Home சினிமா சினி நியூஸ் பேட்ட… விமர்சனம் 1

பேட்ட… விமர்சனம் 1

பேட்ட – சூப்பர் ஸ்டாரின் மரண மாஸ்

ரசிகர்களை முழுமையாக திருப்தி அடைய செய்யும் வகையில் ஸ்டைல் டயலாக் ஹிரோயிசம் எல்லாம் நிறைவாக

பல முக்கிய நட்சத்திரங்கள் வரிசையாய் வந்தாலும் ரஜினி இல்லாம ஒரு ஷாட் கிடையாது எனலாம்.

படம் முழுக்க முழுக்க சூப்பர்ஸ்டாரே

நான் வீழ்வேன் என நினைத்தாயே என ஓபனிங் ஷாட் துவங்கி இறுதி வரை ஆங்காங்கே பஞ்ச் டயலாக் பட்டயை கிளப்புது

தரமான சிறப்பான மாஸ் ரஜினியை பார்க்க முடிந்தது

சாதாரண வழக்கமான பழிவாங்கும் ஒரு வரி தமிழ்படங்களின் கதை தான். ஆனால் சூப்பர்ஸ்டாரின் மாஸ் தான் படத்தின் உயிர்

90களில் பார்த்த ரஜினி படம் போல லாஜிக் இல்லா மேஜிக்

இந்த சூப்பர் ஸ்டாரை சற்று அழகாய் வருடி செல்லும் மேகமாய் சிம்ரன், திரிஷா. வந்தார்கள் சென்றார்கள்.

இளமை துள்ளும் ரஜினி ஒப்பனை கலைஞருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் நிச்சயம் சபாஷ்

பாடல்கள் பிண்ணணிஇசை அனிருத் அணிலாய் ரூட் போட்டுள்ளார்.

இருபது வருஷம் பொறுத்தாச்சு, பேட்ட கோட்டை ன்னு பல அரசியல் வசனம் அனல் பறக்கிறது.

சசிகுமார் பாபிசிம்ஹா வைபவ் சின்னிஜெயந்த் மகேந்திரன் யோகிபாபு இன்னும் பலர் பேட்ட ஏரியாக்குள்ள வந்து போகிறார்கள்

சித்திக் , விஜய்சேதுபதி வில்லனுக்கு நடிப்பில் போட்டி போடுகிறார்கள்

உத்திரபிரதேச பிண்ணனி, இந்துத்துவ அரசியல்வாதி, லவ்ஜிகாத் எதிர்ப்பாளராய் வில்லன்கள் சித்தரிக்கப்பட்டது யாரை திருப்திபடுத்தவோ சற்று நெருடலாய்

பாட்ஷா படம் ரேஞ்சுக்கு எடுக்கனும்னு முயற்சி பண்ணியிருக்காங்க. குறைவில்லை.

சூப்பர்ஸ்டாரை வெளிச்சமாய் அருமையாய் ஜொலிக்க வைத்த ரசிகனாய் இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ்

இரண்டாம் பாதி சற்று நீளமாக செல்லவதாய் தோன்றினாலும்

கதை கேட்காமல் பார்த்தால் கடைசி 5 நிமிடம் காளியோட ஆட்டம் களைகட்டி களைப்பை நீக்கி உற்சாகமாய் போயிட்டு வாங்கன்னு சொல்லுறாரு

மொத்தத்தில் பேட்ட
குடும்பத்தோடு பொழுதுபோக்கும் ரசிகர்களின் ஸ்டைல் கோட்டை

கா.குற்றாலநாதன் நெல்லை

1 COMMENT

  1. ஹிந்துவை கெட்டவனாக காட்டும் கேவலமான மாவோயிஸ்ட் கலாச்சாரத்தில் இப்பொது ரஜினியும் ..விரைவில் veelvar

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version