தமிழக எதிர்ப்பையும் மீறி… மேகதாதுவில் அமைச்சர் ஆய்வு!

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்

மேகதாதுவில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆய்வு நடத்தி வருகிறார். 

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை  கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாகவே இந்தச் செயல் கருதப் படுகிறது. காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் அணையைக் கட்ட அதிகாரபூர்வமாக கர்நாடக அரசு தனது ஆய்வை தொடங்கியுள்ளதாகவே இந்தச் செயல் பார்க்கப் படுகிறது.

பொதுப்பணித்துறை, வனத்துறை, வல்லுநர் குழுவுடன் நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும், மேகதாது தொடர்பான  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது!