்கரவாதம்!

4 COMMENTS

  1. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இது தான் யதார்த்தம் மேலும் திராவிட கட்சிகளுக்கு தேர்தல் பயம் வந்து விட்டதும் அதனால் அவர்கள் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என்று பயந்து அவர்களின் மறைமுக அழுத்தமும் இந்த அமைதி பேச்சுவார்த்தையின் பின்னனியில் இருப்பது தெளிவாக தெரிகிறது

  2. கதற, கதற அடிக்கும் ஹிந்துக்கள்

    கதறி அழும் இசுலாமியன்கள்…..

    ஹிந்து ஒற்றுமை ஓங்கட்டும்……

  3. Dravidan yenrale Hindu yethiri – all of know this, these leaders will not wish for pillar chathurthi , but will go and drink OC kanchi from mullahs and go behind church – because they provide kickbacks money etc, i hope Tamil people will wake up to this nonsense!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe