October 18, 2021, 4:25 pm
More

  ARTICLE - SECTIONS

  இலங்கையில் முதலீடு செய்யுங்கள்! ஓர் இந்திய நிறுவனமாக!

  jagathratchagan - 1

  நிலக்கரி ஊழல்.200 கோடி வருமான வரி ஏய்ப்பு. கணக்கில் வராத 5 கோடி.பல கல்விக் கடைகள்.இலங்கையில், தனது குடும்பத்தினர் நிர்வகிக்கும் சிங்கப்பூர் நிறுவனத்தின் மூலம், சீன அரசுக்கு ஆதரவான,$1.9பில்லியன் ஹம்பந்தோட்ட துறைமுகக் கட்டுமான ஒப்பந்தம்.ஜெகத்ரட்சகன் குடும்ப நிறுவனம் தொடர்புடையது.

  இலங்கையின் வளர்ச்சியில் முதலீடு செய்யுங்கள். அதை ஏன் ஒரு இந்திய நிறுவனமாகச் செய்யக் கூடாது? சிங்கப்பூர் நிறுவனத்தில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் பங்குதாரர்கள். ஆக, சிங்கப்பூர் நிறுவனத்தின் ஷேர் கேப்பிடலுக்கான Source of Fund என்ன என்னும் கேள்வி எழுகிறது.அந்த நிறுவனம் Incorporate செய்யப்பட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டால் இன்னும் பல கேள்விகள் எழுகின்றன.

  அப்போதெல்லாம் கார்த்தி சிதம்பரம் அடிக்கடி சிங்கைவந்து செல்வதுண்டு.அவரது Forex நிறுவனம் மூலம் இந்தியப் பண வீழ்ச்சியைமூலதனமாக்கினார்கள்என்னும் குற்றச்சாட்டு நிலவிய நேரம் அது.கார்த்தி சிங்கப்பூர் வரும் பொதெல்லாம் வாத்ராவானவர் துபாய் சென்றார்.இருவரும் அதிக அளவில் Forex Trading செய்தனர் என்னும் குற்றச்சாட்டும் எழுந்தது.

  அதேநேரத்தில் Vasan Eye Care நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியைஅடைந்தது.சிங்கப்பூர் நிறுவனங்களின் FDI 100மில்லியன் டாலர் Vasan Eye Careற்குக் கிடைத்தது.அந்த நேரத்தில் சில சிங்கப்பூர் நண்பர்களிடம் நான் இதைப் பற்றிப் பேசியும் இருந்தேன்.’இருக்காது சார்.சிதம்பரம் Finance Minister. அவர் தொடர்பான கம்பெனி தப்பானதாக இருக்காது’என்றனர்.

  சிங்கப்பூர் அரசின் GIC – Government Investment Corporation – எப்படி 100மில்லியன் டாலர் போட்டது என்று அப்போது வலைத்தளத்தில் தேடினேன்.’இந்தியர்கள் அடுத்த 15ஆண்டுகளில் உடல் எடைகூடியவர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு இதனால் நீரிழிவு நோய் ஏற்படும்.அது தொடர்பான கண் நோய் (Diabetic Retinopathy)ஏற்பட வாய்ப்புள்ளது.அதற்கான மருத்துவத்தில் நல்ல லாபம் உண்டு.இதனால் Vasan Eye Careற்கு லாபம் கிடைக்கும்.எனவேஇது நல்ல முதலீடு’என்று சொல்லியிருந்தது.

  பின்னர் Vasan Eye Care நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு,Money Laundering என்று பல பிரச்னைகளில் சிக்கியுள்ளது அறிந்ததே.

  GIC நல்ல முதலீட்டு நிறுவனம்.சிங்கப்பூருக்கு இதன் பல முதலீடுகளால் நல்ல வருமான கிடைத்துள்ளது. ஆனால் நல்ல நிறுவனங்களையும் தவறான முதலீடுகளைச் செய்ய வைத்தால் பாரதத்தின் முதலீட்டுத் தரம் என்னவாகும் என்னும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத அரசியலாளர்கள் இருக்கும் வரையில்…

  GIC மட்டுமன்று.வேறெந்த Sovereign Wealth Fundஆக இருந்தாலும்,தனது நாட்டிற்கு நல்ல பணவரவு இருக்குமாயின்,இவ்வாறேசெய்யும்.தற்போது Saudi Arabia, Abu Dhabi முதலிய நாடுகளின் SWFகளும் பல நல்ல முதலீடுகளைச் செய்துள்ளன.இந்த முதலீட்டு நிறுவனங்கள் ஏமாந்தால் மீண்டும் வரமாட்டார்கள்.இழப்பு இவர்களுக்கல்ல.பாரதத்துக்கே.

  சரி.இலங்கையில் நடந்துள்ள முதலீட்டுக்கு வருவோம்.

  இந்திய நிறுவனமாகவேமுதலீடு செய்தால் Source of Fund காட்ட வேண்டும்.வெளி நாட்டுநிறுவனமாக முதலீடு செய்தால் வெளியில் தெரியாது என்னும் எண்ணமோயென்னவோ.தேர்தல் கமிஷனிடம் இந்த நிறூவனம் பற்றிச் சொல்லியுள்ளாராஎன்று ஆராயலாம்.

  உண்மையாகத் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள அரசியலாளராக இருந்தால் ஜெகத்ரட்சகன் தனது இலங்கைமுதலீட்டைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். கொஞ்சம் நஞ்சம் ஆன்மீக நாட்டம் உள்ள திராவிடக் கட்சியாளர்.செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.

  இந்த அழகில் ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையம் ..கொஞ்சம் நெருடல் தான்.

  Disclaimer:2006-7ல்திரு.ஜெகத்ரட்சகனிடம் நல்ல காரியம் ஒன்றிற்காகப் பணவுதவி வேண்டியிருந்தோம்.அவரும் செய்தார்.

  • ஆமருவி தேவநாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,564FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-