October 22, 2021, 3:38 pm
More

  ARTICLE - SECTIONS

  என்ன செய்தார் பிரதமர் மோடி… நீளும் சாதனைப் பட்டியல்!

  modi indiatodayconclave - 1

  மோடி என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்காக…

  ????184. ராமேஸ்வரம் முதல் கரிச்சல் முனை வரை பலகாலமாக கைவிடப்பட்ட தனுஷ் கோடி வழியாக தேசிய நெடுஞ்சாலை.

  ????185. அமேதியில் AK 203 துப்பாக்கி தொழிற்சாலை.

  ????186. இந்தியாவில் மிக உயரமான பாலம் JIRIBAM ,TUPUL மற்றும் IMPHAL – அஸ்ஸாமிற்கும் அருணாசல் பிரதேசத்திற்கும் இடையே அமைக்கப்படுகிறது.

  ????187. சவூதி அரேபியாவில் இருந்து 850 கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை.

  ????188. ஹஜ் செல்லும் முஸ்லிம்கள் 175 000 இருந்து 200000 லட்சமாக உயர்வு.

  ????189. சவூதி அரேபியா 700000 கோடி முதலீடு.

  ????190. செல் போன் உற்பத்தி ,கிட்ட தட்ட அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உள்நாட்டிலேயே தொழிற்சாலைகள் அமைப்பு. அதனால் இறக்குமதி வெகுவாக குறைந்தது.

  ????191. காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் அனைவருக்கும் அரசு செலவில் வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் ,மிக தைரியமான நடவடிக்கை

  ????192. புதிய வீடுகளுக்கு 2.27 லட்சம் வட்டி மானியம்.

  ????193. வருடம் 2022 க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கில் நல்ல முன்னேற்றம்.

  ????194 புதிப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 35 . 5 GW இலிருந்து 69 .7 GW வரை உயர்ந்து இரட்டிப்பானது.

  ????195. UDAY மின் திட்டத்தின் மூலம் 20000 கோடி வட்டி சேமிப்பு.

  ????196. மின் பற்றாக்குறையில் இருந்து அதிக மின் உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு விற்பனை.

  ????197. முக்கியமா அனைத்து திட்டங்களுக்கும் ஒரே குடும்ப பெயர் இல்லை ????????

  ????198. உலகத்திலேயே முதன் முதலாக டீசல் ரயில் என்ஜின், மின்சார ரயில் என்ஜினாக மாற்றமடைந்துள்ளது.

  ????199. கூடிய விரைவில் அனைத்து அகல ரயில் பாதையும் மின்சார மயமாகும்.

  ????200. ரயில் விபத்தில் உயிரிழப்பு 2013 – 14 இல் 152 ஆக இருந்து இந்த ஆண்டு 29 ஆக குறைந்துள்ளது.

  modi in kanyakumari - 2

  ????201. ரயில்வே மூல தன செலவு 2.3 கோடியில் இருந்து 5.1 லட்சம் கோடியாக அதிகரிப்பு

  ????202. 1997 – 98 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட போகிபீல் இரட்டை அடுக்கு பாலம் இப்போது முடிக்கப்பட்டு… பயண தூரம் 700 கிமீ தூரம் குறைக்கப்பட்டு, பயண நேரமும் 24 மணியிலிருந்து வெறும் 5 மணி நேரமாக குறைப்பு (எத்தனை சேமிப்பு என்று கணக்கு போடும்போது தலை சுற்றுகிறது )

  ????203. ரூபாய் 15700 கோடி செலவில் பெங்களூருக்கு புறநகர் ரயில் திட்டம்

  ????204. ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் தலைநகரங்களில் அகல ரயில் பாதை மூலம் கௌஹாத்தி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தது. அதோடு தற்போது இட்டாநகரும், அகர்தலாவும் இணைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மற்ற தலை நகரங்களும் இணையும்.

  ????205. விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான மண் வள அட்டைகள்.

  ????206. ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி S-400 ஏவுகணைகள்.

  ????207. பாரத்மாலா திட்டம் முதல் கட்டமாக 50000 KM சாலைககள். இரண்டாம் கட்டடத்தில் 30000 KM சாலைகள்.

  ????208. சாகர்மாலா திட்டத்தில் (திரு வாஜ்பாய் உருவாக்கிய) 12 முக்கிய துறைமுகங்கள் தரம் உயர்த்துதல் மற்றும் 185 பழைய புதிய சிறிய துறைமுகங்கள் உருவாக்குதல் மற்றும் அதன் தரம் உயர்த்துதல்

  ????209. அனைத்து துறைமுகங்களுக்கு அருமையான ரயில் மற்றும் சாலை இணைப்புகள்.

  ????210. இந்த திட்டத்தினால் இந்தியாவின் GDP 2 % உயரும் என்பது வல்லுநர்கள் கருத்து

  ????211. ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

  ????212. முக்கியமாக விலைவாசி இந்த திட்டம் முடியும் போது வெகுவாகக் குறையும். வருடத்திற்கு 35000 கோடிக்கும் மேல் மிச்சமாகும்.

  ????213. சரக்கு போக்குவரத்துக்கு தனியாக 3300 KMs.

  ????214. இதனால் சரக்கு போக்குவரத்தின் வேகம் அதிகரிக்கும். 2.5 மடங்கு சரக்கு அதிகமாக கையாளப்படும். பயணிகளின் ரயில் தாமதம் தவிர்க்கப்படும். விபத்துக்கள் குறையும். இத்திட்டம் நிறைவேற 2022 ஆம் வருடம் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  ????215. கீழ்வரும் நாடுகளை இணைத்து International North-South Trade Corridor உருவாக்க திட்டம். அந்த நாடுகள்… India, Iran, Russia, Turkey, Azerbaijan, Kazakhstan, Armenia, Belarus, Tajikistan, Kyrgyzstan, Oman, Ukraine, Syria. Observer member – Bulgaria.

  ????216. இந்த 7200 KMs கடல், சாலை மற்றும் ரயில் இணைப்புகளில் ஆன இந்த அமைப்பினால் போக்குவரத்து நேரம் 40 நாளில் இருந்து 24 நாட்களாக குறையும்.

  ????217. போக்குவரத்து செலவு குறைவினால் மேற்குரிய அனைத்து நாடுகளுக்கும் உண்டான வர்த்தகம் அதிகரிக்கும். இதில் முக்கிய பயனாளி இந்தியா..! ❤️

  ????218. பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் (ECR)

  ????219. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமி தோப்பில் பசுமை விமான நிலையம்.

  ????220. கன்னியாகுமரியில் கட்டவே முடியாது, ஆடுகிறது, திறந்த அன்றே உடைந்தது என்று பொய் சொல்லப்பட்ட இன்றும் போக்குவரத்தில் இருக்கும் மேம்பாலங்கள்.

  modi pooja rajarishi - 3

  ????221. கும்ப மேளாவில் வேலை செய்த துப்புரவு தொழிலாளருக்கு அவர்களுடைய நன்மைக்காக தனது சொந்த சேமிப்பில் இருந்து 21 லட்சம் ரூபாய் வழங்கினார் நம் பாரதப் பிரதமர்.

  ????222. சியோல் அமைதிக்கான பரிசுத்தொகை 1.3 கோடியும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கினார் மோதிஜி.

  ????223. பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகளை ஏலம் விட்டதில் கிடைத்த 3.4 கோடியையும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கினார்.

  ????224. 2015 வரை தனக்கு கிடைத்த நினைவு பரிசுகள் ஏல தொகை 8.33 கோடி ரூபாயையும் கங்கை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கினார் மோதிஜி.

  ????225. குஜராத் அரசு ஊழியர் பெண் குழந்தைகள் படிப்பு செலவுக்கு தனது சேமிப்பில் இருந்து 21 லட்சம் வழங்கினார் மோதிஜி.

  ????226. மோதிஜி தான் முதல் அமைச்சராக இருந்த போது கிடைத்த அனைத்து பரிசு பொருட்களும் ஏலம் விட்டதில் கிடைத்த 89.96 கோடி ரூபாயும் KANYA KELAVANI fund பெண் குழந்தைகளின் படிப்புக்கான திட்டத்துக்கு வழங்கினார்.

  மொத்தமாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொந்த முயற்சியில் வழங்கி இருக்கிறார், உண்மையில வாஜ்பாய் மற்றும் அப்துல் கலாம் போன்ற சில தலைவர்களே வாங்காமல், கொடுத்து மட்டுமே வாழ்ந்தார்கள். இப்போது அவர்களுக்கு அடுத்தபடியாக மோதிஜி மட்டுமே அப்படி நடந்து கொள்கிறார்.

  ????228. பிரதம மந்திரியின் இல்லத்தில் மற்றும் அலுவலகத்தில் தனது உணவு செலவை தானே செய்வது.

  ????229. முக்கியமாக அவருடைய உடைக்கான செலவு எதையும் அரசாங்கம் செய்தது இல்லை.

  ????230. சென்னை மதுரை இடையேயான இரட்டை ரயில் பாதை… ரயில் பாதை போலவே நீண்டு கொண்டு இருந்த வேலை இப்போது முடிக்கப்பட்டது.

  ????231. போதனுர், பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு இடையேயான ரயில்பாதை பணியில் தொய்வுகள் நீக்கப்பட்டு அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றன.

  ????232. புதிய புனலூர் மற்றும் செங்கோட்டை இடையேயான அகல ரயில்பாதை திட்டம், பயனில் இருந்த மிகக் குறுகிய ரயில் 2008 நிறுத்தப்பட்டு 2014 வரை பணிகள் ஏதும் நடக்காத நிலையில்… 2018 இல் இங்கே ரயில் ஓட வைத்த பெருமை மோதிஜியையே சாரும்.

  ????233. மிக பெரிய இடைஞ்சலாக இருந்த அரக்கோணம் – தக்கோலம் இடையேயான 20 வருடமாக இழுத்து கொண்டு இருந்த வெறும் 7 கிமீ தூரத்துக்கான மின்மயமாக்கும் பணி 2019 ஜனவரி இல் நிறைவு செய்யப்பட்டது.

  ????234. மயிலாடுதுறை காரைக்குடி இடையேயான ரயில்பாதை 150 கிமீ அகலப்படுத்தும் வேலை… 2008 ஆரம்பிக்கப்பட்ட இந்த அகலப்படுத்தும் பணி, 2014 இல் வெறும் 38 KM வேலையே முடிக்கப்பட்டது. பணம் இல்லாமல் தொய்வாக இருந்த பணி பணம் ஒதுக்கப்பட்டு 100 KM பணி முடிக்கப்பட்டது. மீதி உள்ள 50 KM பணிகளும் விரைவில் முடிக்கப்பட உள்ளன. உபரி தகவல் இந்த பாதை கலைஞர் இன் திருவாரூர் மற்றும் ப.சிதம்பரம் அவர்களின் காரைக்குடி இடையே இருக்கிறது (காசி நினைவில் வருகிறது)

  ????235. சென்னை மும்பை இடையேயான 1000 கிமீ ரயில்பாதை, 1980 இல் இருந்து ௦ % முன்னேற்றம் அடைந்த இந்த பாதை மோதிஜியின் அமைச்சர்கள் முயற்சியால் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது.

  ????236. 390 புற்று நோய் மருந்துகளின் விலை 87 % வரை குறைக்கப்பட்டுள்ளது.

  ????237. HMDS எனப்படும் காணொளி திரையுடன் கூடிய தலை கவசம் இஸ்ரேல் அரசு உதவியுடன் BEL நிறுவனம் தயாரிப்பு

  ????238. டெல்லி மும்பை இடையே விரைவு பசுமை சாலை திட்டம்.
  கார்களின் பயண நேரம் வெறும் 12 நேரமாக இருக்கும்,36 மாதத்தில் பணி முடிக்க திட்டம். தூரம் 1450 இருந்து 1250 KM ஆகக் குறையும்.

  ????239. 43 ஆண்டாக கிடப்பில் கிடந்த கொல்லம் புறவழி சாலை நிறைவு

  ????240. 40 வருடமாக செயல்படுத்தப்படாமல் இருந்த பன்சாகர் கால்வாய் திட்டம்

  ????241. நாட்டுக்காக உயிர் நீத்த 34844 காவலர்களுக்கான நினைவிடம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 2018 கட்டி திறக்கப்பட்டது.

  ????241. நாட்டுக்காக உயிர் நீத்த 34844 காவலர்களுக்கான நினைவிடம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 2018 கட்டி திறக்கப்பட்டது.

  ????242. பலவருடமாக நிறைவேற்றப்படாத வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லுவோருக்கான Katra ரயில் பணிகள் நிறைவு

  ????243. 2008 இல் UPA அரசால் ஆரம்பிக்கப்பட்ட வெறும் 1500 மீட்டர் நீளமுடைய பாலம் கோட்டா சம்பல் பாலம் 2017 கட்டி முடிக்கப்பட்டது.

  ????244. சிக்கிமின் தலைநகர் காங்டாக் அருகே பாக்யாங் (Pakyong) என்னும் இடத்தில புதிய விமான நிலையம்.

  ????245. கச்ச எண்ணெய் கையிருப்பு அதிகரிப்பு

  ????246. சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் தயாரிக்க ஊக்குவிப்பு. ஊக்கத்தொகை அதிகரிப்பு. சர்க்கரை ஆலைகளின் சுமை குறையும்.

  ????247. எரிபொருளில் தற்போதைய 10 % இருந்து 20 % எத்தனால் கலக்க திட்டம்

  ????248. 100 % கிராம மின்சாரம் என்ற இலக்கை தாண்டி 100 % வீடுகளுக்கு மின்சாரம் என்ற இலக்கை நோக்கி பயணம்

  ????249. பணிக்கொடை பலனுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூபாய் 10 லட்சத்தில் இருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்வு

  ????250. 57 முஸ்லீம் நாடுகளின் மாநாட்டில் பாக்கிஸ்தான் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு இந்தியா சிறப்பு அழைப்பாளராக சுஷ்மா ஸ்வராஜ் பங்குபெற அழைப்பு

  ????251. பாக்கிஸ்தானுடன் போர் மூளும் என்ற சூழல்நிலையிலும் ஆஸ்திரேலியா இங்கே பாதுகாப்பு உணர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கிறது. மும்பை தாக்குதல் நடந்தபோது இங்கே விளையாடிக்கொண்டு இருந்த அணி பாதுகாப்பு கருதி விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடிப்போனதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். ❤️

  ????252. தமிழ்நாட்டுக்கு புதிதாக 5 கேந்திரிய வித்யாலயங்கள்.

  ????253. மாவட்டத்துக்கு ஒன்றாக மத்திய அரசு கொடுக்க தயாராக இருந்த நவோதய பள்ளிகள் தரம் தாழ்ந்த அரசியலால் தமிழகத்தில் மட்டும் தடுக்கப்பட்டது

  ????254. 22000 கோடி மதிப்பில் ரஷ்யாவுடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம்

  ????255. 4500 கோடி மதிப்பில் 3500 ஏக்கரில் மாமண்டூரில் விமான நிலையம் அமைக்க அனுமதி. 2022 / 23 இல் செயல்பாட்டிற்கு வர ஏற்பாடு.

  ????256. குழந்தைகள் கற்பழிப்பு வழக்கில் அதிகபட்ச தண்டனை தூக்காக சட்டத் திருத்தம்

  ????257. கொலை மற்றும் கற்பழிப்புக் குற்றங்களுக்கான சிறார் சட்டம் மாற்றி அமைப்பு, வயது வரம்பு 18 இல் இருந்து 16 ஆக குறைப்பு

  ????258. அரசு கையகப்படுத்தும் தனியார் இடங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

  ????259. USTTAD, (Upgrading the Skills & Training in Traditional Arts/Crafts for Development) கலை மற்றும் கைவினை பொருள் தொடர்புடைய பயிற்சி மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.

  ????260. மத்திய விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பு..!

  modi manmohan - 4

  ????261. பல வருடமாக கிடப்பில் கிடந்த எதிரிகளின் சொத்து சம்பந்தமான சட்டம் அமலஉக்கு வந்தது. ( ENEMY PROPERTY BILL )

  ????262. அரதப்பழசான PLANNING COMMISSION தூக்கப்பட்டு NITI AAYOG அறிமுகம்.

  ????263. சுற்றுலா துறையில் வருமானம் USD கணக்கில் 50 % வளர்ச்சி கண்டுள்ளது அதாவது 70 வருடமாக 100 USD என்றால் இந்த ஆட்சியில் 150 USD.

  ????264. மின்சார வாகனங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பல சலுகைகள்.

  ????265. திருச்சி BHEL ஆலையில் மின்சார பேருந்துகள் தயாரிப்பு.

  ????266. முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும, ஜனாதிபதியும் ஆனா திரு பிரணாப் முகர்ஜி பலமுறை இந்த ஆட்சியை பாராட்டி இருக்கிறார். ஏன் இன்று 18 முறை ஜாமின் வாங்கி சரித்திரம் படைத்த நமது சிதம்பரம் கூட பாராட்டி இருக்கிறார் (கேடுகெட்ட பிரகாஷ் ராஜ் கூட)

  ????267. அனைத்து மத பண்டிகைகளும் பாரபட்சம் இல்லாமல் தவறாமல் வாழ்த்து சொன்ன ஒரே தலைவர் திரு மோதிஜி மட்டும்தான் ஹிந்துக்களுக்கு சொல்வது மற்றவர்களுக்கு இல்லை என்பது எப்போதும் இல்லை.

  ????268. ஒரு அரசியல் சாராத திரு அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கியத்தியதும் பிஜேபி தான். தலித் ஒருவரை இன்று ஜனாதிபதி ஆக்கி அழகு பார்ப்பதும் பிஜேபியும் மோதியும்தான் மட்டுமே..! ❤️

  ????269. 20210 மில்லியன் ரூபாய் செலவு செய்த மோதிஜியின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் (136,077.75 மில்லியன் USD ) சுமார் 9525390 மில்லியன் ரூபாய்கள் அந்நிய முதலீடு வந்துள்ளது . இதற்கும் மேல் நமது நாட்டில் அனைத்து நாடுகளும் கொண்டிருக்கும் நட்புறவு போனஸ்.

  ????270. சுதந்திர இந்தியாவில் இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற முதல் பிரதமர் மோதிஜி மட்டுமே. இதன் மூலம் இஸ்ரேல் முன்னணி வகிக்கும் விவசாயம், ராணுவ தொழில் நுட்பங்கள், மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு உட்பட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இஸ்ரேல் பிரதமருடன் தனிப்பட்ட நட்புறவு மூலம் பல நன்மைகள்

  ????271. நேரு குடும்பம் மற்றும் காங்கிரஸ் ஆதரவு இல்லாத முழு ஆட்சி காலம் ஆட்சி செய்த, இரண்டாவது முறை தேர்ந்து எடுக்கப்படும் முதல் பிரதமர்.

  ????272. ஆமை வேகத்தில் இருந்த பல மெட்ரோ ரயில் திட்டங்கள் ஜெட் வேகமாக நிறைவேற்றப்படுகின்றன.

  ????273. கோடிக்கணக்கான பேர் பங்குகொண்ட கும்பமேளா ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் நடந்தேறியது.

  ????274. பேட்மிட்டன் மைதானம் அமைக்கவும், இந்தியா விமானப்படையிடம் இருந்தும் பிடுங்கப்பட்ட ரூபாய் 30000 கோடி பணம் பெற்ற அம்பானி 500 கோடி ரூபாய் கடன் கட்டமுடியாமல் திணறுகிறார்.

  ????275. வித்யா லட்சுமி திட்டத்தின் மூலம் கல்விக்கடன் வாங்குவது எளிதாக்கப்பட்டது.

  ????276. பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான dialysis திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோர் பயன்

  ????277. தூக்கு தண்டனையிலிருந்து 5 தமிழர்கள் இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

  ????278. PMKVY திட்டத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர்க்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு.

  ????279. Ministry of Skill Development And Entrepreneurship கீழ் பல திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் மாற்று வேலை வாய்ப்பு.

  ????280. குறைத்த விலையில் பேன், ட்யூப் லைட் மற்றும் LED விளக்குகள் அரசாங்கம் மூலமாக சந்தை விலையை விட குறைந்த விலை (நல்ல கம்பனிகளில் இருந்து தரமான தயாரிப்பு, (இங்கே கொடுத்த டிவி, பேன், கிரைண்டர் போல இல்லை) கொடுத்ததில் நடுத்தரவர்க்க சேமிப்பு கீழே கொடுத்துள்ளேன்.

  http://ujala.gov.in/
  http://ujala.gov.in/
  http://fan.ujala.gov.in/
  http://ledtubes.ujala.gov.in/

  இதனால கார்பன் வெளியீடு குறைக்கப்பட்டு, மின்செலவு குறைக்கப்பட்டு, மின் தேவையும் குறைக்கப்பட்டுள்ளது.

  ????281. வாகனங்கள் பதிவுக்கு RTO செல்லாமல் விற்பனை செய்பவரே பதிவு செய்ய சட்டம். அதனால இடைத்தரகர் மற்றும் லஞ்சம் தவிர்ப்பு. படிப் படியாக அனைத்து RTO வேலைகளும் நேரில் செல்லாமலே செய்யத் தீவிரம்.

  ????282. சுங்க சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை குறைக்க FASTAG முறை

  ????283. உயிர் இழக்கும் ராணுவ வீரர்களின் குழந்தைகளின் அனைத்து படிப்பு செலவும் அரசாங்கம் ஏற்பு. இதைக்கூட இதுவரை இருந்த அரசுகள் செய்யவில்லை என்பது மிகவும் கேவலம்.

  ????284. மேலும் ஒரு பொய் குற்றசாட்டு முதியோர் உதவித்தொகை வங்கி கணக்குகளில் குறைந்த பட்சத் தொகை 1000 இல்லாததால் 1000 ரூபாய் உதவித்தொகை வாங்கும் கணக்கில் 600 பிடித்தம் செய்யப்படுகிறது என்பது, வடி கட்டிய பொய்.

  https://www.hdfcbank.com/personal/products/accounts-and-deposits/pension-accounts/features
  https://www.bankofindia.co.in/english/SBAcc.aspx

  இங்கே இரண்டு வங்கிகளின் லிங்க் கொடுத்துள்ளேன் , பென்ஷன் அக்கௌன்ட் என்பது 0 இருப்பு கணக்கு எந்த குறைந்த பட்ச தொகையும் வேண்டியது இல்லை, பொய் பரப்ப வேண்டாம்

  ????285. விண்வெளித் துறையில் பல சாதனைகள். ஒரே ராக்கெட்டில் 100 க்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள். பாக்கிஸ்தான் தாக்குதலுக்கு மிக முக்கிய பங்கு ISRO.

  ????286. மிகவும் பின் தங்கி உள்ள விளையாட்டு துறைக்கு ஒலிம்பிக் மெடல் வாங்கிய திரு ராஜவர்தன் ரத்தோர் சிங்க்கை மந்திரி ஆக்கி வரும் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வாங்க இலக்கு நிர்ணயித்து இருப்பது.

  ????287. யோகா வை சர்வதேச அளவில் கொண்டு சென்றது.

  ????288. மத்திய மந்திரியின் அலுவலகங்களுக்கு சாதாரணமாக சென்று வந்த புரோக்கர் மற்றும் பத்திரிக்கையாளர் கட்டுப் படுத்தப்பட்டனர். ரகசியங்கள் காக்கப்பட்டது.

  முடிந்தவரை தொகுத்து இருக்கிறேன். கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும். மேலும் தமிழ்நாட்டு திட்டங்களுக்கு இங்கே முன்னுரிமை கொடுத்துள்ளேன். மற்ற மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசு திட்டங்கள் நிறைய பட்டியல் இடப்படவில்லை.

  முடிந்தவரை இதை அனைவருக்கும் தெரியும்படி பகிர்வோம் !!!!

  மோதிஜி வெற்றி பெற ஆதரவை தெரிவிப்போம் !!!!!

  மோடி அவர்களின் சாதனை இத்துடன் முடிக்கிறேன் மொத்தம் 300 சாதனைகள் பட்டியல் இட்டு இருக்கிறேன்
  இதற்கு நிறைய உதவிய Prema S Iyer அவர்களுக்கு நன்றி

  மீண்டும் மோடி !!!! வேண்டும் மோடி !!!!! தமிழ்நாட்டில் நாடும் நமதே!!!!!! நாற்பதும் நமதே !!!!

  289 யாருக்கும் பாதிப்பு இல்லாமல் 10% EWS திட்டத்தை செயல்படுத்த அணைத்து மத்திய அரசு கல்விநிலையங்களிலும் 10% இடங்களை அதிகரித்தது

  290 Brics நாடுகளை இணைத்து (Brazil, Russia, India, China and South Africa)புதிய வங்கியை துவக்கியது ,அதன் முதல் தலைவராக காமத் அவர்களை நியமனம் செய்ய வைத்தது

  291 கிட்ட தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு 2014 இல் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து ,கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி சபையில் இடம் கொடுத்து அரவணைத்து சென்றது

  292 சவூதி அரேபியாவின் உயரிய The King Abdulaziz Sash விருதை பெற்றது ,இங்கே இருக்கும் மாற்று மதத்தினர் எல்லாம் அவரை வெறுக்கும் போது அணைத்து மதங்களை சார்ந்த நாடுகளும் அவருக்கு மரியாதையை செய்வதும், நட்புடன் இருப்பதும் அவர் இங்கே யாரையும் ஒதுக்கவில்லை எனபதற்கு எடுத்துக்காட்டு

  293 ஜப்பான் நாட்டின் நட்புறவு காரணமாக புல்லட் ரயில் திட்டத்துக்கு 0.1% சதவீத வட்டியில் கடன் பெற்றது

  294 தமிழ்நாட்டில் கமுதியில் உலகிலேயே பெரிய சூரிய ஒளி மினசார பூங்கா அமைத்தது ,அணு மின் நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடிய கூட்டம் இதற்க்கு பாராட்டு தெரிவித்து இருக்க வேண்டாமோ ??

  295 இந்திரா காந்தி ஆட்சி காலத்தை விட அதிக மக்கள் ஆதரவை பெற்று அதிக மாநிலங்களில் ஆட்சி செய்வது

  296 டோக்லாம் பிரச்னையை சரியான விதத்தில் கையாண்டது

  297 தென் கிழக்கு ஆசியா நாடுகளின் 10 தலைவர்களை 2018 குடியரசு தின சிறப்பு விருந்தினர்ளாக அழைத்து இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றியது

  298 ஜன் Jan Aushadhi திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்துடன் கூடிய இந்தியாவிலேயே முதல் மருத்துவமனை கோவையில் துவங்கப்பட்டது

  299 Beti Bachao Beti Padhao Scheme பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்

  300 கடைசியாக அரசாங்கத்து கெட்ட பெயர் வரும் என்று தெரிந்தும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிபொருளில் விலை இறக்க உதவி செய்யாமல் ,வரும் தேர்தலுக்காக வேலை செய்யாமல் நாட்டின் இறக்குமதியை அதாவது மக்களின் உபயோகிப்பை குறைக்க விலை குறைக்காமல் இருந்தது ,நாடே முக்கியம் ஆட்சி அல்ல என்று இருக்கும் ஒரே தலைவர்

  நமது குடியிருப்பு இருக்கும் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் கூட அதை சரி செய்ய மோடி அவர்களால் சரி செய்ய முடியும் என்று நினைக்க வைத்த மோடி மீண்டும் வர வேண்டும்

  நாளைய தலைமுறை நன்றாக இருக்க ,இந்துக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் இந்த நாட்டில் பாதுகாப்பாக,அமைதியாக இருக்க ,உலகத்தில் தீவிரவாதம் வேரறுக்க ,ஊழல் இல்ல அரசு அமைய ,கருப்பு பணம் மற்றும் சந்தை அடியோடு ஒழிக்க ,சர்வதேச நாடுகளில் இந்தியாவின், இந்தியர்களின் மதிப்பு உயர ,இதுவரை எடுத்த பல நல்ல நடவடிக்கைகள் தொடர முன்னேற்றம் பெற மீண்டும் “நரேந்திர தாமோதர் தாஸ் மோடி” அவர்களை முன்னிலும் பலமான பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்

  நன்றி !!!!!!!!!!

  ~ தொகுப்பு:  ஏ.ஏ.பாலாஜி, ( A.A.Balaji)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,577FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-