December 6, 2021, 3:53 am
More

  இஸ்லாமியர்களை வைத்து தனக்குத்தானே ‘ஷொட்டி’க் கொண்ட கேரள அரசு! மகளிர் சுவரில் பறிபோன மானம்!

  kerala muslim ladies - 1

  கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு தனக்குத்தானே ஆதரவு அளித்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்த பெண்கள் சுவர் போராட்டம் பெரும் வரவேற்பின்றி பிசுபிசுத்துப் போனது.

  அங்கங்கே மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என பெண்கள் இந்த மகளிர் சுவர் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இது குறித்து வெறும் புகைப்படங்களை மட்டும் பகிர்ந்தால் போதாது, இதோ எங்கள் லைவ் வீடியோ என்று கேரளத்தின் ஹிந்துக்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் வீடியோக்களைப் பகிர்ந்தனர். அவற்றில், பெண்கள் சிலர் அங்கங்கே நின்றுகொண்டிருந்தது தெரிந்தது.

  சபரிமலைக்கு ஆதரவாக அணிதிரண்ட பெண்கள், பர்தா அணிந்து, கறுப்பு கவுனுக்குள் புகுந்துகொண்ட உடை சுதந்திரத்தைக் கூட பறிகொடுத்த பெண்கள் என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகின.

  உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சபரிமலை சென்று வழிபாடு நடத்த கம்யூனிஸ்ட் அரசின் தூண்டுதலில் பெண்கள் சிலர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இதற்கு சபரிமலை பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

  இந்த விவகாரத்தில், மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக., ஆகியவை, முதல்வர் பினராயி விஜயனுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் கேரள அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, கேரள அரசு, தனக்குத்தானே ஆதரவு தெரிவித்து ஒரு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது.

  அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதுடன், வழிபாட்டு தலங்களில் பாலின சமத்துவத்தை உறுதிபடுத்த வேண்டும்; நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காசர்கோட்டிலிருந்து பாறசாலை வரை 640 கி.மீ., தொலைவுக்கு பெண்கள் வரிசையாக நின்று மனித சுவர் அமைத்தனர்.

  அமைச்சர் கே.கே. சைலஜா தலைமையில் தொடர்ந்து இது குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த உறுதிமொழியில், சபரிமலை குறித்த வார்த்தைகள் இடம் பெறவில்லை. மாலை 4 மணி முதல் 4.15 வரை இந்த போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

  ladies lighting kerala - 2

  கடந்த வாரம் கேரளத்தில் சபரிமலைக்கு ஆதரவாக பெண்கள் கலந்து கொண்ட விளக்கு ஏற்றும் போராட்டம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் போராட்டத்தில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் பலரும் விளக்கு ஏற்றி வழிபட்டு, தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

  lightings - 3

  இந்தப் போராட்டத்தினை முறியடிப்பதற்காக, ஹிந்துக்கள் அல்லாத வேற்று மதப் பெண்களை வைத்து, இந்து மதத்துக்கு எதிரான போரைத் தொடுத்துள்ளது எல்லோருக்கும் பொதுவாக இருப்போம் என்று பதவியேற்பின் போது ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட கேரள அரசு!

  இந்நிலையில், பேஸ்புக், டிவிட்டர் என கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்., சார்பு இயக்க தொண்டர்களுக்குமான சமூக வலைத்தளப் போராக மாறியுள்ளது இந்த இரு நிகழ்வுகள். முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற இஸ்லாமியப் பெண்களின் போராட்ட புகைப்படங்களை போட்டோஷாப் செய்து, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தவறாக பகிர்கின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர்.

  மகளிர் சுவர் போராட்டத்தில் லட்சக்கணக்கில் பெண்கள் பங்கேற்றதாக கேரள அரசு கூறி வரும் நிலையில், சபரிமலைக்கு ஆதரவான விளக்கு ஏந்தும் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையை ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

  சபரிமலை பாரம்பரியம் காக்கும் போராட்டத்தில் ஐயப்ப ஜோதி ஏற்றி பங்கேற்ற ஹிந்துக்களின் விவரம் என்று குறிப்பிட்டுள்ளவை…

  கன்னியாகுமரி – 1,54,280
  திருவனந்தபுரம் – 2,45,635
  கொல்லம் – 1,70,780
  ஆலப்புழா – 1,56,098
  பத்தனம்திட்டா – 1,66,300
  கோட்டயம் – 1,58,250
  இடுக்கி – 75,600
  எர்ணாகுளம் – 2,11,345
  திருச்சூர் – 2,40,700
  பாலக்காடு – 96,640
  மலப்புரம் – 68,300
  கோழிக்கோடு – 1,57,210
  கண்ணூர் – 1,10,130
  வயநாடு – 41,200
  காசர்கோடு – 1,62,300

  மொத்தம் – 22,14,768

  கடந்த இரு தினங்களாக சபரிமலை விவகாரம் சமூக வலைத்தளங்களில் இரு தரப்புக்குமான போராகவே மாறிவிட்டிருக்கிறது!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,798FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-