தேசத்தைப் பின்னிழுக்கும் சக்திகளுடன் செல்லாதீர்கள்! மதுரையில் மோடி அறைகூவல்!

5

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வந்திருந்த பிரதமர் மோடி, பின்னர் பாஜக.,வினர் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இது ஒருவகையில் தேர்தல் பிரசாரக் கூட்டமாகவும் அமைந்தது. மோடியின் பேச்சை பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா மொழிபெயர்த்தார்.

தமிழக சகோதர, சகோதரிகளே! உங்களுக்கு என் வணக்கம் என்று தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி தொடர்ந்து அவர் பேசியவை…

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள மதுரையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரியத்தின் அடையாளமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தொன்மையான பாரம்பரிய அடையாளமாக இங்கு அமைந்துள்ளது

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்! மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும்; வாழ்த்துக்கள்!

மதுரை, நெல்லை, தஞ்சையில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைக்கு மட்டுமின்றி, மருத்துவக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் உதவியாக இருக்கும்!

3 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்குதே அரசின் நோக்கம்! மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மக்களின் திட்டமாக மாறியுள்ளது!

நோய்த் தடுப்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் அதிகம் கட்டப்பட்டுள்ளன! கிராமப்புற சுகாதாரம் 2014-ல் 38%-ல் இருந்து 98% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது! ஆரோக்கியத்தை மேம்படுத்த தூய்மை இந்தியா திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது!

தமிழகத்தில் மட்டுமே 47 லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன! நாட்டின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன!

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும்! மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையுடன் ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்க திட்டம் இடப்பட்டுள்ளது.

மதுரை உட்பட 10 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ள இடத்தின் முக்கியத்துவம் கருதி, தூத்துக்குடி முன்னேற்றப் பாதையில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தனுஷ்கோடியை ராமேஸ்வரம், பாம்பனுடன் இணைப்பது மத்திய அரசு திட்டம்!

தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிச்சாலை, விமான சேவை, தகவல் தொடர்பு மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. விமான மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் திகழ நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரை பாதிக்காது. 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் சில தமிழக கட்சிகள் எதிர்மறையாக பேசி வருகின்றன; தவறாக சித்திரிக்க முயல்கின்றன! இந்த எதிர்மறை சக்திகளின் பின் செல்லவேண்டாம்.

நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்!

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, தில்லி முதல் சென்னை வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் என்னிடம் ஒரு பிரச்னையைச் சொல்லி என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார் பிரதமர் மோடி

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...