புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொலை.
செய்யப்பட்டான். பயங்கரவாதி அப்துல் ரஷித் காஸியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்.

காஷ்மீரில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் காஸியை சுட்டுக் கொன்றது ராணுவம். இந்த தேடுதல் வேட்டையின் போது, ரஷீத் காஸி மற்றும் கம்ரான் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர் …

காஸி நேட்டோ படைகளால் தேடப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது!.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது, ஒரு ராணுவ அதிகாரி மற்றும் மூன்று வீரர்கள் என 4 பேர் வீரமரணமடைந்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் பிங்கலன் (Pinglan) என்ற பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் போலீசார் இணைந்து நேற்றிரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பதிலுக்கு சுட்டனர்.

தொடர்ந்து விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் என 4 பேர் வீரமரணமடைந்தனர்.

இருப்பினும், 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு, அவர்களை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரரும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராணுவ வீரர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

தேடுதல் வேட்டை மற்றும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடம், புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது.

The two terrorists were killed, one of them the mastermind behind the Pulwama terror attack, in an encounter in the Pinglina area of Pulwama district in Jammu and Kashmir on Monday.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...