October 20, 2021, 12:11 am
More

  ARTICLE - SECTIONS

  அப்துல் கலாமை அவமதித்த கயவர்கள்! திராவிட திருட்டு கும்பல்!

  kalam modi - 1கனவுகளை கலைத்து அப்துல்கலாமை அவமதித்தவர்கள்! நாடே போற்றும் அப்துல்கலாமை அவமதித்தவர்கள் உண்டெனில் அது  சோனியா காந்தியும் கருணாநிதியும் தான்!

  2007 ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட விரும்பிய பொழுது அன்றைய ஆளும் கட்சியான காங்கிரசின் தலைமைபீடமான சோனியா காந்தியினால் தடுக்கப் பட்டு இந்திராகாந்தி குடும்பத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும், சொல்லப் போனால் சோனியா வீட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வீட்டு வேலை பார்த்த பிரதீபா பாட்டீல் என்ற மகாராஸ்டிர பெண்மணிக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப் பட்டது. இதை விட இந்த நாடு வேறு கேடு கெட்டத் தனத்தை சந்திக்க முடியுமா? அதையும் செய்து பார்த்தது இந்த காங்கிரஸ்

  திமுக நினைத்திருந்தால் அன்று காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அப்துல்கலாமை முன்னிறுத்தி இருக்க முடியும். ஆனால் குடும்ப நலன்களுக்கு முன் நாடாவது கொள்கையாவது.. நாட்டைப் பற்றி வாய் கிழிய மேடை போட்டு பேசும் மற்ற கட்சிகள் அப்துல் கலாமை விட எந்த விதத்தில் பிரதீபா பட்டீல் உயர்ந்தவர் என்று போராடாமல் சொந்த அரசியல் லாபங்களுக்காக அப்துல் கலாம் மீது சோனியாவிற்கு இருந்த வன்மம் நிறைவேற பிரதீபா பட்டேலை தேர்ந்தெடுத்தார்கள்.

  Modi Abdul Kalam - 2

  அப்போது வாய்ச்சாடல் வித்தகர் கருணாநிதி, கலாம் என்றால் கலகம் – என்ற வாசகத்தை முன்மொழிந்து, நாடே போற்றுமொரு தமிழரை அவமதித்தார் கருணாநிதி என்ற தெலுங்கர்!

  தமிழகத்தில் கோவையில் 2010ல் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ்மாநாட்டிற்கு சிறந்த மொழிஅறிஞரும் பார் போற்றும் தமிழரான அப்துல்கலாமை அழைத்து கவுரவிக்காமல் வேண்டுமென்றே அவமதித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

  2012ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மீண்டும் அப்துல் கலாம் பெயர் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மற்றும் சிலரால் பேசப்பட்டபட்ட பொழுது.. “கலாம் என்றால் கலகம்” என்று பொருள் உள்ளது! அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் கலகம் உண்டாகியுள்ளது என்று அந்த உயர்ந்த மனிதரை காயப்படுத்தி மீண்டும் ஒரு சிறந்த ஜனாதிபதியாக மக்களுக்கு நன்மைகளும் பெருமித உணர்வும் கிடைப்பதை தடுத்தவர் திருட்டு முட்டாள் கட்சியின் தலைவர் தில்லு முல்லு கருணாநிதி.

  அப்துல் கலாம் இறந்த போது இந்த நடிகர் கூட்டம் அப்துல் கலாமுக்கு பக்கம் பக்கமாக அஞ்சலி பாடினார்கள். ஆனால் அவர்கள் ஒரு வார்த்தை கூட திமுக., தலைவராக இருந்த கருணாநிதியிடம் இது குறித்துக் கேட்கவில்லை! கேட்டதுமில்லை! 

  நாகரீகம், கண்ணியம் என்ற பெயரில் சில உண்மைகளை நாம் மறைக்காமல் நம் சந்ததியினருக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.

  இந்தியாவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆர் வெங்கட்ராமன் மற்றும் அப்துல் கலாம் இருவரும் ஓய்வுக்கு பிறகு தமிழகத்திலேயே தங்க விரும்பியபோது, வெங்கட் ராமன் அவர்களை பாதுகாப்புக் காரணங்களை காட்டி (புலிகள் அச்சுறுத்தல் என்ற பெயரில்) கிரீன்வேஸ் சாலையில் – இங்கே தங்க விடாமல் திருப்பி அனுப்பியது யார் என்பதை ஒவ்வொரு தமிழனும் யோசிக்க வேண்டும்.

  அதே போல அப்துல் கலாம் ஓய்வுக்கு பிறகு இங்கே அண்ணா பல்கலையின் விருந்தினர் மாளிகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல் முறையாக தங்க வந்த போது மின்சார ஷார்ட் சர்கியூட் என்ற ஒரு நாடகம் ஆடி கலாம் அவர்களை தமிழகத்தில் தங்க விடாமல் திருப்பி அனுப்பியது யார் என்பதையும் மக்கள் தயவு செய்து சிந்திக்கவேண்டும்.

  எந்த கலாம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்து கையொப்பம் இட்டாரோ அவரே அந்த மாநாட்டுக்கு அழைக்கபடாத காரணம் என்ன?

  modi open rameswaram kalam - 3

  தனக்குத்தானே பட்டமும் பாராட்டும் நடத்திக் கொண்ட கேடுகெட்ட தமிழக அரசியல் கலாச்சார நிகழ்வை மக்கள் ஜனாதிபதி கலாம் புறக்கணித்தார். அதன் காரணமாக அருகதை இல்லாதவர்கள் எல்லாம் அவரை அசிங்கப் படுத்தும் அவலம் இந்த தேசத்தில் மட்டுமே நடந்தது.

  கலாம் அவர்கள் இந்த தேசத்தின் ஞானக் குழந்தை. தனது ஞான குருவாக அப்துல் கலாமைப் போற்றி, அவருடைய நல்லடக்கத்துக்கு வந்து, இறுதி மரியாதைகளை உடனிருந்து செய்தார் பிரதமர் மோடி!

  அதுமட்டுமல்ல… கலாம் நினைவாக, பிரமாண்டமாக மத்திய அரசால் பராமரிக்கப்படும் தேசத்தின் அஞ்சலி மையமாக  கலாம் நினைவிடத்தை மிகக் குறுகிய காலத்தில் நிறுவி, அதனைத் திறந்து வைத்து, தமிழர்களின் நெஞ்சில் பெருமையையும் பெருமித உணர்வையும் தோற்றுவித்திருக்கிறார் பிரதமர் மோடி! 

  ராமநாதபுரம் மண் இன்று உலகுக்கு ஒரு உன்னதத் தலைவனின் உழைப்பையும் ஒப்புயர்வற்ற தியாகத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,566FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-