spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை!

பம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை!

- Advertisement -

trupti-desai

சபரிமலை விவகாரத்தில், தொடர் போராட்டங்கள் காரணமாக பம்பை பகுதி தொடங்கி, சபரிமலை கோயிலைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தியே தீருவது என்று விடாப்பிடியுடன் அரசு இருப்பதால், அதனை எதிர்த்தே தீருவது என்று இந்து இயக்கங்களும், சபரிமலை ஐயப்ப பக்தர்களும் மல்லுக்கு நின்கின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள  முதல்வர் பிணரயி விஜயன் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பந்தள மகாராஜா குடும்பத்தினர், இளம்பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏற்கெனவே  போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கேரள அரசின் முடிவை எதிர்த்து தற்போது பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனிடையே, நவ.17 ஆம் தேதி, தாம் சபரிமலை செல்ல உள்ளதாக கம்யூனிஸ சமூகப் போராளி திருப்தி தேசாய் அறிவித்தார். அதன்படி, அவர் இன்று காலை கொச்சி விமான நிலையம் வந்தார். இதனால் கொச்சியில்  மேலும் பதற்றம் அதிகரித்தது.

திருப்தி தேசாய் மற்றும் மேலும் 6 பேர் உடன் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சி விமான நிலையம் முன் அதிகாலை முதலே போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதனால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார்.

அவர் அங்கிருந்து வெளியேறவும், ஹோட்டல் அல்லது வெளியிடம் செல்வதற்கும் உதவ டாக்ஸி ஓட்டுநர்கள் எவரும் முன்வரவில்லை. அவருக்கு எந்த ஹோட்டலில் அறைகள் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்ற சூழ்நிலையில், அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப் பட்டார்.

இது குறித்து அவர் கூறியபோது,  சபரிமலை பக்தர்களை குண்டர்கள் என்று திட்டினார். சரணகோஷம் போடுவதாகச் சொல்லி குண்டர்களைப் போல் செயல்படுகின்றனர் என்று அவமதித்தார். மேலும், தாம் ஒன்றும் சபரிமலையின் பக்தர் இல்லை என்றும், தாம் ஒரு சுற்றுலா பயணி என்பதால், இருமுடி கட்டுவதோ, குருசாமியோ தேவையில்லை என்று கூறியிருந்தார். இதற்கும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

News Summery: Devotees who stand to maintain rituals and protest peacefully with chanting prayers have been abused by Trupti Desai as goondas. Trupti responded to medias and told that what all happening outside the airport is goondaism.

“Police had assured complete protection. But even vehicle is not available here.Taxi drivers refuse to come though I had requested them in person. Anyway, I will visit Sabarimala at any cost.” said Trupti Desai.

Trupti had revealed last day that she is not a devotee and she is coming for adventure. She added that she does not have to maintain austerity or require ‘guru swami’ or ‘irumudikkett’. Trupti abused the rituals in her words and her attitude was clear last day itself.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe