― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்செங்கோட்டையில் முதலாவது வேதாங்க பரிச்சய மாநாடு!

செங்கோட்டையில் முதலாவது வேதாங்க பரிச்சய மாநாடு!

- Advertisement -

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு – நடைபெறுகிறது.

இது குறித்து செங்கோட்டை ஸ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ராமசந்திரன் இது குறித்து கூறியதாவது…

ஸ்ரீ சாரதாம்பாளின் அருளாலும், ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரரின் அருளாலும் நம் ஸ்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சன்னிதானம் ஸ்வாமிகள் அனுக்ரஹத்தாலும், செங்கோட்டையில், ஸ்ரீ பாரதி தீர்த்த பாடசாலையில், மார்ச் 24 ம் தேதி நமது முதலாவது ‘வேதாங்க பரிச்சய சம்மேளனம்’ (மாநாடு) நடைபெற இருக்கிறது.

உலகம் முழுவதிலிருந்தும் வரும் முக்கியமான வேத அறிஞர்களும், மெட்ராஸ் சம்ஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் முல்லைவாசல் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும் இதற்குத் தலைமை தாங்குகிறார்கள்.

தஞ்சாவூரில் இயங்கும் இந்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சகத்தின் தெற்கு மண்டலப் பாரம்பரிய மையத்தின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது.

இந்த மாநாடு எதைப் பற்றியது என்றால், “ஷடங்கம்” என்பது வேதங்களின் ஆறு அங்கங்களைக் குறிக்கிறது. வேதங்களுக்கு அடுத்து இவையே நமக்கு முக்கியமானவை. ஹிந்து மதத்தின் அடிப்படை !

ஷட் என்றால் ஆறு. வேதம் ஆறு அங்கங்களைக் கொண்டவை. அவையே ஷ்ட் அங்கம் எனப் படும். அவை:

  1. சீக்ஷா – அக்ஷரங்கள் – வேத புருஷனின் மூக்கு
  2. வ்யாகரணம் – இலக்கணம் – வேத புருஷனின் வாய்
  3. ந்ருக்தம் – அகராதி – வேத புருஷனின் காது
  4. கல்பம் – சடங்குகளின் கையேடு – வேத புருஷனின் கை
  5. சந்தஸ் – யாப்பு/சந்தம் – வேத புருஷனின் பாதம்
  6. ஜ்யோதிஷம் – ஜோதிடம் – வேத புருஷனின் கண்

மேலும், மீமாம்ஸா மற்றும் தர்ம சாஸ்திரம் ஆகியவை குறித்த அறிமுகமும் வழங்கப்படும்.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாகச் சொல்ல வேண்டுமென்றால்…  திருநெல்வேலி மாவட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்மேளனம் சமீப காலங்களில் இப்போதுதான் முதல்முறையாக நடத்தப்படுகிறது. எங்கள் பாடசாலை நடத்தும் முதல் பெரிய சம்மேளனம் இதுதான். இதில், இந்தியா முழுவதிலும் இருந்து வேத பண்டிதர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த சம்மேளனத்தின் நோக்கம் என்ன?

ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகளின் உத்வேகமூட்டும் வார்த்தைகளில் சொல்வதென்றால், முன்பைப் போல பெரும்பாலான பாடசாலைகளில் சடங்கம் பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகளின் அறிவுறுத்தலின் படி, முதல்முறையாக, ஷடங்கம் பற்றிய பாடத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.

வழக்கமான வேத பாடத்துடன் (ஸ்வ ஷாகை) அனைத்து வித்யார்த்திகளுக்கும் ஆச்சாரியர்களுக்கும், ஷடங்கம் நம் பாடசாலையில் கற்றுத் தரப்படும்.

இதைப் படித்துப் பட்டம் வாங்கும் வித்யார்த்திகள் ஷடங்க விற்பன்னர்களாக வருவார்கள் என்று நம்புகிறோம். இதற்கான தொடக்கமே இந்த சம்மேளனம்.

இந்த சம்மேளனத்தின் நேரடி இணைய ஒளிபரப்பைப் பாருங்கள். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

வேதம் கற்க இப்படி ஒரு வாய்ப்பு செங்கோட்டையில் ஸ்ரீ பாரதி தீர்த்த பாடசாலையில் உள்ளது என்பது இங்குள்ள வைதீகர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியட்டும். https://sbtveda.com, https://sbtveda.com/vedanga.html என்ற தளங்களிலும் தகவல்கள் பெறலாம். 9840267321  என்ற எண்ணிலும், [email protected] என்ற இமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம். .. என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version