அம்பானி வீட்டு கல்யாணத்திலயும் போய்.. புகை.. தீ… தாலி… ஐயர்… மந்திரம்னு கிண்டல் அடிச்சிடாதீங்க ‘ஸ்டாலின் பாய்’!

வழக்கம் போல் அம்பானி வீட்டு கல்யாணத்துலயும் போயி… புகை… தீ.. ஐயரு.. மந்திரம்… தாலி… சேர்ல உக்காந்துக்குறது… என்றெல்லாம் வழக்கம் போல் படிச்சி மனப்பாடம் செஞ்சி வெச்சிருக்குற பிட்டு பேப்பர எடுத்து அவுத்து வுட்றாதீங்க ‘ஸ்டாலின் பாய்’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அண்மைக் காலமாக ஹிந்து திருமண முறை, பழக்க வழக்கம், கடவுள்கள், ஆன்மிக நம்பிக்கைகளை கொச்சைப் படுத்துதல் என இயங்கி வரும் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பலரும் பதிலடி கொடுத்துவிடுகிறார்கள்.

ஆனாலும், ஸ்டாலின் அவற்றை எல்லாம் கவனிப்பது போல் தெரியவில்லை. காரணம், அவரது தந்தை மு.கருணாநிதியும் அப்படித்தான் இருந்தார். தன் போக்கில் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டே செல்வாரே ஒழிய, அதற்கு வரும் விமர்சனங்களைக் கருத்தில் கொள்ள மாட்டார். சொல்வது பொய்யெனத் தெரிந்தும், கோயபல்ஸ் ரகத்தில், திரும்பத் திரும்ப பொய்யும் புரட்டும் சொன்னால் அது மக்களிடம் ஆழப் பதிந்துவிடும் என்னும் திராவிடக் கயமைத்தனத்தை கருணாநிதி விட்டுச் சென்றிருக்கிறார்… அதனை மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார்.

அண்மையில்தான் ஒரு இஸ்லாமியத் திருமண வரவேற்புக்குச் சென்றுவிட்டு, அங்கே இந்து திருமண முறைகள் குறித்து அவதூறாகப் பேசிய வீடியோ வெளி வந்து பெரும் சர்ச்சையைக் கிளபியது.  அந்தச் சுவடு மறைவதற்குள் அவரது இன்னொரு வீடியோ பதிவு ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

அந்தத் திருமண விழாவில் என்ன பேசினாரோ அதையேதான் இங்கும் பேசுகிறார். இப்படிப் பேசுவதற்காக, அவருக்கு யாரெல்லாம் இந்தத் துண்டுச்சீட்டு மேட்டரை எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது… அதை வருடக்கணக்கில் அமர்ந்து மனனம் செய்து… மக்கப் பண்ணி… இப்போது எல்லா மேடைகளிலும் அதையே பேசிக் கொண்டிருக்கிறார்.

எவ்வளவுதான் அவரது கூமுட்டைத்தனத்தை உடன் இருப்பவர்கள் எடுத்துக் காட்டினாலும், அதை எல்லாம் உணரும் மனநிலையில் அவர் இல்லை என்பது, அவரது எல்லா வீட்டிலும் எழவுப் பேச்சைப் பேசுவதில் இருந்து தெரியவருகிறது.

குடியரசு தினத்தையும், சுதந்திர தினத்தையும் ஓர் இந்தியன் சரியாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் இருக்கும் ஒருவர், இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஏதாவது கல்யாண வீட்டுக்குப் போகும்  முன்னர் அந்தப் புத்தகத்தைப் பார்த்து, அல்லது துண்டுச்சீட்டைப் பார்த்து மனப்பாடம் செய்து போவாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இது குறித்து நடிகையும் சமூக செயற்பாட்டாளரும் ஆன கஸ்தூரி, தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்திருக்கிறார் இப்படி…

இன்னும் ஒருவர் இதே போல் வீடியோ மீம்ஸ் போட்டு சகட்டு மேனிக்கு கலாய்த்திருக்கிறார். என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் மேடையில் மைக் முன் நின்று விக்கித்திணறும் ஸ்டாலின் குறித்த அந்தப் பதிவு…

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...