December 3, 2021, 10:17 am
More

  வைகோ.,வின் பழைய பேச்சுகளால்… திமுக., கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள்!

  vaiko pic - 1

  தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்புத் தலைவர் என்றால் அது வைகோதான் என்று ஆகிவிட்டிருக்கிறது.

  மதிமுக., பொதுச் செயலர் வைகோ., துவக்க காலத்தில் திமுக.,வில் கொடிகட்டிப் பறந்தவர். மு.க.ஸ்டாலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்ற காரணத்தால் கொடி இறக்கப்பட்டு, திமுக.,வை விட்டு மு.கருணாநிதியால் அடித்துத் துரத்தப் பட்டவர். அப்போது முதல் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, திமுக.,வில் கருணாநிதி குடும்பத்தின் செல்வாக்கை முற்றிலும் நாசம் செய்வேன், திமுக.,வை கருவறுக்காமல் விடமாட்டேன் என்று சூளுரைத்து அரசியல் செய்து வந்தார்.

  ஆனால் பின்னாளில் திமுக,.,வுடனேயே ஐக்கியமாகிவிடும் அளவுக்கு தன் அரசியல் வாழ்க்கையில் படுதோல்வியை சந்தித்துவிட்டவர் வைகோ.,! அதற்காக இவர் பலி கொடுத்தது அப்பாவி தொண்டர்களின் உயிர்களை!

  மேடைக்குக் கீழே இவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தொண்டன் உணர்ச்சி தினவெடுக்க உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு மூளைச் சலவைக்கு உள்ளாகிவிடுகிறான். ஆனால் எதுவுமே நடக்காதது போல் தற்போது, திமுக.,வுடன் கைகோத்துள்ள வைகோ., இந்தத் தேர்தல் முடிந்ததும் தனது கட்சியை திமுக., வுடன் இணைத்து, தனது கட்சியில் உள்ள மறுமலர்ச்சியை வீழ்ச்சி அடையச் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  vaiko rajini daughter marriage1 - 2

  இந்நிலையில், கடந்த தேர்தலில் திமுக.,வுக்கு எதிராக நின்ற போதும், அதற்கு முன்பும் வைகோ பேசிய பேச்சுகள் தற்போது இணையங்களில் உலா வருகின்றன. அவ்வளவு பழைய வீடியோக்கள் கூட இல்லை… அண்மைக் கால அதுவும் ஓரிரண்டு வருடங்களுக்கு முந்தைய வீடியோக்கள் என்பதால், இந்த முறை வைகோ.,வை வெச்சி செய்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

  திமுக., மட்டுமல்லாமல், ஈழத் தமிழரைக் கொன்ற கட்சி என்று காங்கிரஸையும், உடன் இருந்தே கொன்ற கட்சி என்று திமுக.,வையும் தொடர்ந்து மேடைகளில் பேசி வந்தார் வைகோ. அவரது பேச்சுகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

  திமுக., கூட்டணியை அசைத்துப் பார்க்கும் வைகோ.,வின் பேச்சுகளை இப்போது ஒரு தரப்பினர் யுடியூப் உள்ளிட்ட இணையதளங்களில், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகம் வெளியிட்டு வருகின்றார்கள்.

  sadhik basha - 3

  குறிப்பாக, சாதிக் பாட்சா மர்ம மரணம் குறித்து வைகோ கூறிய குற்றச்சாட்டுகள் இன்றளவும் மக்கள் மனத்தில் நீங்காமல் உள்ளது. அதை உறுதிப் படுத்துவது போல், 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்ஷா நினைவு நாளான நேற்று அவர்களின் குடும்பம் வெளியிட்டுள்ள நினைவஞ்சலி செய்தியில், கூடா நட்பு கேடாய் முடியும் என்று குறிப்பிட்டு… சாதிக் பாட்சா மரண விவகாரத்தில் ஸ்டாலினுக்கு உள்ள தொடர்புகளை அம்பலப் படுத்தும் வைகோ.,விடம் உள்ள ரகசிய கோப்புகளை தூசு தட்டச் சொல்லி விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்!

  நேற்று வரை ஸ்டாலினை கொலைகாரன், கொள்ளைக் காரன் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, இன்று ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்காக ஒட்டுமொத்த புரட்டையும் ஒட்டுமொத்தமாகத் தலைபுரண்டு புரட்சியையும் ஏற்படுத்தியிருக்கும் திராவிட இயக்கத்தின் மழுங்கிப் போன போர்வாள் வைகோ.,வை மீம்ஸ்களில் இணைத்து பொருமித் தள்ளுகிறார்கள் தமிழன் ரத்தம் உடம்பில் ஓடும் உண்மைத் தமிழர்கள்! அவற்றில் ஓர் உதாரண மீம்ஸ் இது..

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-