Home உலகம் நியூஸிலாந்து வழிபாட்டு இடத்தில் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி

நியூஸிலாந்து வழிபாட்டு இடத்தில் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி

நியூசிலாந்து நாட்டில் வழிபாட்டு கட்டடத்தில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 30 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

தொழுகைக்கு பிறகு நியூசிலாந்து உள்ள இரு மஸ்ஜித்களில் 10-15 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூட்டை வேற்று மத தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

டீன்ஸ் அவெ நகரில் இருக்கும் மஸ்ஜித் அல் நூர் மற்றும் லின்வூட் அவெ நகரில் இருக்கும் லின்வூட் மஸ்ஜித் ஆகிய இரு மஸ்ஜித்களிலும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

மஸ்ஜித் அல் நூரில் ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த தீவிரவாதி ப்ரெண்டன் டர்ரன்ட் (Brenton Tarrant) நடத்திய துப்பாக்கிச் சூட்டை டிவிட்டரில் நேரடியாக பதிவு செய்துள்ளான்.

தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களின் பெயர்களை கிறுக்கி வைத்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு பெண் உட்பட நான்கு தீவிரவாதிகளை நியூசிலாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் காரில் வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் இருந்ததை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஸ்ட்ரிக்லாண்ட் (Strcikland) வீதியில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து கமிஷ்னர் புஸ் “எண்ணற்ற IED ரகங்கள் காரில் இருந்துள்ளது. அவைகளை இராணுவ வீரர்கள் செயலிழக்க செய்துள்ளனர்” என்ற குறிப்பிட்டுள்ளார்.

மஸ்ஜித் உள் கட்டிடம் இரத்த மயமாக காட்சியளிக்கிறது. நேரடி சாட்சி களின் வாக்குமூலத்தில் “மஸ்ஜித் உள்ளே 5 வயது குழந்தையும் பலியாகியுள்ளது” என்றார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version