December 3, 2021, 10:17 am
More

  கடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1

  shirdi sai baba 4 - 1

  உலகம் தோன்றிய நாள் முதலாய் இன்று வரை மனிதர்கள் வாழ்வதற்கான பல பணிகளை மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர்

  இதில் விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புதிய கருவிகள் மூலமும் மக்களின் அன்றாடப் பணிகள் நடைபெற உதவுகின்றனர் … அதே நேரத்தில் விஞ்ஞான பொருள்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் நோய்கள் ஏற்பட்டும் எதிர்கால வாழ்க்கையே கேள்விக் குறியாய் மாறி இருப்பதும்
  நாம் அறிந்ததே

  இந்திய மெய்ஞானிகள் கண்டுபிடித்த கோட்பாடுகளும் செயல்முறைகளும் இன்றைக்கும் என்றைக்கும் ஏற்புடையதாக இருப்பதோடு அல்லாமல் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை ஆனால் விஞ்ஞான கண்டுபிடிப்பு களில் இருக்கும் கவர்ச்சியும் எளிய அடைதலும் அனைவரும் வாங்கும் தன்மையும் மெய்ஞ்ஞான கண்டுபிடிப்பில் இல்லாததால் மக்கள் அவற்றை நாடாமல் தவிர்க்கின்றனர்

  இத்தகைய சூழல் ஏற்படும் போதெல்லாம் இறைவனே இறங்கி வந்து மக்களை நல்வழிப்படுத்தினார் இதற்காக பல அவதாரங்கள் எடுத்து மக்களுக்கு எளிய வழிமுறைகளை கூறி மனிதப்பிறவியின் நோக்கினை அடைவிக்கிறார்

  இறைவனாக இறங்கி வருவது அல்லாமல் மகான்களாகவும் குருவாகவும் தோன்றி நல்ல நெறிக்கு அழைத்துச் சென்றார்கள். கால தேவையின் காரணமாக கலியுகத்திலும் ஆதிசங்கரர் ராமானுஜர் மத்வர் ஸ்ரீ ராகவேந்திரர் ராமகிருஷ்ணர் போன்று இறங்கி வந்து பகவான் மக்களை நல்வழிப்படுத்தியது போல் சமீபகாலத்தில் அவதரித்த அவதாரம் ஷீரடி சாய்பாபா அவதாரம்

  சீரடி சாய்பாபாவை நாம் நமது அறிவிற்கு எட்டிய படி அறிந்து கொள்ள அவரின் பூர்வீகத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் … அப்போதுதான் பாபாவின் அவதார நோக்கமும் நமக்கு புரியும் …

  பாபா தனது பிறப்பு பற்றி தெளிவாக எங்கும் குறிப்பிடாவிட்டாலும் பல இடங்களில் கூறிய கருத்துக்களின் மூலம் பாபாவுடன் வாழ்ந்த அடியவர்கள் கூறிய கருத்துக்களின் மூலமும் பாபாவின் பிறப்பு ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரத தேசம் முழுமையுமே புண்ணிய பூமி தான் இருந்தபோதும் சில இடங்கள் இறைவனின் அவதாரத்தாலும் மகான்களின் பிறப்பாலும் தனிப்பெருமை பெறுகின்றன

  அதுபோல் பாரதத்தின் பல மகான்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் தோன்றி பாரதத்தின் வரலாற்றில் தனிப்பெருமை பெறச் செய்தனர்

  மகாராஷ்டிர மாநிலத்தில் கோதாவரி நதி ஓரம் இருந்த பத்ரி என்ற சிற்றூரில் வாழ்ந்த அந்தணர் ஹரிஸாடே லட்சுமி தம்பதியர் பல ஆண்டுகளாக புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்தனர். வேதம் இதிகாசம் சாஸ்திரம் என ஹிந்து மத நூல்கள் பலவற்றை கற்று அதன் எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காது வாழ்ந்தவரை புத்திரன் இல்லாத சோகம் வாட்டியது. அவ்வூரில் இருந்த சிவன் கோவிலே கதி என கிடந்தார் ஹரியின் மனைவி லட்சுமி அம்மாள். இறைவன் கண் திறந்தான் காலம் கனிந்தது கருவுற்றார்.

  லட்சுமி கவலை தொலைத்தார் ஹரிஸாடே நம் துயர் தீர்ந்தது இனி நாம் எனும் புத் என்ற நரகம் சேர மாட்டோம் என்று தம்பதியர் ஆனந்தம் அடைந்தனர் பிறந்த பிள்ளையை கண்டு ஒவ்வொரு நாளும் மோகித்துக் கிடந்தனர்

  தம்பதியர் நொடிகளை கடப்பதற்கு நெடிய அவஸ்தைப்பட வர்கள் நெடிய பொழுதையும் நொடியில் கடந்தனர்.  காலம் ஓடிய நிலையில் ஓர் இரவு தூக்கம் தொலைத்து அச்செய்தியை தந்தது இறைவன் கனவில் தோன்றி உங்கள் கடமை முடிந்தது… காலம் தாழ்த்தாது பிள்ளையை
  தாருங்கள் என்று கூறி மறைந்தார்

  விழித்தெழுந்து தம்பதிகள் விழிப்பு ஏற்படவில்லை. ஆயினும் காலம் தன் கடமையைச் செய்தது. வீட்டு வாசலில் பக்கிரி ஒருவர் வந்து அம்மா என்று அழைத்தார் … தாயே தவமிருந்து பெற்ற பிள்ளையை தாருங்கள். தங்களின் கடமை முடிந்தது .. என்னுடைய பணி பற்றாய் இருக்கிறது அல்லாஹ்வின் ஆணையை மீறும் ஆற்றல் என்னிடம் இல்லை என்றார்.

  reliance foundation chairperson nita ambani pays 540369 - 2

  உடல் வளர்க்கும் உணவைக் கேட்காமல் உயிரை கேட்டதால் உணர்ச்சி மேலீீட்டால் ஏற்பட்ட துன்பம் தொண்டையை அடைத்தது. அடக்க முடியாது, கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாமல் தெய்வக் குழந்தையை தந்தனர்.

  தம்மிடம் சென்ற பக்கிரி மனைவியிடம் பிள்ளையை கொடுத்து இனி இவன் நம் பிள்ளை வளர்ப்பது நம் பொறுப்பு என்றார் அல்லாஹ்வின் ஆணை ஆனந்தமே தரும் என்று அன்புடன் அள்ளிக் கொண்டாள் பக்கிரியின் மனைவி பிராமண வீட்டில் பிறந்த பிள்ளை முகமதியர் வீட்டில் முழுமதியாக வளர்ந்தது தவப் பிள்ளை

  ஐந்து வயது வரை வளர்த்தவர் தன் கடமை முடிந்ததை உணர்ந்தார் தெய்வ வாக்கு தோன்றியது போல் மனைவியிடம் பேசினார் … எனக்கு பின்னால் பிள்ளையை வளர்க்க முடியாது அவன் செல்ல வேண்டிய இடம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. எனவே நீ என் காலத்திற்கு பிறகு சேலு நகரில் இருக்கும் ஜமீன்தாரிடம் சேர்த்து விடு என்றார்

  சிறிது நாளில் அவர் இறைவனை அடைந்துவிட்டார். கணவனின் ஆணைப்படி பிள்ளையை ஜமீன்தாரிடம் சேர்க்க சேலு நகரம் விரைந்தாள் அவரது மனைவி.

  சேலூ நகரில் வாழ்ந்த கோபால்ராவ் தேஷ்முக் என்பவர் ஜமீன்தாராக இருந்தார் ஜனக மகாராஜா போல் அரச பதவியில் இருந்தபோதும் ஆத்ம ஞானம் அடைந்தவர்  முடிந்தவரை பற்றற்ற வாழ்க்கை நடத்தினார்

  பலருக்கும் தன்னால் முடிந்த பொருளுதவியும் இறை அருளையும் வழங்கிவந்தார் பல சிஷ்யர்களுக்கு ஆன்மீக விஷயங்களை போதித்தார் … கோபால் ரவிர்க்கு திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது மிகுந்த விருப்பம் இருந்தது. நாளும் பொழுதும் வெங்கடேச வெங்கடேச என அழைக்க அது நாளடை வில் வெங்குசாஎன மாறியது ..

  இவர் பூர்வஜென்மத்தில் ராமதாஸ் என்னும் சாய்பாபா என்றும் பெரியோர்கள் சொல்வார்கள் இறைவனையே சிந்தித்துக் கொண்டிருந்த வெங்கு சாவின் மாளிகைக்கு இத்தகைய பெருமை மிக்க வெங்குசாமி மாளிகையை தேடித்தான் முகமதின் மனைவி 5 வயது குழந்தை யுடன் வந்து நின்றாள்

  இறைவனையே சிந்தித்துக் கொண்டிருந்த வெங்குசா மாளிகைக்கு வந்த பாலகணை பார்த்தவுடனேயே வாரி அணைத்துக் கொண்டார் முற்பிறவி ஞானமும் சேர்ந்த சேர்ந்துகொள்ள தன் பிறவிக்கடலை தீர்க்க வந்தவன் என்பதையும் உணர்ந்து கொண்ட அன்பும் அறமும் பண்பும் ஊட்டி வளர்த்த பிள்ளைகளை செயலுக்காக தந்து விட்டுச் சென்றால் தன் கருமங்களை தொலைக்கும் காலம் நெருங்குவதை உணர்ந்த வெங்குசா தன்னிடம் இருக்கும் இறை சக்தியை எல்லாம் பாலகனுக்கு இறக்கி வைத்தார்

  இதற்காக பல நேரங்களில் இருவரும் தனித்தே இருந்தனர். புதிதாய் வந்தவரிடம் நம் குருவிற்கு ஏன் அத்தனை அக்கறை எப்போதும் அவளோடு இருக்கிறாரே என சிலர் ஆதங்கப்பட்டனர் சிலர் பொறாமைப்பட்டனர்

  பொறாமைப்படுபவர்கள் சிலர் இருவரையும் பிரிக்க திட்டம் தீட்டினர் அனைத்தும் தோல்வி அடைந்தது இதனால் கோபத்தில் கொலை செய்யவும் துணிந்து அந்த நாளுக்காக காத்து இருந்தனர்

  ஒரு நாள் வாழைத் தோட்டத்தில் தனிமையில் இருந்த ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் பாலகன் அவரே தியானித்துக் கொண்டிருந்தார் அப்போது இவர்களுக்கு எதிராக வேலை செய்யும் கூட்டம் கொலை செய்யும் திட்டத்தோடு காத்திருந்தது .

  எழுத்து: குச்சனூர் தி. கோவிந்தராஜன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-