October 16, 2021, 11:42 pm
More

  ARTICLE - SECTIONS

  மோடியை எதிர்க்க இவர்களுக்கு காரணம் இருக்கு..! ஆனா உங்களுக்கு..?

  modi parliament - 1

  நாட்டை சீர்திருத்த பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக காரணமற்ற வெறுப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?

  இவர்கள் அனைவரும் மோடிக்கு  எதிராக வேலை செய்ய அவர்களுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா நீங்க நல்லவங்களா இருந்தா உங்களுக்கு அப்படி ஏதேனும் காரணம் இருக்கா என்ன?

  ‘நியுஸ் 7″ திருட்டுப்பயலுக்கு 5 வருஷமா இழுத்து மூடி சீல் வெச்சுருக்குற கம்பனியை திறந்து, கனிம மணல் கொள்ளையை திரும்பவும் ஆரம்பிச்சே ஆகணும்ங்குற நிர்பந்தம்.

  “புதிய தலைமுறை” தறுதலைக்கு ஒரு சீட் ஒரு கோடின்னு வித்து காசு பார்க்க, அதற்கெதிராக ஆப்பு மாதிரி இருக்கும் நீட் பிரம்மாஸ்திரத்தை தூக்கியாகணும்.

  ஜெயா டிவிக்கு ஏற்கனவே கட்சியும் போச்சு, கோட்டைக்கு கிளம்புன சித்தி பெங்களூர் போயாச்சு!
  மத்தியில் பா.ஜ.க இருக்குற வரை பருப்பு வேகாதுன்னு தெரிஞ்சு போச்சு.

  ஓசி பிரியாணி கலைஞர், சன் டிவிக்கு திரும்பவும் காங்கிரசோடு கூட்டாக திருடுன பாவத்துக்கு , ரெண்டு பேருல எவன் தனியா போனாலும் கூண்டோடு ஜெயிலுக்கு போக வேண்டிய நிலமை.

  பப்பு மச்சானுக்கு நில அபகரிப்பு, ஆத்தாளுக்கு நேஷனல் ஹெரால்ட், ரீ கவுண்டிங் மினிஸ்டருக்கு குடும்பத்தோடு 18 முன் ஜாமின், அப்புறம் மறு விசாரணையில் இருக்கும் 2ஜி, ஏர்டெல் மேக்சிஸ், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர், BSNL திருட்டு கனெக்‌ஷன்… ect… ect

  ரோமன் கத்தோலிக்க கூட்டத்துக்கு தங்கள் மெடிக்கல் காலேஜ்ல கிருத்தவனுக்கு மட்டும் சீட்டுன்னு இருந்ததை, திறமையுள்ள ஏழைகளுக்கு குடுக்க வெச்ச கடுப்பு,

  சி.எஸ்.ஐ லாசரஸ், காஸ்பர்களுக்கு தங்கள் 13000 என்.ஜி.ஓ-களை முடக்கியதால் உள்நாட்டு கருப்பு பணத்தை வெளிநாட்டுக்கனுப்ப முடியல, வெளிநாட்டு சட்டவிரோத பணத்தை உள்ளே கொண்டுவர முடியல!

  700 மீனவன் செத்திட்டிருந்தான். இப்போ 5 வருஷத்துல ஒரே ஒருத்தன். அதைக்கூட பக்கத்து நாடு நாங்க சுடவில்லைன்னு சொல்லி பம்மிடிச்சு. இப்படியே போனால் தமிழ் வியாபரமும் படுத்துடும்.

  ரியல் எஸ்டே என்னும் கட்டப்பஞ்சாயத்து மூலம் நில அபகரிப்பு பண்ணுற கும்பல், அபகரிச்ச நிலத்தை விற்க முடியல. விற்பனைக்கு வரும் நிலத்தை வாங்க முடியல. ஏழைகள் வீட்டு கனவு நிறைவேற விலை கட்டுக்குள் வந்தது. காரணம் ஆதார், டிஜிட்டலைஷேசன், வரி சீரமைப்பு!

  G.S.T , e-billing மூலம் கள்ள பில் , கள்ளக்கடத்தல் பிசினஸ் பண்ணுறவன் மூலத்துல ரத்தம் வருது.

  ஏற்கனவே கொள்ளையடிச்ச பணத்தை வெச்சு மிச்சமிருக்குற காலத்தை ஓட்டிடலாம்ன்னா, அதையும் செல்லாக்காசாக்கி கழிவு நீர் ஓடையில் மிதக்க விட்டுட்டாங்க.

  டிமனிட்டேஷனுக்கு பின் நக்சல் இயக்கங்களுக்கு நாஷ்டா துன்னவே பிச்சையெடுக்கும் நிலை.

  கம்யூனிசத்துக்கு திரிபுராவில் கரும்புள்ளி , செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்திப்புட்டானுங்க.

  ப்ளாக்ல சிலிண்டர் விற்க முடியல, ரேசன்ல கள்ளக்கணக்கு எழுத முடியல, மானிய பணம் வங்கி கணக்கில் நேரடியாக செல்வதால் கமிஷன் அடிக்க முடியல , ‘டிஜிட்டலைஷேசன்”.

  மத்தியில் ஆட்சியில் இருந்துட்டே இந்த குத்துன்னா, நாளை இவனுங்க மாநிலத்திலும் வந்துட்டா , நவோதயா பள்ளிகளை திறந்து மிச்சமிருக்குற L.K.G சீட் பிசினசையும் படுக்க வெச்சிருவானுங்க.

  என்னா…… அடி! உசிரக்குடுத்தாவது தோற்கடிச்சே ஆகணும். தனியா போனால் தகராறு , அதனால கூட்டமா போய் அந்த மோடிய கடிச்சு வெச்சிருவோம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-