கர்நாடகாவில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் நீரில் மூழ்கி 20 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் நீரில் தத்தளித்தனர். நீரில் தத்தளிக்கும் பயணிகளை மீட்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர்.

மாண்டியாவில் பாண்டவபுரா பகுதியில் இன்று அதிகாலை கால்வாயில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பஸ் முழுவதுமாக நீரில் மூழ்கியது. பயணிகள் வெளியேற முடியாமல் தத்தளித்தனர்.

இதில் குழந்தைகள் உள்ளிட்ட 20 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. பஸ்சிற்குள் சிக்கி உள்ள மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.