காலதாமதம் செய்து.. அபிநந்தனை இரவில் ஒப்படைத்த பாகிஸ்தான்!

abhinandan waga border

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் இரவு கால தாமதம் செய்யப் பட்டு 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு அதிகாரிகளும், பொதுமக்களும் வாகா எல்லையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில், பாகிஸ்தான் இரு முறை காலதாமதம் செய்து இரவில்தான் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்கு முன்னதாக, வீடியோ எடுத்து அதை பாகிஸ்தான் டிவிக்களில் ஒளிபரப்பியது. அபிநந்தன் பாகிஸ்தானைக் குறித்து கூறும் நல்ல விஷயங்களை மட்டும் கட் செய்து, 17 (இடங்களில் கட் செய்து) ஒரு வீடியோவை ஒளிபரப்பியது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டியிலிருந்து லாகூர் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், வாகா எல்லையிலிருந்து 8 கி.மீ.,க்கு முன்னதாக படாப்பூர் முகாமில் வைக்கப்பட்டடார்.

இருப்பினும் இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து கால தாமதம் செய்தது. ஒப்படைக்கும் நேரத்தை இரு முறை பாகிஸ்தான் அரசு மாற்றியது.
பின்னர் இரவு 9 மணிக்கு மேல், அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் அவரை அதிகாரிகளும், பொதுமக்களும் வரவேற்றனர்.

எல்லையிலிருந்து அமிர்தசரஸ் அழைத்து செல்லப்படும் அபிநந்தன், பின்னர் விமானம் மூலம் தில்லிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவருக்கு, இந்திய மருத்துவர்கள், குழு மருத்துவ பரிசோதனை நடத்துகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.