October 24, 2021, 8:29 pm
More

  ARTICLE - SECTIONS

  கழகங்களின் ஆட்சியில் தமிழகம் கண்ட முன்னேற்றம் என்ன?!

  kamaraj karunanidhi - 1திராவிட ஆட்சிகளால் தான் தமிழகம் இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது என்ற ஒரு மிகப் பெரிய பொய்யை, தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்!

  உண்மையில் திராவிடத் திருடர்களின் கைகளில் இந்த நாடு அரை நூற்றாண்டுகள் சிக்காமல் இருந்திருந்தால் – இன்று இந்தியாவிலேயே ஒரு குட்டி ஜப்பானாக, சிங்கப்பூராக மிளிறி இருக்கும்!

  வெள்ளைக்கார கிறிஸ்துவன் கால் வைப்பதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த நமது தமிழகம் – ஆனால், 1906 ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள், 1914-ம் ஆண்டு தொழில் துறை ஒன்றைத் தோற்றுவித்தது .

  குடிசைத் தொழில்களும், சிறு தொழில்களும் பெருகின – சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் பெரிய பஞ்சாலைகள் நிறுவப்பட்டன.

  karunanidhi jayalalitha - 2

  அதற்கும் முன் நம்முடைய மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து இங்கிலாந்தில் இருந்து செய்து முடிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன …

  நம்முடைய வளங்களை அவன் தன்னுடைய நாட்டிற்கு திருடிச் செல்வதற்காக. 1840 ல் முதன் முதலாக சென்னை – அரக்கோணம் என்று ஆரம்பித்து 1900 ஆண்டிற்குள் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களும் இருப்புப் பாதைகளால் இணைக்கப் பட்டன. இன்று இருப்புப் பாதையே இல்லாத மாவட்டமான தேனியில் இருந்து மூணார் வரை கூட இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டன – (அவன் வசதிக்குத்தான்)

  (சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் இன்றும் சென்னை மதுரை இருப்புப் பாதையைக் கூட இரட்டை வழிப் பாதையாக மாற்ற முடியவில்லை)

  அது மட்டுமல்லாமல் சென்னை, தூத்துக்குடித் துறைமுகங்களைக் கூட செப்பனிட்டு பெரிய கப்பல்கள் வந்து போக வசதிகள் செய்யப்பட்டன – சென்னையில் பக்கிம்காம் கால்வாய் போக்குவரத்திற்கென்றே வெட்டப்பட்டது!

  அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில் தான் மண்டபம் ராமேஸ்வரம் இருப்புப் பாதை கடலுக்குள் கட்டப்பட்டது –

  jayalalitha karunanidhi - 3

  தமிழகத்தின் பெரிய அணைகளான முல்லைப் பெரியாறு, பவானி சாகர், மேட்டூர் அணைகள் கட்டப்பட்டன! இவை மட்டுமே இன்றும் கூட தமிழக விவசாயிகளை வாழவைத்து வருகின்றன என்றால் மிகையாகாது!

  அதே போல விடுதலைக்குப் பின் இந்திய தேசிய காங்கிரஸ் (இது இன்றைக்கு இருக்கும் இந்திரா காங்கிரஸ் அல்ல) ஆட்சியில் – 1951-ல் தொடங்கி 1966 வரையிலான மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில்  கீழ்பவானி, மணிமுத்தாறு, காவிரி டெல்டா , ஆரணியாறு, வைகை டேம், அமராவதி, சாத்தனூர் , கிருட்டினகிரி, பரம்பிக்குளம் ஆழியாறு, புள்ளம்பாடி, வீடூர் அணைத்தேக்கம், நெய்யாறு ஆகியவற்றில் பெரிய அணைகள் கட்டி பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு நீர்பாசன வசதிகள் அளிக்கப்பட்டன!

  அது மட்டுமா, சென்னையில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் _ எண்ணூர் அனல் மின்சார திட்டம் – போன்றவை தொடங்கப்பட்டன!

  சேலம் உருக்காலை போன்ற பல பெரிய சிறிய தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு தமிழ்நாடு தொழில் மயமாக மாறியது -அது மட்டுமல்ல, 44, 100 கி.மீ சாலைகளும் உருவாக்கப்பட்டன!

  இந்த உள்கட்டமைப்புகள் தான் தமிழகத்தை இன்று வரை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றன – காமராசர் மட்டும் 30,000 அரசுப் பள்ளிகளை உருவாக்கினார் –
  சுதந்திரத்தின் போது வெறும் 7 சதவீதம் இருந்த கல்வி வளர்ச்சி காமராசர் ஆட்சி முடியும் பொழுது 36 சதவீதமாக மாறியது. – அதன் பின் வந்த திராவிட ஆட்சியாளர்கள் எதையுமே செய்யவில்லையா, கட்டவில்லையா என்று கேட்பீர்கள்~!?

  செய்தார்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்தார்கள் – கட்டினார்கள், தங்கள் குடும்ப, உறவினர்கள் வாழ பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டி கல்வியை மிகப்பெரிய வியாபாரமாக மாற்றினார்கள் !

  30,000 பள்ளிகள் கட்டிய காமராசர் கூட தனக்காக ஒரு நர்சரி பள்ளி கூட கட்டவில்லை!

  balu raja karunanidhi - 4

  ஆனால், ஸ்டாலினின் சன்ஷைன், ஆற்காட்டாரின் சென்னை பப்ளிக் ஸ்கூல் போல ஒவ்வொரு திராவிட திருடள்களும் பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள் – ஒவ்வொரு ஆண்டும் 500, 1000 என்று அரசுப் பள்ளிகள் தற்பொழுது மூடப்பட்டு வருகின்றன- தமிழகத்திற்கு தப்பித்தவறி வரும் தொழிற்ச்சாலைகள் கூட இவர்கள் கேட்கும் 35% கமிஷனுக்குப் பயந்து அண்டை மாநிலங்களுக்கு ஓடி வருகின்றன!

  தப்பித்தவறி வந்து விட்ட ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகள் இவர்களின் போலியாக போராட்டங்களால் மூடப்படுகின்றன- சாலை போட்டால் கமிஷன், பாலம் கட்டினால் ஊழல் என்று இவர்களின் அராஜகத்திற்கு அளவே இல்லை -!

  ஓட்டுப் பிச்சை எடுப்பதற்காக இவர்கள் இலவசப் பொருட்களுக்காக வாரி இறைத்த சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு – சிலப் பல அணைகளைக் கட்டி நீர் பாசனத்தைப் பெருக்கி இருக்கலாம் – சிலப் பல தொழிற்சாலைகளை கட்ட உதவி இருக்கலாம் –
  அட ஒரு, ஐம்பது லட்சம் கக்கூஸாவது கட்டிக் கொடுத்திருக்கலாம் ! எங்கே, தமிழகத்தின் 29 பொதுத் துறை நிறுவனங்களால் இந்த ஆண்டு மட்டும் 74,000 கோடிகள் நஷ்டமாம்!

  இனி யாராவது கழக ஆட்சிகளால் தமிழகம் முன்னேறியது என்று கூறினால் எதனால் வேண்டுமானாலும் அடியுங்கள் -!

  • ந.முத்துராமலிங்கம் –

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,586FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-