spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சென்னைதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது! நாம்தான் போராட வேண்டும்!

திருநீர்மலை… அரசுத் துறை காப்பாற்றாது! நாம்தான் போராட வேண்டும்!

- Advertisement -
Thiruneermalai 20

திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும், மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.

108 திவ்ய தேசங்களில் 61வது இது. இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு
பெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம்.

இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கொண்டது. வருட வருமானமே கோடிகளை தாண்டும். 3 வருடம் முன் வரை பரம்பரை அறங்காவலர் கண்காணிப்பில் திவ்யமாக நிர்வகிக்கபட்டு வந்தது. தற்போது அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாக அதிகாரி பி.சக்தி கவனித்து (கபளீகரம்) செய்து வருவதாக கோயில் பணியாளர்களே கூறுகின்றனர்.

மலை மற்றும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு பெருமாள் கோவில் பெருமாளுக்கு மட்டுமே சொந்தமானது.

நிர்வாக அதிகாரி பி.சக்தி வந்த சில நாட்களிலே மலையிலே கோயில் பின் பக்கம் “இயேசு சபை அல்லேலூயா” ஆரம்பிக்க மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டதாகவும், அவரின் ஆசிர்வாதத்தில் கிருத்துவ சபை நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டம் கோவில் மேலேயே பட்டாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் பக்தர்கள் அரண்டு ஓடும் அளவில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகித்து தொல்லை கொடுக்கின்றனர்.

யாருடைய இடத்தில் யாரு ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது. பெரும்பான்மையாக இருக்கும் போதே இந்த கதி. ஒவ்வொரு கோவிலாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலைக்கோவில்களை குறி வைக்கிறது அந்த கும்பல்.

மலையே கோவில் அதுதான் திருநீர்மலை. அதற்கு சாட்சியாக மலையடிவாரம் சுற்றி நான்கு திசையிலும் பலி பீடக்கல் நடப்பட்டு சிறப்பு தினங்களில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் எல்லைக்குள்ளே மலையடிவாரத்தின் உட்பகுதியிலேயே இறைச்சி கடை, கோழி கடை நடந்து வருகிறது.

அதனை தடுக்க வேண்டிய நிர்வாக அதிகாரி பி. சக்தி மௌனமாகவே இருக்கிறார் .அதன் காரணம் விசாரித்தால் அந்த கடைகளில் இருந்துதான் அவர் வீட்டுக்கே வார வாரம் கறி அனுப்பபடுகிறதாம் .

இந்து கோவிலில் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதி அதிலும் நிர்வாக அதிகாரி ஊரில் உள்ள இந்துக்களை வேலைக்கு வைக்காமல் அதே ஊரில் உள்ள மதம் மாறியவர்களை வேலைக்கு நியமித்து உள்ளார், வேலை செய்பவர்கள் பெயரளவில் மட்டுமே இந்து. ஆனால் அவர்கள் திடீர் சபை கிறித்துவ கூட்டத்தினர்.

கோவில் அன்னதான உண்டியல் மாத வருமானம் கடந்த காலங்களில் சராசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம். தற்போது 20 ஆயிரம் அதிக பட்சம் 25 ஆயிரம் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது.

உணர்வுள்ள இந்து இயக்கங்கள் இதனை சட்டப்படி எதிர்கொண்டு திருநீர்மலையை சதிகாரர்களிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பார்களா?

5 COMMENTS

  1. திருநீர்மலை உபகோயில்கள் சிலவற்றின் வணிக தொழில் வளாகங்களை விதிக்கு புறம்பாக பிற மதத்தவர்களுக்கு மிகவும் சாதாரண வாடகைக்கு விட்டு அந்த வாடகை கூட வசூலித்து கோயில் கணக்கில் சேர்க்கவில்லை அதற்குப்பதிலாக அவர்களிடம் தனியாக மறைமுக பலனை மாத மாதம் தனது ஆட்கள் மூலம் பெறுவது

    5. .கோயில் சீரமைப்பு பழுது பார்த்தல் மேம்பாட்டு பணிகளை உபயதாரர் மூலம் செய்து விட்டு கோவில் செலவில் கணக்கு எழுதுதல்

  2. திருநீர்மலை உபகோயில்கள் சிலவற்றின் வணிக தொழில் வளாகங்களை விதிக்கு புறம்பாக பிற மதத்தவர்களுக்கு மிகவும் சாதாரண வாடகைக்கு விட்டு அந்த வாடகை கூட வசூலித்து கோயில் கணக்கில் சேர்க்கவில்லை அதற்குப்பதிலாக அவர்களிடம் தனியாக மறைமுக பலனை மாத மாதம் தனது ஆட்கள் மூலம் பெறுவது

    கோயில் சீரமைப்பு பழுது பார்த்தல் மேம்பாட்டு பணிகளை உபயதாரர் மூலம் செய்து விட்டு கோவில் செலவில் கணக்கு எழுதுதல்

  3. எதற்கு எடுத்தாலும் சட்டமா? மதம் மாறுபவர்கள் எல்லாம் தமிழன் தானே, ஹிந்துதானே , அவர்களை அடக்க முடிய வில்லை என்றால் , உன்னையும் ஒன்பதையும் மூடிக்கொண்டு போங்கள்

  4. தெரியுது ,ஏன் சும்மா இருக்கே?அவனைப்பிடுச்சு ரெண்டு ஆட்டு அட்டா வேண்டியதுதானே

  5. தலைவர் H.ராஜா திருநீர்மலைக் கோவிலை ஆய்வு செய்தார் அவர் வருவதற்க்கு முன்னரே மிஷினிரி சபை பெயர் பலகைகள் மலை அடிவாரங்களில் அகற்றப் பட்டது நிர்வாக அதிகாரி சக்தி உடனே ஆஜர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe