மோகன்லால், நம்பி நாராயணன்ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு

  • பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருக்கும் பத்ம பூஷன்
  • சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், கண்மருத்துவர் ரமணி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ
  • டீஜன்பாய், இஸ்மாயில் ஓமர், அனில்பாய், பல்வந்த் மோரேஷ்வர் ஆகிய 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள்

நாளை குடியரசு தினவிழா கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மூவருக்கு பாரத ரத்னா, 4 பேருக்கு பத்ம விபூஷண் , 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பத்மவிபூஷண் விருது

1. நாட்டுப்புற கலைஞர் தீஜன்பாய்.
2. டிஜிபோட்டி அதிபர் இஸ்மாயில் ஒமர் 
3. எல்.என்.டி. சேர்மன் ஏ.எம்.நாயக்
4. எழுத்தாளர் பல்வந்த் முரேஷ்வர் புரந்தரே

பத்மபூஷண் விருது

1. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன்
2. மறைந்த எழுத்தாளர் குல்தீப் நாயர்
4. முன்னாள் சி.ஏ.ஜி. தலைவர் வி.கே.சுங்குலு
5. முன்னாள் லோகசபா துணை சபாநாயகர் கரிய முண்டா.
6. அகாலிதள் தலைவர் தீந்ஷா.
7. மலையேற்ற வீரர் பச்சேந்திரபால்.
8. லோக்சபா எம்.பி. நாராயண யாதவ்
9. நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்படுகிறது.

பத்மஸ்ரீ விருது

1. குத்துச்சண்டை வீரர் பஜ்ரங்பூனியா
2. மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளை
3. இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
4. நடிகர் பிரபு தேவா
5. டாக்டர் ஆர்.பி. ரமணி
6. டிரம்ஸ் சிவமணி
7. நர்த்தகி நட்ராஜ். (பரத நாட்டிய கலைஞர்.)
8. பங்காரு அடிகளார்
9. கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்
10. மறைந்த நடிகர் காதர் கான்
11. முன்னாள் தூதரக அதிகாரி எஸ்.ஜெய்ஷங்கர்
12. பாட்மின்டன் வீரர் சரத் கமல்
13. கால்பந்து வீரர் சுனில் சேத்ரி
14. நடிகர் மனோஜ் பாஜ்பாய்
15. டாக்டர் ராமசாமி வெங்கடசாமி
16. மூத்த வழக்கறிஞர் ஹர்விந்தர் சிங் புல்கா
17. ஷாதப் முகம்மது
18. கபடி வீர் அஜய் தாக்கூர் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருது பெறும் அனைவருக்கும் பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பத்ம விருது பெறுவதில் நம் நாடே பெருமை கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...