October 16, 2021, 10:40 pm
More

  ARTICLE - SECTIONS

  விண்கலத்தை சுட்ட ரகசியத்தை வெளிப்படுத்தி… பாகிஸ்தானுக்கு பாஜக., துரோகம் செய்து விட்டதோ?!

  14 June11 P Chidambaram 1 - 1

  விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ரகசியத்தினை பா.ஜ.க. அரசு வெளியிட்டது துரோகம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

  விண்வெளியில் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

  இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என்றார்.

  இந்நிலையில், பாகிஸ்தான் பாசத்தில் தீவிரமாக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். ஆனால் பா.ஜ.க. அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே காரணம் என்று தெரிவித்திருந்தார்.

  இவ்வாறு, செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை வடிவமைக்க அண்மைக் காலத்தில்தான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் வேகப் படுத்தப்பட்டு இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் கூறியிருந்தார்.

  இந்நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விஞ்ஞானிகளின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு பதிலாக, அதில் ஆயிரம் கேள்விகள் எழுப்பி, கேலிக்கூத்தாக்கி வருகின்றனர் காங்கிரஸார். குறிப்பாக, ராகுல் காந்தி மற்றும் பலர், பாகிஸ்தான் மீது தங்களுக்கு உள்ள அதிதீவிர பாசத்தை வெளிப் படுத்துவதற்காக, நம் நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை ஏற்றுக் கொள்ளக் கூட மறுக்கின்றனர்.

  இதை மனத்தில் கொண்டு தான், விண்வெளி செயற்கைக் கோளை விண்ணில் சுட்டு வீழ்த்தும் ரகசியத்தை வெளியில் சொல்லி, பாஜக., அரசு பாகிஸ்தான் அரசுக்கு துரோகம் இழைத்து விட்டதை ஜீரணிக்க முடியாமல் ப.சிதம்பரம் புலம்பித் தள்ளுகிறார் என்கின்றனர்.

  சொந்த நாட்டின் விஞ்ஞானிகள் சாதனையை, ராணுவத்தின் சாதனையைக் கூட தங்கள் மனத்தளவில் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், ஆட்சியில் இருந்த காலத்தில் மட்டும் எப்படி இவற்றுக்கு அனுமதி கொடுத்திருப்பார்கள் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்!

  எங்கே நாம் இது போன்ற சாதனைகளைச் செய்தால் அது பாகிஸ்தான் நாட்டின் மனதை புண்ணாக்கி விடுமோ, அதனால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் புண்பட்டு விடுவார்களோ என்று எண்ணும் இஸ்லாமிய மதச் சார்புக் கட்சி இனியும் ஆட்சிக்கு வரவேண்டுமா என்பதை சிந்தியுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர் பலர் .

  1 COMMENT

  1. ஆமாம் . சீனா அமெரிக்கா ரஷ்யா கூட அவர்கள் நடத்திய இதே மாதிரி சோதனையை வெளிப்படுத்தி அவர்கள் நாட்டு ரகசியத்தை முன்பே அம்பலபடுத்தி தேசத்துரோகம் செய்தது. காங்கிரஸ் மட்டும்தான் உலகிலேயே எல்லாவற்றையும் ரகசியமாக வைத்து அடைகாத்து ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் தீவிர கண்டனத்தை வெளிப்படையாகவும், பல surgical stirkes பாகிஸ்தானுக்கே தெரியாமல் பாகிஸ்தானில் நடத்தி கோடிக்கணக்கான தீவிரவாதிகளை பாகிஸ்தானிலும் உள்நாட்டிலும் அழித்து சாதனை படைத்தது. அந்த தீவிர நடவடிக்கையின் பொது ஏற்பட்ட தலை காயம்தான் பாவம் சிதம்பரத்தை குழம்ப செய்து விட்டது

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-