November 30, 2021, 7:46 am
More

  பெண்ணியம் பேசுவோரே… கவிஞர் விவகாரத்தில் கண்ணியம் இழந்ததேன்!

  சமூக வலைத்தளத்தில் யாரோ ஒரு பெண் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் பொறுப்பு கவிஞர் வைரமுத்துவுக்கு இருக்கிறது .

  vairamuthu harvard - 1

  பெண்ணியம் பேசும் போராளிகளே…. கவிஞர் விவகாரத்தில் கண்ணியம் இழந்ததேனோ?

  தமிழக திரைத்துறையில் திரைப்பட பாடலாசிரியர், எழுத்து கவிஞர் வைரமுத்து ஒரு பெண்ணை கட்டி அணைத்து, முத்தமிட்டார் முத்தமிட முயன்றார் என ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் குற்றம் சுமத்தி இருக்கிறார் .

  பொதுவாக சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு கவிஞரை பற்றி இந்தக் குற்றச்சாட்டு வந்தவுடனேயே திரு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

  ஆனால் இதுவரைக்கும் அவர் வாய் மூடி மௌனியாக வே மௌன விரதத்தில் இருக்கிறார்.

  vairamuthu issue tweet - 2

  திரைப்பட கவிஞர் வைரமுத்து உண்மையான தமிழச்சி ஆண்டாள் தாயை யாரோ ஒருவன் ஒரு ஆய்வுக் கட்டுரையே சமர்ப்பிக்காத, ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டதாக ஒரு சொல்லை குறிப்பிட்டு கோடானுகோடி இந்துக்களுடைய மனதை புண்படுத்தி னார்.

  நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் வருத்தம் தெரிவித்து விட்டேன் என்றெல்லாம் வீர வசனம் பேசிய இந்த வைரமுத்து அன்று செய்த பாவத்திற்கு என்னவோ இன்று இவரை ஆட்டுவிக்கிறது.

  ஆண்டாள் தாயை அவதூறாக பேசிய வைரமுத்து அவர்களுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்தது. வைரமுத்துவுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா அவர் தன் சொந்தக் கருத்தையா சொன்னார் ?

  யாரோ ஒருவர் சொன்ன கருத்தை தானே அவர் எழுதினார் என்றெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு, வக்காலத்து வாங்கிய கவிஞர் வைரமுத்துவின் கைத்தடிகளும், பெண்ணியம் பேசிய போராளிகளுக்கும் நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம் ,

  இன்று கவிஞர் வைரமுத்துவைப் பற்றி ஒரு பெண்மணி பாலியல் தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார்.

  chinmayi vairamuthu - 3

  சமூக வலைத்தளத்தில் யாரோ ஒரு பெண் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் பொறுப்பு கவிஞர் வைரமுத்துவுக்கு இருக்கிறது .

  தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இதுபோன்று சத்தமில்லாத குற்றங்களை, தொந்தரவுகளை செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து என குற்றச்சாட்டை அந்த பெண்மணி சுமத்தியிருக்கிறார்.

  பொதுவாக கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று சொன்ன பாரதி.

  உதாரணமாக சொல்லக்கூடிய பெண்ணிய போராளிகள் எல்லாம் இன்று வைரமுத்துவுக்கு எதிராக போராட காரணம் என்ன ?

  தமிழக ஆளுநர் ஒரு பெண் பத்திரிக்கையாளரை கன்னத்தில் தடவி விட்டார் என்று தவறான ஒரு செய்தியை அந்த பத்திரிக்கை நிருபர்.

  பதிவிட்ட உடனேயே நான் டெட்டால் ஊற்றி கழுவி இருப்பேன் இப்படியெல்லாம் சொல்லி வலைதளத்தில் பதிவிட்டார் .

  உடனே அனைத்து ஊடக நண்பர்களும் கவர்னர் பாலியல் தொந்தரவு செய்தார் என்று விவாதப் பொருளாக மாற்றி பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு உள்ளான செய்தி நாம் அனைவரும் அறிந்ததே.

  ஆனால் இன்றும் அதே நிலைதான் ஒரு பெருங்கவிஞன் என்று திரையுலகில் அழைக்கப்படக்கூடிய பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்த திரு கவிஞர் வைரமுத்து என எந்த ஊடகமும் விவாதப்பொருளாக இதுவரை மாற்றவில்லையே ஏன்?

  பெண்ணியம் பேசி வீதிக்கு வந்து போராட கூடிய பெண்ணிய காவலர்கள் எங்கே சென்றார்கள்?

  கவர்னருக்கு எதிராக களமிறங்கிய கண்ணியமிக்க கட்சித் தலைவர்களை காணவில்லையே …… அவர்களை தேடி காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்க வா முடியும்?

  திரைப்பட நடிகர் எஸ்வி சேகர் பெண்களை அவதூறாக பேசியதாக முகநூலில் பகிர்ந்த ஒரு செய்திக்காக விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து இன்று வரை மூச்சு விடாமல் பேசியவர்கள் எழுதியவர்கள்

  இன்று வைரமுத்து செய்த செயல் உங்கள் கண்ணில் படவில்லையா ?

  எஸ் வி சேகர் என்றால் ஒரு நீதி… கவிஞர் வைரமுத்து என்றால் ஒரு நீதியா?

  நீதிமன்றத்தை நாடிய நீதி காவலர்களே நீங்கள் எல்லாம் எங்கே தொலைந்து போனீர்கள்?

  வைரமுத்து செய்த இந்த பாலியல் தொந்தரவுக்கு அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்கலாமே,

  ஒன்று மட்டும் தெரிகிறது தங்கள் சிந்தனையில் கொள்கைகளில் வைரமுத்து ஒத்துப்போகிறார் என்கின்ற காரணத்தினால் அவர் செய்ததாக சொன்ன குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள் இந்த கட்சித் தலைவர்கள்.

  விந்தையிலும் விந்தை என்ன தெரியுமா?

  தமிழிலே ஒரு பழமொழி இருக்கிறது.

  ” குதிரை கொள்ளு என்றால் வாய் திறக்கும் கடிவாளம் என்றால் வாய் மூடும் ”

  என்று ஒரு பழமொழி உண்டு . அதே பழமொழி இன்று கவிஞர் வைரமுத்து விஷயத்திலும் பொருந்துகிறது.

  ” கவர்னர் என்றால் வாய் திறப்போம் கவிஞர் என்றால் வாயை மூடுவோம்”

  இது புது மொழி .. போங்கடா நீங்களும் உங்க கருத்து சுதந்திரமும் ………

  போங்கடா நீங்களும் உங்க பெண்ணிய பாதுகாப்பும் ..!

  நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவிட வேண்டுகிறோம் .

  இராம. இரவிக்குமார்
  மாநில பொதுசெயலாளர், இந்து மக்கள் கட்சி தமிழகம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-