ட்ரெயின் 18 ரயில் பெயர் மாறுகிறது. இது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்படுகிறது. இதனை பியூஸ் கோயல் அறிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தில், இந்தியன் ரயில்வேயின் உன்னதத் தயாரிப்பாக ட்ரெயின் 18 உருவாகி இருக்கிறது. இதற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயர் சூட்டப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை இன்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்

இந்த ரயில் தில்லியிலிருந்து வாராணசிக்கு அதிகபட்ச வேகமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் துவக்கி வைக்க உள்ளார். இதில் 16 பெட்டிகள் இருக்கின்றன. 18 மாதங்களில் சுமார் 97 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள icf integral coach factory இல் இந்த ரயில் கட்டமைக்கப்பட்டது! சதாப்தி எக்ஸ்பிரஸ் வடிவமைத்த அதே ஐசிஎப்பில் தான் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது

ட்ரெய்ன் 18 என்று முதலில் பெயரிடப்பட்ட இதற்கு இப்பொழுது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இந்திய பொறியாளர்களால் இந்தியாவிலேயே 18 மாத காலத்தில் தயாரிக்கப்பட்ட ரயில்! இது தில்லியிலிருந்து வாராணசிக்கு செல்ல இருக்கிறது உலகத்தரம் வாய்ந்த ரயில் பெட்டிகளை மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்குவதற்கு இது ஒரு உதாரணம் என்று தெரிவித்தார் பியூஷ் கோயல்.

முழுக்க முழுக்க ஏர்கண்டிஷன் – குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் இந்த ரயில் பயணிக்கவுள்ளது. கான்பூர் மற்றும் அலகாபாத் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும். இரண்டு எக்ஸிகியூடிவ் உயர்தர சேர்கார்கள் இருக்கின்றன. இந்த ரயிலுக்காக பல்வேறு பெயர்களை சூட்டி பரிந்துரைகள் வந்தன; இருப்பினும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயர் சூட்டப்பட்டதாக பியூஸ் கோயல் தெரிவித்தார்

இந்த குடியரசு தின நாளில் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்று கூறிய கோயல், பிரதமர் மோடியிடம் இதனை கொடியசைத்து துவக்கி வைக்க நேரம் கேட்டிருப்பதாகக் கூறினார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...