பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானி! சென்னையைச் சேர்ந்தவர்?

இன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்த இந்திய விமானிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஒரு விமானி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும், கைது செய்யப்பட்ட மற்றொருவர் கமாண்டர் அபிநந்தன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதில் அபிநந்தனிடம் நடத்தப் படும் விசாரணை குறித்த வீடியோ பதிவு ஒன்றையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றும், அமைதியையே விரும்புகிறோம் என்றும், பாகிஸ்தான் மக்கள் தொடர்பு இயக்குனர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பிடிபட்ட அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் என பாகிஸ்தான் வெளியிட்ட முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தியத் தரப்பில் இந்தச் செய்தி இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை!

ஆனால், இது பாகிஸ்தான் ஒரு போர்ச் சூழலை உருவாக்க மேற்கொள்ளப் படும் தந்திரம் என்கிற கருத்து உலாவருகிறது. இது போன்ற ரெடிமேட் வீடியோக்கள் பல பாகிஸ்தான் வசம் உள்ளன என்றும், அவற்றை வெளியில் விட்டு, போர்க்காலச் சூழலை உருவாக்கும் வகையில் அது செயல்படும் என்றும் கூறுகின்றனர். உள்நாட்டு மக்களை திருப்திப் படுத்தவும் மகிழ்விக்கவும், இந்திய மக்களை பயப்படுத்தவும் இது போன்ற வீடியோக்கள் பாகிஸ்தான் வசம் நிறைய உண்டு என்கின்றனர் முன்னாள் ராணுவத்தினர்.

இதனிடையே, இந்திய எல்லையில் போர் நடப்பதற்கான பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவுறுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு உத்தரவுகள் பறந்துள்ளன.

Pakistan has claimed that it has shot down two aircraft of the Indian Air Force and captured two pilots. Pakistan has released a video claiming that it is of an Indian pilot named Abhinandan. In the video shared by Pakistan, a person wearing a flight suit is heard saying that he is Wing Commander Abhinandan. He is blindfolded and gives out his service number. He then asks if he is in the custody of the Pakistan military, saying he has the right to know this. Later, he refuses to answer further questions.

The video was relased after a press conference held by spokesperson of the Pakistan armed forces Major General Asif Ghafoor. No confirmation has beenn issued by the Indian Air Force on this so far.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...