November 28, 2021, 5:50 am
More

  தமிழகத்தின் மிகப் பெரும் சக்தியாக வளர்கிறது பாஜக.,! : தமிழிசை பெருமிதம்!

  கம்யூனிஸ்டுகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டார்களா? நன்றாக ஓடிக்கொண்டிருந்த எத்தனையோ தொழிற்சாலைகளை கம்யூனிஸ்டுகள் மூடியுள்ளார்கள். - என்றார்.

  சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆயுத பூஜை கொண்டாடினர் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்…

  தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக வரும்; அதற்கு முதற்கட்டமாக, வெற்றி திருநாளான விஜயதசமியன்று, புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்

  புகார் சுமத்தப்பட்டதால் எம்.ஜே.அக்பர் தார்மீக அடிப்படையில் பதவி விலகியிருக்கிறார்

  தான் களங்கமற்றவர் என்பதை நிரூபித்துவிட்டு எம்.ஜே.அக்பர் மீண்டும் பதவியேற்பார். எம்.ஜே.அக்பர் பதவி விலகியதை மதம் சார்ந்ததாக பார்க்ககூடாது மானம் சார்ந்ததாக பார்க்கவேண்டும் பாஜக பெண்களுக்கு ஆதரவான கட்சி

  நீதி எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் பினராயி விஜயனை வன்மையாக கண்டிக்கிறேன் காவல்துறையினரை கட்டவிழ்த்து விட்டு, அராஜகத்தை ஏற்படுத்தி குளிர்காய்கிறார் பினராயி விஜயன்

  கேரளா பற்றி எரியும் நேரத்தில் அரபு நாட்டிற்கு சென்றுவிட்டார் பினராயி விஜயன். கம்யூனிஸ்டுகள் கடுமையாக குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள்.

  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக்கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் எழுச்சி கேரளாவில் ஏற்பட்டுள்ளது; கேரள அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களே நுழையக்கூடாது என்று மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கும் நேரத்தில் பெண்களை அனுமதிக்கிறார்கள். தங்களின் இந்துமத எதிர்ப்பை கம்யூனிஸ்டுகள் இவ்வாறு வெளிப் படுத்தி வருகிறார்கள்

  கம்யூனிஸ்டுகளின் மதச்சார்பின்மை ஒருதலைப்பட்சமானது. சபரிமலைக்குள் பெண்களை அனுமதித்தால் மத நல்லிணக்கம் ஆபத்துக்குள்ளாகும். இந்துமதம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் சபரிமலைக்கு பிக்னிக் செல்வது அபாயகரமானது

  உச்சநீதிமன்றம் தான் ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று சொன்னது. மக்கள் எழுச்சி அதற்கு எதிராக இருந்தது. சபரிமலை விவகாரத்திலும் அதுதான் உள்ளது.

  Metoo, he too , you too போன்றதெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் முயற்சி. நான் Me too க்கு முழு ஆதரவு தெரிவிக்கிறேன் எம்.ஜே.அக்பர் வழக்குபோட்டிருக்கிறார். ஆனால் வைரமுத்துவிற்கு வழக்கு தொடுக்கும் திராணியில்லை.. ஆண்கள் we too என்று ஆரம்பிப்பது பெண்ணடிமைத்தனத்தின் ஒரு முயற்சி. வைரமுத்து வழக்குத் தொடுக்காமல் இருப்பது குறித்து வைரமுத்துவை பின்புலமாக வைத்துக்கொண்டு தமிழ் உணர்வாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் பதில் என்ன? எம்.ஜே.அக்பர் விவகாரத்தில், அவர்மீதான குற்றச்சாட்டுகளை பாஜக குழு விசாரிக்கும்

  பெண்கள் வெளியே வருவது ஆரோக்கியமானது.. சின்மயியை பேசச்சொன்னது பாஜகவா? Metoo வை தொடங்கியது பாஜக அல்ல. Metoo வேறு, பெட்ரோல் டீசல் விலை வேறு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்

  விரைவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி பிரதமர் உரிய முடிவெடுப்பார்,

  தமிழினத்தின் அடையாளம் வைரமுத்து என்று கூறும் அதிகாரத்தை சீமானுக்கு யார் கொடுத்தது? பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர் தமிழினத்தின் அடையாளமா?

  ஈரான் மீதான பொருளாதாரத்தடையே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர காரணம் அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையத்திலும் ஆயுதபூஜை கொண்டாடக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது…

  ஆயுத பூஜை ஆயுதங்கள் சார்ந்தது. மதம் சார்ந்தது அல்ல அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை நடைபெறவேண்டும்.

  வெள்ளை மாளிகையிலேயே தீபாவளியை கொண்டாடுகிறார்கள்! மக்கள் தங்கள் பண்பாட்டிற்கும் பழக்கவழக்கத்திற்கும் போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது!

  கம்யூனிஸ்டுகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டார்களா? நன்றாக ஓடிக்கொண்டிருந்த எத்தனையோ தொழிற்சாலைகளை கம்யூனிஸ்டுகள் மூடியுள்ளார்கள். – என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,745FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-