கூட்டணிக்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஹெச்.ராஜா!

சஞ்சய் பாரு எழுதிய விபத்து பிரதமர் படம் வெளியாவதை தடை செய்ய வலியுறுத்தி காங்கிரஸார் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இரட்டை வேடம் போடுகின்றனர் என்றும், கூட்டணி அறிவிப்புக்காக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.

கோவைக்கு வந்த பாஜக தேசிய செயலர் ஹெச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பாஜகவின் மூத்த தலைவர்கள் 40 பேர் நான்கு குழுக்களாக பிரிந்து 234 தொகுதிகளிலும், நாடாளுமன்ற தேர்தலுக்காக நான்கு முறை பூத் பொறுப்பாளர்களை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா மக்களை தேசிய ஜனநாயக கூட்டணியாக அணுகுவோம் என்று சொல்லியிருக்கிறார். அதைப் பின்பற்ற இருப்பதாகத் தெரிவித்தார்.

பாஜக ஊழலற்ற ஆட்சி புரிந்துள்ள என்று கூறிய அவர், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து அவர்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்வதாகவும், பிறக்கின்ற குழந்தையை குறை பிரசவமாகப் பிறக்க வைத்ததுள்ளது என்றும் கூறினார் ஹெச்.ராஜா.

பாஜகவின் நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் 22 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். அதில் 8.50 கோடி மக்களுக்கு கழிப்பிட வசதிகளும் 5.39 மக்களுக்கு கேஸ் வசதி, 1.30 கோடி பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 32 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 100 நாட்களில் 8 .36 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டின் மூலம் பலன் பெற்றிருப்பதாக கூறினார்.

மத்திய அரசின் சாதனைகள், ஊழல் இல்லாத நிர்வாகத்தை மக்களுக்குக் கொண்டு செல்வோம். ஊழல் பிறப்பிடமாக இருக்கிற காங்கிரஸ் திமுக கட்சிகளை மக்கள் தமிழகத்தில் வேரோடு பிடுங்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு உள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் வாங்கியதில் லஞ்சம் பெற்றுள்ளனர். அரபு நாட்டில் இருந்து தரகர் ஒருவர் சோனியாகாந்தி மற்றும் ராகுலுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2005 லிருந்து 2014 வரை தொட்டதில் எல்லாம் ஊழல் செய்த ஆட்சி ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி. அனைத்து வகையிலும் ஊழல் செய்த கட்சியினர், கூட்டு சேர்த்து மீண்டும் வர முயற்சிப்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் இந்துக்களை அவமதிக்கும் கருத்துக்கள் படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றால் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்கிறார்கள் . ஆனால் சஞ்சய் பாரு எழுதிய விபத்து பிரதமர் என்ற படம் வருவதற்கு காங்கிரஸ் காரர்கள் நாடாளுமன்றத்தில் தடை போடுகிறார்கள் இதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் வெளிவந்து இருப்பதாக தெரிவித்தார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

1 COMMENT

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.