புது தில்லி: உலகின் மிகப் பெரும் விடியோ கான்பரன்சிங் முறையிலான உரையாடல் மூலம் வரும் 28 ஆம் தேதி பாஜக., ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசனை நடத்துகிறார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக., ஆதரவாளர்களுடன் வரும் 28ஆம் தேதி 15 ஆயிரம் இடங்களில் இருந்து, ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுடன் காணொளிக் காட்சி முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.

இந்தப் பேச்சு உலகிலேயே வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்தப்படும் மாபெரும் கலந்தாலோசனை நிகழ்வாக இருக்கும் என்று கூறினார் அமித் ஷா.

ஒரு கோடிக்கும் அதிகமான பாஜக., நிர்வாகிகள் இதற்காக மோடியுடன் பேச தயாராகி வருகின்றனர். மக்கள் தங்கள் கேள்விகளை ‘நமோ ஆப்’ மூலம் அல்லது #MeraBoothSabseMazboot என்ற ஹேஷ்டாக் போட்டு சமூக வலைத்தளங்களில் அனுப்பலாம் என்றார் அவர். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் அறிவிக்கப் படவுள்ளதால், அதற்கு ஏற்ப பாஜக., தொண்டர்கள் தயாராகி வருவதாக அவர் கூறினார்.

Prime Minister Narendra Modi’s interaction with BJP workers and sympathisers on February 28 will be the world’s largest video conference, as he is expected to speak to over one crore people spread across 15,000 location, party president Amit Shah said Sunday. “On 28th Feb, PM Modi will interact with over 1 crore BJP karyakartas, volunteers & well wishers, spread across 15,000 locations, in what would be world’s largest video conference,” Shah said in a tweet.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...