லவ் ஜிஹாதில் ஏமாற்றப்பட்டு ஆபிரஹாமியத்துக்கு மாறி, அவதிப்பட்டு, மீண்டும் சநாதன தர்மத்துக்கு வந்த பெண்களில் சிலர் தங்கள் கதைகளை பகிர்ந்திருக்கிறார்கள். இவை நூல்களாக உருப் பெற்று கேரளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆதிரா – ஆயிஷா – ஆதிரா.
ஷ்ருதி – ரஹ்மத் – ஷ்ருதி
சாந்தி – சிலுவை – சாந்தி.
சித்திரா – நஸ்றீன் – சித்திரா… என்ற இந்த நால்வரின் பயணத்தை அழகாக விளக்கியிருக்கிறார்கள்!

காசர்கோடைச் சேர்ந்த ஆதிராவின் புத்தகம் இது. இஸ்லாத்துக்கு லவ் ஜிஹாத் மூலம் மாற்றலாகி, ஆயிஷா என்று பெயர் மாற்றிக் கொண்டு பின்னாளில் மன சங்கடங்களையும் துன்பியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். பின்னர் தான் எவ்வாறு மீண்டும் சனாதன தர்மத்துக்கு திரும்பினேன் என்பது குறித்து ஒரு நூலைப் பதிவு செய்துள்ளார். இந்தப் புத்தகத்தில், தாம் எவ்வாறு இஸ்லாத்துக்கு போதிக்கப் பட்டேன் என்றும், இஸ்லாமிய பழைமைவாதிகளின் கேள்விகளுக்கு நறுக்குத் தெரித்தாற்போல் பதிலளித்த விதமும் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன. தாம் ஹிந்து மதத்துக்கு திரும்பியதால் மகிழ்ச்சியற்ற நிலையில் கொதித்துப் போயிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிரும் வகையில் பதிலளித்திருக்கிறார் ஆதிரா.
ஞான் ஆதிரா – என்ற அவர் எழுதிய நூலில் விலை ரூ.280

ஸ்ருதியாக இருந்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இஸ்லாத்துக்குச் சென்று, ரஹ்மத் ஆகி, அடிபட்டு, அவதிப் பட்டு, சொல்லொணா மன அழுத்தங்களுக்கு ஆளாகி, பின்னர் மீண்டும் சனாதன தர்மத்துக்குத் திரும்பி, ச்ருதியாகவே வாழ்க்கையை மீட்டெடுத்த பெண்ணின் ஆத்மார்த்தமான வாழ்க்கைக் கதை. தாம் இஸ்லாம் குறித்து மதப் பிரசாரம் செய்த மிஷனரி வேலை குறித்தும் தான் மீண்டு வந்த விதத்தையும் இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
புத்தகத்தின் பெயர் – ஒரு பரவர்தனத்திண்டே கத – விலை ரூ..170

மாலே தீவில் நர்ஸ் ஆக பணியில் இருந்த போது, தாம் எவ்வாறு கிறிஸ்துவ மதத்தின் பால் வலுக்கட்டாயமாக இழுக்கப் பட்டு உள்ளே தள்ளப் பட்டோம் என்பதை விலாவாரியாக விவரிக்கிறார் சாந்தி. பின்னர் கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டு, வாழ்நாளை சோகமாகவும் சுகமில்லாமலும் துக்கத்துடனும் போக்கிக் கொண்டிருந்ததையும், தாம் எடுத்த முடிவு தன்னை எந்த அளவுக்கு வெறுமையாக்கியிருக்கிறது என்பதையும் உணர்ந்த சாந்தி பின்னர் மதமாற்றத்தின் கொடூரத்தையும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளைம் ஒரு நூலாகப் பதிவு செய்துள்ளார். தாம் மீண்டுவந்து மனமகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கிய தன்மையை, தாம் மறுபிறவி (புனர்ஜென்மம்) எடுத்த விதத்தை ஒரு நூலாகப் பதிவு செய்துள்ளார்.
புத்தகத்தின் பெயர் ‘புனர்ஜனி’ விலை ரூ.170

சித்ரா என்ற அழகான பெயருடன் வெளி உலகைப் பார்க்க வந்தவர். சுற்றியிருப்பவர்களால் மார்க்சிய சித்தாந்தத்துக்குள் இழுக்கப் பட்டவர். தொடர்ந்து அருகில் இருந்த இஸ்லாமிய சுற்றுப் புறம் அவரை அதற்குள் இழுத்து கபளீகரம் செய்தது. இஸ்லாத்துக்கு எளிதில் கவர்ந்திழுக்கப் பட்டார். நஸ்ரின் என பெயர் மாற்றமும் பெற்றார். பின்னாளில் உண்மை நிலை உணர்ந்தார். தாம் ஏன் இஸ்லாத்தில் இழுக்கப் பட்டோமோ என்று ஒவ்வொரு நாளும் மாய்ந்து மருகிப் போனார். தாம் இஸ்லாத்தில் இருந்த போது சந்தித்த கொடூரங்களையும் துக்கங்களையும் ஒரு நூலாகப் பதிவு செய்துள்ளார். தாம் இருட்டில் தள்ளப் பட்டிருந்ததையும், ஹிந்து மதமே தனக்கு மீண்டும் ஒரு ஒளிக் கீற்றாய்த் தென்பட்டதையும் உணர்ந்து, இந்த நூலை எழுதியுள்ளார்.

புத்தகத்தின் பெயர் – இருளின் நின்னு வெளிச்சதிலேக்கு – விலை ரூ.150

கேரளத்தின் அர்ஷ வித்யா சமாஜம், இந்த நூல்களை வெளியிட்டுள்ளது. (+91 8943006350 / 9020078899)

அர்ஷ வித்யா சமாஜத்தின் தள முகவரி… https://www.arshaworld.org/

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...