நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதியிலேயே சட்டமன்ற இடைத்தேர்தலும் (ஏப்ரல் 18) நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப். 18ம் தேதி நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

ஆனால், நீதிமன்ற வழக்குகளால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை என்று கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் இருக்காது என்று கூறப் படுகிறது.

தேர்தல் அட்டவனை விவரங்கள் வருமாறு:

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள்: 19.03.2019

வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்: 26.03.2019

வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நாள்: 27.03.2019

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: 29.03.2019

வாக்குப் பதிவு: 18.04.2019

வாக்கு எண்னிக்கை நடைபெறும் நாள்: 23.05.2019

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...