08/07/2020 9:03 AM
29 C
Chennai

மீண்டும் மோடி வேண்டும் மோடி! எதிரொலிக்கும் குரல்கள்!

சற்றுமுன்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

இன்னா மிக்ஸிங்..!? சான்ஸே இல்ல..! சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு! #HappyBirthdayDhoni

இது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .

கீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

ழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.

கொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்! குவிந்த பாராட்டுகள்!

பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.

சேத்தூர்… உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி!

காவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மீண்டும் மோடி வேண்டும் மோடி! எதிரொலிக்கும் குரல்கள்!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

modi varanasi2 மீண்டும் மோடி வேண்டும் மோடி! எதிரொலிக்கும் குரல்கள்!

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியால் வருங்காலப் பிரதமர் என்று அடையாளம் காட்டப்பட்ட நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வரவேண்டும் என்று நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷம் தமிழகத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு ஏற்ப, தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைத்துள்ளது பாஜக.,! இது குறித்து பாஜக., நிர்வாகிகளுக்கும் கட்சியினருக்கும் குறிப்பிடுவது போல்,  தேர்தல் பணிக்கள அறிவுரைகளை கூறியுள்ளனர் கட்சியின் மூத்தவர்கள் சிலர். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளக்களில் வைரலாகி வரும் அந்தக் கருத்து…

எதிர்பார்த்தத போலவே… நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதிய (ஏப்ரல் 18), தேர்தல் கமிஷன் அறிவிச்சுடுச்சு. இன்னும் 38 நாட்கள்தான் இருக்கு. இனிதான் நம்மளோட வேலைகள் ஆரம்பம்.

2014- தேர்தலுக்கு… ‘மோடியோட அடி பலமா இருக்கும்’ ன்னு யூகத்துல கத்துன எதிரிகளோட கத்தல்… இந்த அஞ்சுவருஷம் வாங்கின மரணஅடில, 2019- தேர்தலுக்கு… யூகத்தோட, அடிவாங்கின அனுபவமும் சேர்ந்து… கத்தல், அலறலா இருக்கப்போகுது. காதை பொத்திட்டு, கருமமே கண்ணா… நம்ம வேலைய மட்டும் செய்வோம்.

எல்லாமே நமக்கு சாதகா இருக்கு. அதுக்காக… ‘முயல் / ஆமை’ கதைய மறந்துடாதீங்க. கண்கூடா எவ்வளவோ நல்லது செஞ்சாரு திரு.அடல் பிஹாரி வாஜ்பாய். அதனால, 2004-வாஜ்பாய் ஆட்சி தொடரும்னு நினைச்சு, அசால்ட்டா இருக்கப்போய்… ஆட்சிய இழந்தோம்.

இங்க நல்லது செய்யுறத விட, செய்யாத பொய்யகூட… முழுசா மக்கள் காதுக்கு கொண்டுபோய் சேர்த்து, நம்ப வெக்கணும். காங்கிரஸ் அந்த வேலைய கச்சிதமா செய்யும். அதுக்காக… ‘நல்லது செஞ்சாலும் திரும்ப நாம ஆட்சிக்கு வரமுடியாது’ ன்ற, எதிர்மறை எண்ணத்த வளர்த்துகாதீங்க. எதுவுமே செய்யாம, லட்சம் கோடிகள்ல ஊழல் மட்டுமே செஞ்சும்கூட… 2009-தேர்தல்ல, பிரச்சாரத்தை மட்டும் ஒழுங்கா செஞ்சு ஆட்சியபிடிச்ச காங்கிரஸ் கட்சியோட, நேர்மறை எண்ணத்த… உங்க மனசுல வளர்த்துகங்க.

பொதுவா… ‘இந்த தேர்தல், எதிர்கட்சிகளுக்கு வாழ்வா / சாவா பிரச்சனை’ ன்னு பேசிக்கிறாங்க. ஆனா… உண்மை என்ன தெரியுமா ? மோடி ஆதரவாளர்களுக்கு தான், இந்த தேர்தல் வாழ்வா / சாவா பிரச்சனை. காரணம், மோடி எதிர்ப்பாளர்கள் இந்த தேர்தல இழந்தா அவங்களுக்கு ஒன்னும் குடிமுழுகி போயிடாது. இன்னும் ஒரு அஞ்சுவருஷம் பாகிஸ்தான் கூட கூட்டணி அமைச்சு, ‘மோடி ஒழிக’ கோஷம் போட்டு காலத்த ஓட்டிடுவாங்க.

ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஜெயிச்சுட்டா… மோடி மாதிரி எண்ணத்தோட இந்திய அரசியலுக்குள்ள வர நினைக்குறவங்கள… இனியொரு அம்பது வருஷத்துக்கு வரமுடியாத அளவுக்கு தடுத்து, வேரோட பிடிங்கி எறிஞ்சிடுவாங்க. இந்த அஞ்சு வருஷமும் பார்த்து பார்த்து அடைச்ச எல்லா ஓட்டைகளையும் திறந்து விடுவாங்க. பார்த்து பார்த்து செதுக்குன அத்தனை சிற்பங்களையும் உடைச்சு எறிவாங்க. பார்த்து பார்த்து கட்டின இந்த பாரத மாளிகைய… வெடிவெச்சு தகர்ப்பாங்க.

எதை பத்தியும் கவலைபடாதீங்க. இங்க நாம மட்டுமே தனியா இருக்கோம்னு பயந்துடாதீங்க. தேசத்துக்காக… உயிரை கழட்டி, தங்க தாம்பாளத்தில் வைத்து கொடுக்க தயாரா நிற்கும்… நாட்டின் இரண்டாம் ராணுவமான RSS… நமக்கு முன்னாடி, அரணா நிக்குது. சொல்லப் போனா… நாட்டின் ராணுவமே கூட, “மீண்டும் மோடி வேண்டும் மோடி” ன்னுதான் மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு இருக்கு. எதிர்க்கட்சிகள் என்ன தில்லுமுல்லு வேலைகள செஞ்சாலும்… நம்ம கேப்டன் மோடி, அதை எல்லாம் அனாயாசமா உடைச்சுருவாரு ன்ற அசாத்திய நம்பிக்கை இருக்கு. தேசத்தையும், தேசியத்தையும் விரும்புற கூட்டணி கட்சிகள்… நம்மகூட இருக்காங்க.

எல்லாத்துக்கும் மேல… நாட்டை நேசிக்குற, அமைதியா நாட்டு நடப்புக்கள கவனிச்சுட்டு வர்ற… பெருவாரியான மக்கள்சக்தி நம்மகூட இருக்கு. இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா… “யார் உங்க பிரதமர் வேட்பாளர்”ன்ற பொதுமக்களோட மிகமுக்கியமான கேள்விக்கு… நெஞ்ச நிமிர்த்தி, “நரேந்திர மோடி” ன்னு எந்த தயக்கமும் இல்லாம நாம பதில் சொல்லலாம்.

‘மோடி’ ன்ற அந்த பேரேகூட… ஏழை, நடுத்தர மற்றும் நேர்மையான அரசியலை விரும்புற வாக்காளர்களுக்கு… மிகப்பெரிய உற்சாகத்த குடுக்கும். ஆனா… “ராகுல் காந்தி”ன்ற பேர, சிரிக்காம சொல்ல வேண்டிய நிர்பந்தம்கூட… திமுக கூட்டணிய சோர்வடைய செஞ்சுடும்.

“ஐயோ… எனக்கும் மோடி வரணும்னுதான் ஆசை, ஆனா என்னால எப்படி ஊரூரா போய் பிரச்சாரம் பண்ண முடியும்” ன்னு மலைச்சு போய் நிக்காதீங்க. ராமருக்கு… ஆஞ்சநேயர் மட்டுமே உதவி செய்யல, வானரங்களும், அணிலும் கூட உதவியிருக்கு. ராமர்… எந்த உதவியையும் சின்னது, பெருசுன்னு பிரிச்சு பாக்கல. அனுமனையும், அணிலையும் ஒன்னாவே பார்த்தாரு. தர்மத்துக்கு உதவிசெய்ய… எண்ணமும், செயலும் மட்டுமே முக்கியம். பெரிய தலைவர்கள் பெரிய பிரச்சாரங்கள கைல எடுத்துக்கட்டும். முகநூல்ல எழுதுறவங்க எழுதட்டும்.

வீட்ல இருக்குறவங்க, வேலைக்கு போறவங்க… பிஜேபிக்கு எதிர்மறை சிந்தனையுள்ள உங்க சொந்தகாரங்க, நண்பர்கள், அக்கம் பக்கம் இருக்கறவங்க, கூட வேலை செய்றவங்களுக்கு புரியவையுங்க. இந்த ஐஞ்சு வருஷத்துல, எத்தனையோ மோடி திட்டங்கள் நாடுமுழுவதும் செயல் படுத்தப்பட்டிருக்கு.

அந்த திட்டங்கள்ல… ஒவ்வொரு வாக்காளனும், ஏதாவது ஒரு திட்டத்துல பலனடஞ்சிருப்பான். அதை எல்லாம் எடுத்து சொல்லுங்க. உங்க… குடும்ப மற்றும் நண்பர்கள் வாட்ஸ்ஆப் குழுக்கள்ல… அந்த விஷயங்கள பரப்புங்க. எவனாவது ஒன்னுரெண்டு முட்டாப்பய வந்து எதையாவது லூசுத்தனமா கேப்பான். கோவப்படாதீங்க, பொறுமையா விளக்குங்க.

அந்த விளக்கம்… அந்த முட்டாப் பயலுக்கில்ல. அதை படிக்குற மத்தவங்களுக்கு. இது… ஒவ்வொருவரையும் நெருங்கி, அவங்களோட சந்தேகங்களுக்கு விளக்கம் குடுத்து, உளவியல் மூலமா தெளிவு படுத்துற திண்ணை பிரச்சாரமுறை. இதுதான் உண்மையான பிரச்சாரம். உங்க குடும்ப உறுப்பினரோ, உங்க நண்பரோ… நான்வந்து, எவ்வளவு அழகா, தெளிவா, நெளிவு சுழிவோட எடுத்து சொன்னாலும் நம்பமாட்டாரு. ஜஸ்ட் தேர்தல் பிரச்சாரம்னு சொல்லிட்டு போயிடுவாரு. ஆனா… அவங்களுக்கு நெருக்கமான நீங்க சொல்லும்போது… யோசிப்பாரு. தன்னோட தப்பான கருத்த மாத்திக்குவாரு.

மோடிக்கு எதிரா, சம்பிரதாயமா கூட ஒரு பிரதமர் வேட்பாளர முன்னிறுத்த முடியாம தடுமாறுர எதிர்க்கட்சிகள்… ஆயிரம் பேசட்டும், நா ஆணித்தரமா சொல்றேன்… மோடிதான் மீண்டும் பிரதமர். அதுதான் விதி. சீர்கெட்ட இந்தநாட்ட, செம்மைப்படுத்த கடவுளால் படைக்கப்பட்ட அவதாரம்தான்…

#நரேந்திரதாமோதர்தாஸ்மோடி. மோடி… தன்னோட குடும்ப தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்க, பதவிக்கு வரணும்னு ஆசைப்படல. இந்த தேசதோட வருங்கால தலைமுறைகள், உலக அரங்குல தலை நிமிர்ந்து நிக்கணும் ன்ற எண்ணத்தோட, தினமும் 18 to 20 மணிநேரம்… உழைக்குறார். மனசாட்சி உள்ள எதிரிகளேகூட இத ஒத்துக்குவாங்க.

எங்கெங்கோ பிறந்த நானும், நீங்களும்… கோட்டர், பிரியாணி, காசு போன்ற கேவலங்களுக்காக இங்க இணைஞ்சு வேலசெய்யல. நமக்குள்ள இருக்குற நாட்டுப் பற்றும், நல்ல எண்ணங்களும், தெய்வ சக்தியும்தான் நம்மள ஒண்ணு சேர்த்திருக்கு. நாம, மனசாட்சிக்கு விரோதமா பொய் சொல்லி ஓட்டுகேக்க வேண்டிய அவசியமில்ல. உண்மைய சொன்னா மட்டுமே போதும்.

எந்த யுகத்துலயும்… அரக்கர்கள் வென்றதா வரலாறே இல்ல. இறுதியில் #தர்மமேவெல்லும்…. கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கு பொய்க்காது. உற்சாகமா வேலைய ஆரம்பிங்க.

– சக்தி வெங்கடேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad மீண்டும் மோடி வேண்டும் மோடி! எதிரொலிக்கும் குரல்கள்!

பின் தொடர்க

17,867FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகள்... மேலும் ...