December 2, 2021, 7:17 pm
More

  இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க வேண்டும்!: இது நீதிபதியின் அசத்தல் உத்தரவு!

  india should hindu nation - 1

  கௌஹாத்தி: இந்தியா எப்போதோ இந்து நாடு ஆகியிருக்க வேண்டும். இதை முஸ்லிம் நாடாக மாற்ற யாரும் முயற்சிக்கக் கூடாது. இப்பிரச்னையை மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார் மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி!

  மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி சுதீப் ரஞ்சன் சென் அமர்வுக்கு முன், இருப்பிடச் சான்றிதழ் வழங்கக் கோரி அமோன் ராணா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சுதீப் ரஞ்சன் சென் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

  அதில், உண்மையான இந்தியாவையும் அது பிரிந்த போது நடந்த சூழ்நிலையையும் வெளிப்படுத்தாவிட்டால் நான் செய்யும் பணியில் தோற்று விட்டதாகவே பொருள்.

  நாடு பிரிவினை கண்ட பிறகு பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்தது. அதுபோல் இந்தியாவும் தன்னை இந்து நாடு என்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மதசார்பற்ற நாடாக நீடித்து வருகிறது.
  இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், காஸிகள் என ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்தவர்கள், இன்னும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு, இந்தியாவுக்கு வராதவர்கள், இந்தியாவின் தொடர்புடன் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆகியோரை நாம் பாதுகாக்க வேண்டும்.

  இதற்காக ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். இப்பகுதியை முதலில் இந்து ராஜ்ஜியம் தான் ஆண்டு வந்தது. பின்னர் வந்த முகலாயர்கள் நாட்டின் பல பகுதியை கைப்பற்றி ஆளத் தொடங்கினர். அப்போது வலுக்கட்டயமாக மத மாற்றம் நடந்தது. பல தலைமுறைகளாக இந்திய சட்டத்தை மதித்து வாழ்ந்து வரும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு நான் எதிரானவன் இல்லை. அவர்களும் அமைதியான வாழ்க்கையை வாழ விட வேண்டும்.

  தேசிய குடியேற்றப் பதிவேடு சரியாக இல்லை. பல வெளிநாட்டினர் இந்தியர்களாகி விட்டனர். ஆனால், உண்மையான இந்தியர்கள் விடுபட்டு விட்டனர்.

  யாரும் இந்தியாவை மற்றொரு முஸ்லிம் நாடு ஆக மாற்ற முயற்சிக்கக் கூடாது. அது, இந்தியாவிற்கும் உலகிற்கும் ஆபத்தாகி விடும்.

  பாகிஸ்தான், வங்கதேசம், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து வாழும் முஸ்லிம் அல்லாத மக்கள், காஸிஸ் பழங்குடியின மக்கள் தொடர்ந்து எந்தக் கெடுபிடியும் இல்லாமல் வாழ சட்டம் கொண்டு வர வேண்டும். இப்பிரச்னையின் தீவிரத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு தான் புரிந்து கொள்ள முடியும்.

  அதன்மூலம், இப்பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியும். மேற்கு வங்க முதல்வர் மம்தா, தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இதற்கு ஆதரவு தர வேண்டும். – என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

  3 COMMENTS

  1. நேரு போன்ற நபர்கள் முதல் பிரதமராக வந்ததோடல்லாமல் நீண்ட காலம் அதே குடும்பம் ஆட்சியில் இருந்தது தான் காரணம்.

  2. நம் நாட்டை பிரித்து பாகிஸ்தானுக்கு கொடுத்தவுடன் அந்த நாடு இஸ்லாமிய நாடு என்று அறிவித்தது, ஆனால் இந்திய ஒரு ஹிந்து நாடாக அறிவிக்கப்படவில்லையே, ஏன் ?

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,773FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-