September 28, 2021, 2:02 pm
More

  ARTICLE - SECTIONS

  சனாதனத்தை வேரறுக்க நீங்களும் ஆலோசனை நடத்துகிறீர்களா.. தீட்சிதர்களே!

  thirumavalavan - 1

  சிதம்பரம் கோவிலில் திருமாவளவனுக்கு ஆலய  பாரம்பரிய மரியாதைகள் அளித்து, தீட்சிதர்கள் நடந்த விதம் குறித்து, இந்து உணர்வாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

  திருமாவளவன் சிதம்பரம் தில்லை நடராஜன் கோயிலுக்குச் செல்வதோ, தீட்சிதர்கள் அவருக்கு மரியாதை செய்ததோ இது புதிதல்ல. கடந்த முறை இதே போன்று சிதம்பரம் தொகுதியில் நின்ற போது, நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் அவருக்கு கோயில் மரியாதை அளித்து அவருக்கு ஆதரவு காட்டினார்கள்.

  அப்போதும் தீட்சிதர்களின் செயல்பாடு குறித்து பலமாக விமர்சிக்கப் பட்டது. ஆனால் இந்த அளவுக்கு அல்ல. காரணம், அண்மைக் காலத்தில் திருமாவளவனின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க ஹிந்து விரோத, சனாதன விரோத நிலைக்குச் சென்றுவிட்டதே என்பதுதான்!

  முன்னர் இஸ்லாமியக் கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, இந்து தலித் சமூகத்தை ஒரு லம்ப்பான அமவுண்டுக்கு பேரம் பேசி,  விற்று விடுவார். அவர் கைகாட்டிய பலர் மூளைச் சலவை பெற்று, இஸ்லாத்துக்கு மாறியிருக்கின்றனர். பட்டியலினத்தவருக்காக எந்த விதத்திலும் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டிருக்காத திருமாவளவன், கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம், பெண்கள் தொடர்பில் மூளைச் சலவை செய்து சமூகங்களுக்கு இடையே விரோதத்தை வளர்த்தல் என்ற அளவில்தான் ஈடுபட்டிருந்தார்.

  ஆனால் தற்போது கூடவே சனாதனத்தை வேரறுப்போம் என்று பெரும் தொகை பெற்றுக் கொண்டு மாநாடுகளை நடத்தி, சனாதன மதத்தின் மீது காழ்ப்பையும் வெறுப்பையும் உமிழ்ந்து, தீராப் பகையை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில், திருமாவளவனுக்கு எதிராக ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் திரும்பியிருக்கும் நேரத்தில், தீட்சிதர்களும் கோயில் ஊழியர்களும் சனாதன தர்மத்தை கட்டிக் காக்கும் சிதம்பரம் கோயில் நிர்வாகமும் திருமாவளவனை வரவேற்று அளவளாவியிருப்பது, பலருக்கும் கடும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது! இதில் அவர்களின் நியாயத்தை நாம் உணர வேண்டியுள்ளது.

  நியாயப் படி பார்த்தால், சனாதனத்தை வேரறுப்போம் என்று கூவிக் கொண்டிருந்த திருமாவளவன், சிதம்பரம் கோயில் வாசல் படியை மிதிக்கும் போதே உடலில் கூச்ச நாச்சம் ஏற்பட்டு, திரும்பிப் போயிருக்க வேண்டும்.! தங்கள் மீதும் தங்கள் திமுக., கூட்டணியின் மீதும் விழுந்துள்ள இந்து விரோத முத்திரைக் களங்கத்தை துடைத்தெறிய வேண்டுமென்றால், சனாதனத்தை வேரறுப்போம் என்ற மாநாட்டை நடத்தியிருக்கக் கூடாது.  அப்படி ஒரு கருத்தோட்டத்தையும் விதைத்துவிட்டு, கோயிலுக்குள் காலடி வைப்பது பச்சைத் துரோகம்! கோயிலுக்கு மட்டுமல்ல, தான் மேடையில் முழங்கியவற்றுக்கும் செய்யும் பச்சைத் துரோகம்!

  இந்து மதம் எல்லோரையும் அரவணைத்திருக்கிறது. சுவாமி சகஜானாந்தர், கேரளத்து நாராயணகுரு என பலர்… சனாதன தர்மத்தில் கடைப்பிடிக்கப் பட்ட ஏற்றத்தாழ்வு கண்டு பொங்கி எழுந்து, தங்களுக்குள் தங்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் கௌரவத்துக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தனர்.

  சிவன் இருக்கும் கோயிலில் என்னை விடவில்லை என்றால், உன் சிவனை என் கோவிலில் குடிஅமர்த்துகிறேன் என்று சொல்லி, தங்கள் சமுதாய மக்களுக்காகவே கோயில்களை கட்டி, அந்தக் கோயில்களில் சிவபெருமானை அமர்த்தி பூஜித்தார். சுவாமி சகஜானந்தரோ பட்டியலின சமூகத்தின் மேன்மைக்காகவும் மரியாதைக்காகவும் இன்னும் பல படி உயர்ந்து நின்றார். இவர்கள் எவருமே தங்கள் சமுதாயத்து மக்களை, கிறிஸ்துவ சர்ச்சுகளுக்கோ இஸ்லாமிய குழுக்களுக்கோ பேரம் பேசி விற்பனை செய்யவில்லை! சொல்லப் போனால் அவர்களின் கழுகுப் பார்வையில் இருந்து தங்கள் சமுதாயத்து மக்களைக் காத்து நின்றார்கள்.

  அவர்களின் நெற்றியில் திருநீறு துலங்குவது, அந்தத் திருநீற்றுக்கே பெருமை! ஆனால், திருமாவளவன் போன்றவர்களின் நெற்றியில் திருநீற்றைப் பூசுவது, சிவனடியார்களின் மதிப்பைக் குலைத்து, திருநீற்றின் மகிமையை கேவலப்படுத்தும் செயலன்றி வேறில்லை!

  இனி எந்த முகத்துடன் இதே தீட்சிதர்களிடம் திருநீறு கேட்டு சாதாரண தன்மான உணர்வுள்ள இந்து தன் நெற்றியைக் காட்டுவான்? கையை நீட்டுவான்?!

  சரி.. அப்படி என்றால் என்ன செய்திருக்க வேண்டும்! தீட்சிதர்கள் திருமாவளவனை கோயிலுக்குள்ளேயே விட்டிருக்கக் கூடாது என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?! அப்படியும் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும்.

  பிறகு, மதுரையில் செல்லூர் ராஜூ ஒரு மசூதியில் இஸ்லாமிய தலைவர்களுடன் சென்று வாக்கு சேகரித்த போது, அவர்களை அங்குள்ளவர்கள் உள்ளே விடாமல் துரத்தி அடித்தனர். அதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

  அதற்கும் இப்போது தீட்சிதர்கள் செய்யச் சொல்வதற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்வி எழக் கூடும். ஆனால், இஸ்லாமியர்கள் குற்றம் சொல்வதோ எந்த விதத்திலும் பொருந்தாத குற்றச்சாட்டுகள். வெறுமனே மத ரீதியாக அல்லாமல், வேற்று நாட்டின் துர்பிரசாரத்துக்கு மதி மயங்கிச் செய்யும் நாட்டு நலனுக்கு விரோதமான செயல்பாடுகள். பாஜக.,வில் முஸ்லிம்கள் இல்லையா? மோடி எந்த விதத்தில் இஸ்லாமியருக்கு மட்டும் என தேர்ந்தெடுத்து கெடுதல் செய்தார்?! இஸ்லாமியரை நசுக்குவதற்கு என்று ஏதாவது செய்தாரா?!

  எல்லாவிதத்திலும் நாட்டு மக்களை ஒன்றாகக் கருதித்தான், அனைவரும் சமம் என்ற பாரபட்சமற்ற நிர்வாகத்தைத்தான் மோடி வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.  முத்தலாக் விவகாரம், இஸ்லாமிய ஆண்கள் வெகுசிலருக்கு பாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் எத்தனையோ ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெண்களுக்கு அது பாதுகாப்பாக இருந்திருக்கிறதே! எந்த ஒரு சூழலில் இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் விரோதிகள் என்றோ, அவர்களை வேரறுக்க வேண்டும் என்றோ ஏதாவது ஓர் இடத்தில் சொன்னதுண்டா? அல்லது அப்படி ஒரு கொள்கையைத்தான் எங்காவது வெளிப்படுத்தியதுண்டா!? இஸ்லாமியரும் இந்தியரே, இந்தியக் குடிமகனே என்ற அளவில்தான் அனைவருக்குமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  ஆனால், திருமாவளவனின் செயல்பாடுகள் அப்படியானதல்ல! குறிப்பாக குறிவைத்து, ஒரு சமுதாயத்தை அழித்தொழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஒருபுறம் சனாதன வேர் அறுப்பு, மறுபுறம், வேற்று இனத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக காதலித்து இழுத்து வருவது..! அவரது செயல்பாட்டுக்கும் லவ் ஜிஹாத் எனும் இஸ்லாமிய இயக்கங்களின் திட்டமிட்ட மதமாற்றத்துக்கும் எந்த வேறுபாடுமில்லை!

  இந்த நிலையில், தீட்சிதர்கள் நிச்சயம் திருமாவளவனைப் புறக்கணித்திருக்க வேண்டும்! அதற்காக கோயிலுக்கு உள்ளேயே புக விட்டிருக்கக் கூடாது என்பதல்ல! கோயில் அனைவருக்கும் பொதுவானது! எவரும் வரலாம்! ஆனால், தீட்சிதர்களின் கட்டுப் பாட்டில் உள்ள கோயிலில், யாருக்கு மரியாதை தருவது கூடாது என்பதை தீர்மானிக்கும் உரிமையும் அருகதையும் தீட்சிதர்களுக்கு உண்டல்லவா?! எவர் உங்களை கட்டுப் படுத்தியிருக்க முடியும்! நாங்கள் திருமாவளவனுக்கு கோயில் மரியாதைகளைக் கொடுக்க மாட்டோம்! அவர் சாதாரண நிலையில் கோவிலுக்கு வருவதை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று சொல்வதற்குக் கூடவா தீட்சிதர்களுக்கு திராணி அற்றுப் போயிருக்கிறது?! கோயில்களைக் காப்பதற்கு எத்தனை தியாகிகள் தங்கள் உயிர்களை விட்டிருக்கின்றனர்! அவர்களை எல்லாம் படித்தும் அறிந்தும் கொண்ட உங்களில் ஒருவருக்குக் கூடவா இதனை மறுப்பதற்கோ எதிர்ப்பதற்கோ மனமில்லாமல் போயிருக்கிறது?! பிறகு எப்படி இந்து சமூகம் உங்களை மதிக்கும்?!

  சொல்லப் போனால் இப்போது சனாதன வேரறுப்பு மாநாட்டை தீட்சிதர்கள் திருமாவளவனை வைத்து தங்கள் இடத்திலேயே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! இந்தப் பாவம், எத்தனை முறை தில்லை நடராஜனை அபிசேகம் செய்தாலும், நீறு பூசி தங்கள் பாவத்தை நெருப்பிலிட்டாலும் அது நசித்துப் போகாது! புகையாய்க் கிளம்பி உள்ளுக்குள் சுற்றிக் கொண்டே இருக்கும்!

  1 COMMENT

  1. தீட்சிதர்கள் குடுமி இப்போது திருமா அவர்களின் கையில் என்றாகி விட்டது படு கேவலம்.

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-