Home Reporters Diary தினசரி தள செய்தி எதிரொலி: திருநீர்மலையில் ஆய்வு மேற்கொள்கிறது தொல்லியல் துறை; எச்.ராஜா நாளை ஆய்வு!

தினசரி தள செய்தி எதிரொலி: திருநீர்மலையில் ஆய்வு மேற்கொள்கிறது தொல்லியல் துறை; எச்.ராஜா நாளை ஆய்வு!

தினசரி செய்திகள் எதிரொலியாக நாளை காலை பாஜக., தேசிய செயலாளர் எச் ராஜா திருநீர்மலையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

108 வைணவ திவ்ய தேசங்களில் சிறப்பான தலமாக போற்றப்படும் திருநீர்மலை திவ்யதேசத்தில் திருமால் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என நான்கு நிலைகளில் காட்சி தருகிறார்

திருநீர்மலை மலையடிவாரத்திலும் மலைமீதும் என இரண்டு ஆலயங்கள் சிறப்பாக திகழ்கின்றன. இந்த ஆலயங்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

அண்மைக் காலமாக இந்த பகுதிகளில் கிறிஸ்துவ பிரச்சாரமும் சர்ச்சுகளின் அடாவடித்தனமும் அதிகமாக இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர்

மேலும் கோயிலின் செயல் அலுவலர் குறித்தும் நடவடிக்கை எடுக்காத அறநிலையத் துறை குறித்தும் பக்தர்கள் புகார்களை தெரிவித்து வந்தனர். இது குறித்து நாம் தினசரி தளத்தில் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் இதுகுறித்து பக்தர்கள் இடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பலரும் நிலவரம் விசாரித்து வந்தனர். இதனால் தொல்லியல் துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க களமிறங்கியுள்ளது.

மேலும் நாளை காலை 7.30 மணி அளவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக திருநீர்மலை வருகிறார். இதனை காஞ்சிபுரம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் பத்மநாப ராவ் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து புகார்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் நாளை காலை கோயில் பகுதிக்கு வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

2 COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version