தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்.
புனிதநீராடலுக்காக இன்று காலை அவர் பாபநாசம் வந்திருந்தார்.
இதனிடையே, பாபநாசம் படித்துறையில், புனித நீராட வந்த போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நீரில் மூழ்கினர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பத்திரமாக மீட்டனர்.