Home சற்றுமுன் பொள்ளாச்சி வீடியோ தொடர்பில் நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன்!

பொள்ளாச்சி வீடியோ தொடர்பில் நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன்!

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி காவல் துறை ‘நக்கீரன்’ கோபாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம், பொருள்களைப் பறித்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை பொள்ளாச்சி காவல்துறை கைது செய்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பலர் இருப்பதாகவும் இது பெரிய நெட்வொர்க் என்றும் கூறி, சமூகத்தில் அதிர்ச்சி அளிக்கும் பல வித தகவல்களை வீடியோவாக பதிவு செய்து, பெண்கள் குறித்த வீடியோக்களையும் வெளியிட்டார் திமுக., சார்பு ஊடகமான நக்கீரனை நடத்தி வரும் கோபால்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”34″ order=”desc”]


மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும், இந்த கும்பல் சுமார் 7 வருடங்களாக பெண்களை மிரட்டி வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை வாய்க்கு வந்தபடி அவிழ்த்து விட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு நக்கீரன் கோபால் கோடிக்கணக்கில் திமுக.,விடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்ததாகவும், வேண்டுமென்றே அதிமுக.,வினரை இந்த விவகாரத்தில் இழுத்து விட்டு, திமுக.,வுக்கு கூலி வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள ரகசிய வீடியோக்களுடன், தன்னிச்சையாக மனம் போன போக்கில் உண்மைத் தன்மையோ ஆதாரமோ சிறிதும் இல்லாமல் பொய்த் தகவல்களுடன் கூடிய வீடியோவை வெளியிட்டது தொடர்பான விசாரணைக்கு வரும் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், நக்கீரன் கோபால் மற்றும் தேனி கண்ணன் இருவரும் வரும் 25ஆம் தேதி கோயம்புத்தூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

அதில் பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாகவும், அது தொடர்பான ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது.

முன்னதாக கிரைம் பிராஞ்ச் போலீஸார் அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல், வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினார் நக்கீரன் கோபால் என்பது குறிப்பிடத் தக்கது.


[poll id=”12″]


 

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version