தறுதலைகள்… தலைவர்கள்… தலைகுனிவு!

இந்த பெண்ணைப் பற்றியெல்லாம் பேசுவதன் மூலம் அநாவசியமான முக்கியத்துவம் தந்துவிடக் கூடாது என்று தான் தவிர்த்து வந்தேன்.ஏற்கெனவே எல்லோரும் தந்த முக்கியத்துவம் தானே இந்த அளவுக்கு துணிந்து தவறு செய்யும் தைரியத்தை தந்துள்ளது.

இன்றைய தமிழ் இந்துவில்,கெளசியின், ’’நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் என் பின்னால் நில்லுங்கள்.மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை…’’என்று பேட்டியளித்துள்ளதைக் கண்டவுடன்,தூக்கிவாறிப் போட்டது…!

இந்த சின்ன வயதில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே..இந்த பெண்ணுக்கு துணை நிற்போம்..என்ற கரிசனையிலும்,சாதியை ஒழிக்க சபதமேற்றதாலும்,சமூக நீதிக்கு போராடுவேன் என முழக்கமிட்டதாலுமே பொது வாழ்வில் உன் வயதைவிட இரண்டு, மூன்று மடங்கு ஆண்டுகள் அனுபவமுள்ள முன்னோடிகளும் தலைவர்களும் உன்னை முன்னிறுத்தி பெருமை படுத்தினார்கள்.

உன்னை முன் நிறுத்தியதால்,அவர்களும்,அவர்கள் வழி வந்த இளைய தலைமுறையும் உன் பின்னே நின்றதாக நீ பொருள் கொண்டுவிட்டாய்..அய்யோ என்ன கொடுமை..அப்படி உன்னை முன் நிறுத்தியதற்காக தற்போது அவர்கள் மனம் புழுங்கி தலை குனிந்து நிற்க நேர்ந்த நிலைமையை இப்போதும் கூட நீ உணராததால் தான் இவ்வாறு பேச முடிகிறது உன்னால்!

ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்டதால் கிடைத்த புகழ் வெளிச்சம் உன்னை ஆணவப் பெண்ணாக மாற்றிவிட்டதே..!

ஜெயலலிதாவின் இழப்பை ஈடுகட்ட நீ தயாராகி கொண்டுள்ளாயோ..! என்று தான் தோன்றுகிறது.!

அதீத புகழ் வெளிச்சம் எவரையும் தவறுக்கு மேல் தவறு செய்யும் தைரியத்தை பெற்றுத் தந்துவிடும் என்பது தான் என் 35 வருட பத்திரிகை,மற்றும் பொது வாழ்வில் நான் கண்டுணர்ந்த -மீண்டும்,மீண்டும் காணுகின்ற – கசப்பான அனுபவமாகும்!

நீ மறுமணம் செய்வதை மறுப்பேதுமின்றி மனதார வரவேற்க ஆயிரமாயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும்,ஒருவனை ரகசியமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உறவு கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற வினாவை வைத்தால்.., அவன் அயோக்கியன் என்ற உண்மையை சொல்லி மற்றவர்கள் தடுத்துவிடக் கூடாதே என்ற தவிப்புதானே ..!

உன்னை மகளாக கருதி அரவணத்த தோழர்கள் ஒரிருவரிடமாவது நீ மனம்விட்டு பேசி ஆலோசனை கலக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தது சுயநலமின்றி வேறென்ன?உன் முடிவு உன்னை உயர்த்தி வைத்தவர்களை எவ்வளவு கடுமையாக பாதிக்கும் என்பதை ஒரு சிறிதளவேனும் உன்னால் உணரமுடியவில்லையே..!

ஆசைப்படுவதுமனிதஇயல்புதான்தவறில்லை.
ஆனால், ஆசைப்பட்ட இலக்கையடைய வெளிப்படையற்றும், அறமற்றும் மூர்க்கத்தனத்துடன் செயல்படலாமா? இதன் எதிர்வினைதானே உன் பெற்றொர்களை ஆத்திரப்பட வைத்து குற்றத்திற்கு தூண்டி, இன்று சிறைசாலைக்குள் தள்ளியுள்ளது.

தங்களது கண்மூடித்தனமான பாசத்தாலும்,மூர்கத்தனத்தாலும் தங்களைக் குற்றவாளியாக்கி கொண்டு, உன்னை தியாகியாக புகழடைய வைத்த உன் பெற்றோர்களின் அறியாமை குறித்து நீ என்றேனும் யோசித்திருப்பாயா? 

உன்னை காதலித்தற்காக தங்கள் மகனை இழந்ததோடு,இன்று அவன் பெயரால் நீ நடத்தி வரும் அறக்கட்டளையால் பெரும் பணமும் ஈட்டி வருவது குறித்த பிரக்சையும் கூட இல்லாத அவனது அப்பாவி பெற்றோரின் நிலையை நினைத்துப் பார்த்தாயா?

தங்களது கண்மூடித்தனமான பாசத்தாலும்,மூர்கத்தனத்தாலும் தங்களைக் குற்றவாளியாக்கி கொண்டு, உன்னை தியாகியாக புகழடைய வைத்த உன் பெற்றோர்களின் அறியாமை குறித்து நீ என்றேனும் யோசித்திருப்பாயா? 

உன்னை காதலித்தற்காக தங்கள் மகனை இழந்ததோடு, இன்று அவன் பெயரால் நீ நடத்தி வரும் அறக்கட்டளையால் பெரும் பணமும் ஈட்டி வருவது குறித்த பிரக்சையும் கூட இல்லாத அவனது அப்பாவி பெற்றோரின் நிலையை நினைத்துப் பார்த்தாயா?

தன்னை காதலித்து, நம்பிக்கை தந்து கற்பமாக்கிவிட்டான் என்றுகதறிய பெண்ணை, நீ சாதி சொல்லி மிரட்டியுள்ளாயே…!

எவ்வளவு உயர்ந்த சாதியில் பிறந்திருந்தாலும் பெண் என்பவள் தாழ்த்தப்பட்டவரிலும் தாழ்ந்தவளாகத் தானே இந்த சமூகத்தில் வைக்கப்பட்டுள்ளாள் என்பதை பாதிக்கப்பட்டவள் நிலையிலிருந்து பார்க்கத் தவறிவிட்டாய் என்பது மாத்திரமல்ல, நீயே அங்கு ஒரு ஆணாதிக்கம் கொண்டவளாக மாறிப் போயிருக்கிறாய் என்பதை பார்க்கும் போது..,

உன் வாழ்க்கைக்காக தன் பாதிப்புகளைப் பற்றி வெளியுலகிற்கு சொல்லாமல் தியாகம் செய்த அந்த சகோதரிக்கு முன்னால், தன் பாதிப்புகளை சொல்லியே ஆதாயம் பெற்று உயர்ந்த நீ ஒரு தூசியாகிவிட்டாய்..என்பதை புரிந்து கொள்வாயா?

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மட்டுமல்ல,அந்த திரு நங்கையும் உன்னிடம் திருமணத்திற்கு முன்பே அவனிடம் தான் பாதிப்பட்டதை கூறியும் நீ மனம் இரங்கவில்லையே..! தொலைப்பேசி உரையாடலில்,அந்த திருநங்கை,’’ அவளுக்கு கர்பபை இருந்தது உண்மை வெளியே வந்தது.எனக்கு அது இல்லாததால் நிருபிக்க முடியவில்லை..ஆனால்,சக்தி நான் அவதூறு செய்வதாக அலட்சியம் செய்யும் போது என் மனம் கொந்தளிக்கிறது..’’ என வருத்தப்படும் போது, நீ அந்த திருநங்கையிடம் விட்டேத்தியாக,’’ நீ எதுவானாலும் தோழர் தியாகுவிடம் பேசு..’’என்று சொல்லிவிட்டு போனை வைத்தாயே..அப்படியானால் இந்த நெஞ்சழுத்தம் உனக்கு தோழர் தியாகு கொடுத்த தைரியம் தானா?

சக்தி மீதான விசாரணையில் தோழர் கொளத்தூர் மணி அவர்களுடன் தோழர் தியாகுவை இணத்திருக்க கூடாது.அவரது சொந்த வாழ்க்கை அதற்கு தகுதியற்றது.

மாறாக தோழியர்கள் சரஸ்வதி,ஒவியா,அருள்மொழி போன்ற யாராவது ஒரு பெண்ணியவாதி இடம் பெற்றிருந்தால் பாதிக்கபட்ட பெண்ணுக்கும், திருநங்கைக்கும் உரிய நீதி கிடைத்திருக்கும்,இந்த பிரச்சினை இன்னும் சரியான தளத்தில் அணுகப்பட்டிருக்ககூடும் என்று என் மனம் ஆற்றுபடுத்தவியலாமல்.. ஆதங்கப்படுகிறது.!
அறம் கொன்று கிடைக்கும் சந்தோஷமும்,புகழும் 
நிலைக்காது, நியாயமாகாது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும்..
ஒரு போதும் பொய்த்ததில்லை..!

  • சாவித்ரி கண்ணன் (பத்திரிகையாளர்)
Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.