Home உள்ளூர் செய்திகள் நிவாரணப் பொருள் லாரியில் இளநீர் போட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்!

நிவாரணப் பொருள் லாரியில் இளநீர் போட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்!

tiruchy college students relief works

இதுதான் வெள்ளந்தி விவசாயிகளின் பண்பாடு. கஜா புயல் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு திருச்சி மாணவ, மாணவியர்கள் நிவராணப் பொருட்களை அனுப்பிய வண்டி திரும்பும் போது, நன்றி பாராட்டும் விதமாக அந்த வண்டியை காலியாக அனுப்பாமல் இளநீர்களை ஏற்றி அனுப்பியுள்ளனர்.

எவ்வளவு தான் வேதனையில் இருந்தாலும், நன்றி பாராட்டுவது விவசாயியின் குணம். இதுதான் தான் விவசாயிகளின் வெள்ளந்தி மனம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்சியில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகள் நிவாரணப் பொருள்களை லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர் என்று அறிந்ததும், அந்த மாணவ மாணவிகளின் உதவும் மனப்பாங்கு விவசாயிகளை என்னவோ செய்துள்ளது. இதன் காரணத்தால் அவர்களுக்கு திருப்பிச் செய்யும் விதமாக, தேங்காய்கள் இளநீர்களை சேகரித்து அவற்றை  அந்த வாகனத்தில் போட்டு அனுப்பி வைத்தனர். இது பார்ப்பவர்கள் உள்ளத்தை மிகவும் நெகிழச் செய்வதாக அமைந்தது!

 

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version