spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைநாடாளுமன்ற தேர்தலும், தூத்துக்குடி மாவட்ட சில பிரச்னைகளும்!

நாடாளுமன்ற தேர்தலும், தூத்துக்குடி மாவட்ட சில பிரச்னைகளும்!

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலும், தூத்துக்குடி மாவட்ட சில பிரச்சனைகளும்

  1. கோவில்பட்டி நகருக்கு இரண்டாவது குடிநீர்த் திட்டம், நீண்டகாலமான கோரிக்கையாகும்.

  2. உச்சநீதிமன்றம் தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்று 1983இல் நான் தொடர்ந்த பொதுநல வழக்கின்படி வழக்குக்கு தீர்ப்பளித்தது. அதன் ஒரு பகுதியாக கேரளாவின் அச்சன்கோவில் – பம்பை – தமிழகத்தின் வைப்பாற்றில் இணைக்கும் திட்டமாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் பயன்பெறும். சாத்தூர் வைப்பாற்றில், அச்சன்கோவில் பம்பையை இணைத்து நீர்வரத்தின் போது அதற்கு தெற்குமுகமாக ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டால், எட்டையபுரம், கோவில்பட்டி விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்கும். குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும்.

  3. வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியான விளாத்திக்குளத்தில் விளையும் மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க குளிர்பதனம் செய்யப்பட்ட சேமிப்பு கிட்டங்கிகள் அமைக்க வேண்டும்.

  4. நீண்டகாலமாக கோவில்பட்டி, கயத்தாறு பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து இந்த வட்டார இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

  5. கோவில்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

  6. கோவில்பட்டி நகருக்கு முழுமையாக பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

  7. வானம் பார்த்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுடைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

  1. அனைத்து இரயில்களும் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும்.
  2. ஹாக்கிப்பட்டி என்று அழைக்கும் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நடந்து வந்தது. அகில இந்திய வகையில் இந்த போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெறும். மேலும் அதை உலகத் தரத்திற்கு எடுத்துசெல்ல வேண்டும்.

  3. கோவில்பட்டி, அதன் சுற்று வட்டாரங்களில் நடக்கும் தீப்பெட்டித் தொழிலில் பிரச்சனைகளை களைந்து அந்த தொழில் சிறக்க வேண்டும்.

  4. கோவில்பட்டியில் பருத்தி அரவைத் தொழிலையும், நெசவாலைகளையும் பாதுகாக்க வேண்டும்.

  5. எட்டையபுரத்தில் பாரதி, உமறுப்புலவர், நாவலர் சோமசுந்தரபாரதி, முத்துசாமி தீட்சிதர் போன்ற ஆளுமைகள் உலாவிய மண். இங்கு நாட்டுப்புறக் கலைகளை ஆய்வு செய்யும் மையத்தை அமைக்க வேண்டும். தேவராட்டம், வில்இசை போன்ற நாட்டுப்புறக் கலைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரிசல் இலக்கிய ஆய்வுகளும் இங்கே மேற்கொள்ள வேண்டும்.

  6. தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்றோரால் மதிக்கப்பட்டு அவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய விளாத்திக்குளம் சாமிகளை பற்றிய நினைவைப் போற்றும் வகையில் விளாத்திக்குளத்தில் அவரது நினைவிடத்தில் அவரது வரலாற்றை பதிவு செய் வேண்டும்.

  7. விவசாயிகளின் தலைவராக விளங்கிய நாராயணசாமி நாயுடு கடந்த 1984இல் கோவில்பட்டியில் பயணியர் விடுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மரணமடைந்தார். நீண்டகாலமாக அவருடைய சிலையை வைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

  8. தூத்துக்குடியில் பத்திரிக்கை உலகின் முன்னோடியாகத் திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரைக் குறித்து ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகள் வேண்டும்.

  9. விடுதலைப் போர் வீரர் வ.உ.சி., தனது இறுதி நாட்களில் கோவில்பட்டியில் வாழ்ந்த பகுதியில் உள்ள தெருவின் பெயரை அவரது நினைவைப் போற்றும் வகையில் நடவடிக்கைகள் வேண்டும்.

  10. சென்னையில் இருந்து குமரி முனை வரும் கிழக்கு கடற்கரைச் சாலை இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட மணப்பாடை தாண்டியும் சாலைப் பணிகள் சரியாக அமையவில்லை. அவை மேலும் நவீனப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  11. காவிரி டெல்டாவை நாசம் செய்துவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இராமாநாதபுரத்தில் வழியாக திருந்செந்தூர் வரை செயல்படுத்தும் திட்டத்தை தடுக்க வேண்டும்.

  12. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, எட்டையபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்ல தொடர்வண்டி இருப்புப் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

  13. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும்..

  14. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாறு, சிப்பிக்குளம், தூத்துக்குடி, பழைய காயல், புன்னைக்காயல், வீரபாண்டியப்பட்டணம், அமலிநகர், கொம்புதுறை, ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை போன்ற மீனவர் பகுதிகளில் மீன்பிடிக்கும் திட்டங்களை குறித்து விரிவான செயல்பாடுகளையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

  15. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், சாத்தான்குளம் பகுதிகள் மூன்றில் ஒருபங்கான செம்மண்ணான தேரிக்காடு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்

  16. கடலோரங்களில் கடல் ஓதங்களினால் சராசரியாக 1 மீட்டர் அளவுக்குத்தான் நீர்மட்டம் உயரவோ அல்லது குறையவோ செய்கிறது. தூத்துக்குடி பக்கில் ஓடை இவைகளில் சாக்கடை நீர் கடலில் கலக்காமல், உயர் ஓதத்தின் போது பின்னோக்கிப் போகின்றன. இந்த பக்கில் ஓடை பிரச்சனை தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்டகாலமாக இருக்கின்ற பிரச்சனை.

  17. பனை மரங்ளையும், பனைத் தொழிலை பாதுகாக்கவும், உரிய நடவடிக்கைகள் வேண்டும்

  18. தாமிரபரணி நதி வங்கக்கடலில் சேரும் புன்னைக்காயல் முகத்துவாரப் பகுதிகள் சீர்செய்ய வேண்டும்.

  19. ஸ்டெர்லைட் போன்ற நச்சைக் கக்கும் ஆலைகளை ஒருபோதும் இந்த மண்ணில் வர அனுமதிக்க கூடாது.

  20. ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்த சத்தியமூர்த்திக் குழு அறிக்கைகயை நீண்டகாலமாக மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்காமல் இருகிறது. இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  21. கட்டபொம்மன் சிலை சென்னையில் நிறுவ வேண்டும்.

  22. தூத்துக்குடியில் சரக்கு வாகன நிறுத்தவதற்குத் தனி முனையம் ஏற்படுத்த வேண்டும்.

  23. திருவைகுண்டத்திற்கும் – ஆத்தூருக்கும் இடையே தாமிரபரணியில் ஓர் அணை கட்ட வேண்டும்.

  24. காயல்பட்டினத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

  25. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதியில் உள்ள வடகால், தென்கால், மருது மேலக்கால், கீழக்கால் வாய்க்காலில் உள்ள 53 குளங்களையும் தூர்வார வேண்டும்.

  26. திருநெல்வேலி, திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

  27. தூத்துக்குடி கடற்கரை அருகேயுள்ள முயல் தீவு போன்ற சிறு தீவுகள் சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  28. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லுர், வைணவ நவதிருப்பதிகள், திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, எட்டையபுரம் பாரதியின் நினைவில்லம், மணப்பாடு புனித சவேரியார் உலாவிய கடற்கரை, தேரிக்காடு போன்ற பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  29. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீட்டு அங்கீகாரம் வழக்கப்பட வேண்டும்.

கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில் நான் தேர்தல்களில் போட்டியிட்ட போது
இதில் சில பிரச்சினைகளை முன் எடுத்தேன்.

#தூத்துக்குடிமாவட்டபிரச்சனைகள்
#தூத்துக்குடிநாடாளுமன்றத்தொகுதி
#Thoothukudi_district_issues
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-03-2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe